Thiruvakkarai vakrakaliamman temple
Thiruvakkarai vakrakaliamman temple
Thiruvakkarai vakrakaliamman temple
இன்றைய ஆலய தரிசனம்;
அருள்மிகு
ஶ்ரீ வக்ரகாளியம்மன் திருக்கோயில்,
(ஶ்ரீ சந்திரமெளலீஸ்வரர்
ஆலய வளாகம்)
திருவக்கரை கிராமம்,
வானூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம். செல்கின்ற வழி என்பது விழுப்புரம் நகரத்திலிருந்து நகர பேருந்து வசதி உண்டு. விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சாலையில் 9 கிலோமீட்டர் சென்று புறவார் பணங்காட்டுர் பழைய பள்ளம் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் செல்ல கோயிலை அடையலாம். மற்ற வழிகள் சுற்றி போக போகிறதாக இருக்கும். பௌர்ணமி விசேஷம் . இந்த கோயிலின் விசேஷம் வக்ரகாளி சன்னதி.வக்ரகாளி தாண்டியே சிவபெருமானை பார்க்க செல்ல வேண்டும். பெருமாள் திங்களுக்காகவும், பிரமுனுக்காக ஒரு முகமும், திருமாலுக்கா ஒரு முகமும், மூன்று முகம் கொண்டிருக்கின்றார்கள். திருவாக்கரை காளியின் சிறப்பால் கோயில் பராமரிக்கப்படுகிறது. திண்டிவனம் தண்டக வனம் என்றும் கூறுகின்றனர்.
( பொதுவாக, காளிக் கோயில் ஊர் எல்லையில்தான் இருக்கும், ஆனால் இங்கே,
ஊரின் நடுவில் ( ‘மாண்புமிகு’ ஆதித்திய சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படும்)
சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிவன்தல ராஜகோபுரத்தின் அருகிலேயே
பிரசித்தி பெற்ற நாயகியாய்,
ஶ்ரீ வக்ரகாளியம்மன் வீற்றிருப்பது
Thiruvakkarai vakrakaliamman temple
தல விசேஷம்.
(தேவார பாடல் பெற்ற சிறப்புமிகு சிவாலயம் என்பதைவிட, திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில் என்பதுதான்
(சிவபக்தர்களைத் தவிர) அநேகம்பேருக்கு
தெரிகிறது.
இத்தலத்தின் வக்ரகாளியாத்தாவை
பற்றி மட்டும், இன்று பதிவிடுவதையெல்லாம்
நேற்றே,
நம் ஈசனய்யனிடம்
சொல்லியாச்சு! சொல்லியாச்சு!)
கருவறையில்,
தீக்கங்குகளைப் பிண்ணனியாக கொண்ட தலை, மண்டை ஓட்டு கிரீடம், கரங்களில் சக்கரம், வாள் போன்ற ஆயுதங்கள் என,
நாம் காணும் வழக்கமான
காளி தோற்றம் கொண்டிருந்தாலும்,
இந்த வக்ரகாளியின்
வலது காதின் வளையத்தில், சிசுவினை (குழந்தையை) அணிந்தவளாய் தோற்றம் கொண்டிருப்பது வித்தியாசமான திருக்காட்சியாகும்.
ஒரு புராண நிகழ்வின்படி;
வக்ராசூரனின் தங்கை ராட்சஸி துன்முகியை, வக்ரகாளி சம்ஹாரம் செய்யும் நேரத்தில், துன்முகி கர்ப்பஸ்த்ரியாக இருந்ததால், தர்மசாஸ்திரப்படி
வயிற்றிலிருக்கும் குழந்தையை
கொல்லக்கூடாது என்ற
நோக்கில், அவள் கருவிலுள்ள குழந்தையை வக்ரகாளி
தனது வலது காதில் அணிந்துகொண்டு அந்த ராட்சஸியை வதம் செய்தபின் இங்கேயே ஆக்ரோஷம் தணியாமல் அமர்ந்துவிட்டதாகவும்,
பின்னர் ஆதிசங்கரர் இத்தலம் வந்து இவளை சாந்த சொரூபிணியாக மாற்ற ஶ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.
பவுர்ணமி (இரவு 12-மணிக்கும்), அமாவாசை (பகல் 12-மணிக்கும்) நாட்களில் வக்காளியம்மனுக்கு
காட்டப்படும்
ஜோதி தரிசனத்தை,
லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி வழிபடுவது காணப்பரவசம்.
ஜாதகத்தில் கிரக, வக்ரதோஷங்கள்
( மற்றும்,
வக்கிர புத்தி)
உள்ளவர்களுக்கு அக்கொடிய தோஷங்கள் நீங்கிடவும், திருமணத்தடை,
வியாபாரத்தடை, உத்தியோகத்தடைகள் நீங்கிடவும், கர்ப்பிணி பெண்களுக்கு நலமான மகப்பேறு கிடைக்கப்பெறவும், கண்திருஷ்டி அகலவும் இத்தல வக்ரகாளியை வழிபடுதல் நிச்சயம்
நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை).
ஓம் சக்தி பராசக்தி
