மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023-2026

 இதுவரை உங்களது தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் ராசியையும் , எழாம்  பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.இந்த சனிப் பெயர்ச்சியில் தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும். உங்களை விட்டு விலகியிருந்த அம்மா வழி சொந்தங்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.  அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, உங்கள் நன்மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். எந்த வயதினருக்கும் புதிதாக ஒரு கல்வியோ, கலையோ பயில வாய்ப்புண்டாகும். சிலருக்கு வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழிலில்  வளர்ச்சி உண்டாகும். பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வேலை செய்யும் மக்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.  உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இனி மேஷ ராசி மக்களின் நல்ல பலன் நடக்கும் காலம் இதூ என்று குறிப்பாக சொல்லலாம்.

Loading