மூல நட்சத்திரம் வாஸ்து காலண்டர் 2.11.2022

2.11.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 04 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி

தினசரி நாள்காட்டி 2.11.2022 #சுபக்கிருது; #ஐப்பசி மாதம்.16ந் தேதி . புதன்கிழமை. இரவு 9.11 மணி வரை நவமி திதி பிறகு தசமி திதி. விடியற்காலை 1.30 வரை அவிட்டம் நட்சத்திரம். பிறகு சதயம் நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

  இன்று பகல்  நாள்  முழுவதும் நல்ல யோகநாள் குறைவு  .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.

27 நட்சத்திரங்கள் சார்ந்த வரிசையில் ஒவ்வொரு நட்சத்திரமாக ஒரு சில கருத்துக்களை கூறி வருகின்றேன். அந்த வகையில் 19ஆவது நட்சத்திரமாக இருக்கக்கூடிய மூலம் நட்சத்திரம் சார்ந்த ஒரு சில கருத்துக்களை இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம். மூலம் நட்சத்திரம் என்பது தனுசு ராசியில் அமைந்திருக்கின்ற முழுஸ நட்சத்திரம். மூலம் நட்சத்திரத்தின் வடிவம் சிங்கம் அல்லது யானையின் துதிக்கை. இந்த நட்சத்திரத்தின் இருப்பிடம் குதிரை லாயங்கள். மூல நட்சத்திரத்தின் அதிதேவதை அசுர தேவதை. மூல நட்சத்திரத்தின் அதிபதி கேது . மூலம் நட்சத்திரம் இருக்கின்ற ராசியின் அதிபதி குரு . மூலம் நட்சத்திரத்தின் அதிபதி கேது என்கின்ற காரணத்தால் யாகம் செய்ய, தீட்சை பெற, மந்திர உபதேசம் எடுத்துக்கொள்ள உகந்த நட்சத்திரம். கேதுக்கு ஞான காரகன், மோட்ச காரகன் என்கின்ற பெயர் உண்டு. மூல நட்சத்திரம் கால புருஷ ராசியில் மேசத்திற்கு ஒன்பதாம் வீட்டில் இருக்கின்றது. ஒன்பதாம் வீடு என்பது ஆலய திருப்பணி, குரு உபதேசம், தீர்த்த யாத்திரை, ஆன்மீகப் பணி போன்ற விஷயங்களை குறிக்கும்.
எனவே மூலம் நட்சத்திரத்தில் ஆலய திருப்பணிகள் தொடங்க, கும்பாபிஷேகம் நடத்த , குரு உபதேசம் பெற, தீர்த்த யாத்திரை செல்ல, நீண்ட தூர பயணங்களை எடுத்துக் கொள்ள சிறந்த நட்சத்திரம்.

கேது என்கிற ஒரு கிரகம் ஆன்மீக கிரகமாக இருக்கின்றபடியால், தீர்த்த யாத்திரைக்கு உகந்த நட்சத்திரம். மூலம் நட்சத்திரம் வரும் நாளில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பாபநாசம் சென்று அங்குள்ள அகத்தியர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால், சகல பாவங்களும் தடைகளும் நீங்கும். மூலம் நட்சத்திரத்தின் அதிபதி கேது என்கின்ற காரணத்தால் , கேது கயிறு குறிக்கும் நட்சத்திரமாக இருக்கின்ற காரணத்தால் திருமணத்தில் முக்கிய அம்சம் தாலிக்கயிறு தான். எனவே விவாகத்திற்கு உகந்த நட்சத்திரம். மூலம் நட்சத்திரத்தின் வடிவம் சிங்கம். யானையின் துதிக்கை ஆக இந்த மிருகங்களின் உருவ அமைப்பில் இருக்கின்ற காரணத்தால், ஆடு, மாடுகள் வாங்க உகந்த நட்சத்திரம்.  மீண்டும் அடுத்த நட்சத்திரம் சார்ந்த பதிவு  வழியாக சந்திப்போம். MOOLA NAKSHATRA LUCKY 

Loading