மரங்கள் வைக்க வாஸ்து | தினசரி தமிழ் நாட்காட்டி 21.5.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

இன்று
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய நாள்காட்டி 21.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
7ந் தேதி சனிக்கிழமை.
மாலை 3.01 வரை தே.சஷ்டி திதி.பிறகு சப்தமி திதி.   நள்ளிரவு 11.34  வரை திருவோணம் நட்சத்திரம்.அதன் பிறகு அவிட்டம்.

இன்றைய
ராகுநேரம்: 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

___________________

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

இல்லங்களில் மரங்கள் வளர்க்க  அது சார்ந்த சாஸ்திரம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம். இந்த இடத்தில் மட்டும்  மரம் செடி கொடிகள் வளர்ப்பது என்பது வாஸ்துவில் சேராது என்றாலும், இல்லத்தில் வைக்கிற காரணத்தால் அது வாஸ்து சாஸ்திர தோடு இணைந்துவிட்டது. அந்த வகையில் செடி, கொடிகள், மரங்கள் என்பது தெற்கு திசை முழுவதும் நன்றாக இயற்கையாக நிழலைக் கொடுக்கும் அமைப்பில் மரங்களை வைக்கலாம். வளர்கலாம். அதே சமயம் மேற்கு பகுதியில் 70 சதவீத அளவிற்கு தென்மேற்கு பகுதியில் இருந்து மரங்களை வைத்துக் கொள்ளலாம். வடக்கு பகுதியில் மேற்கு பகுதியில் 30 சதவீத அளவிற்கு மரங்களை வைத்துக்கொள்ளலாம். கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு தொடங்கி 30 சதவீத அளவிற்கு மரங்களை வைத்துக்கொள்ளலாம். இவை எல்லாம் வீடுகளுக்கும் சுற்றுச்சுவருக்கும் இடைப்பகுதியிலும் அல்லது, பெரிய இடங்களாக இருக்கின்ற வகையில் சுற்றுச்சுவருக்கு வெளிப்பகுதியிலும் தாரளமாக அமைத்துக் கொள்ளலாம். அதேசமயம் வடகிழக்கு மூலையில் எந்த மரங்களையும் வளர்க்க கூடாது. பால் உள்ள மரங்கள் மரங்கள் வளர்க்க கூடாது என்று என்னை போன்ற வாஸ்து நிபுணர்கள்  கூறுவார்கள். ஆனால் வேம்பு, எலுமிச்சை கொலுமிச்சை, ஆரஞ்சு போன்ற  மரங்கள் தாராளமாக வளர்க்கலாம். அதேசமயம் தென்னை மரங்கள் வைப்பதாக இருந்தால் ஒரு தனி மரம் மட்டும் ஆகாது. அரளிச்செடி வீடுகளுக்கு உள்ளாக வீடுகளுக்கு அருகிலும் வளர்க்க வேண்டாம். செண்பக மரம், முருங்கை மரம் இயற்கையாக வாஸ்து சாஸ்திரத்தில் இடம் பெறவில்லை என்றாலும், அதன் உறுதித் தன்மை குறைவாக இருப்பதால் வளர்காமல் இருப்பது நல்லது. ஆல் , அரசு போன்ற மரங்களை இல்லங்களில் வளர்க்க வேண்டாம். இதனைத் தவிர மற்ற மரங்களை நெல்லி மற்றும் வில்வம் தவிர அனைத்து மரங்களையும் தாராளமாக வளர்க்கலாம்.

இன்றைய இராசிபலன்
Today rasipalan :

மேஷம்-  பாசம்
ரிசபம்- ஊக்கம்
மிதுனம்- ஆர்வம்
கடகம்- பயம்
சிம்மம்- பரிவு
கன்னி- தடை
துலாம் – உதவி
விருச்சிகம்- செலவு
தனுசு- பக்தி
மகரம்- உயர்வு
கும்பம்- முயற்சி
மீனம் – பாசம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#May_21

சிலி கடற்படை தினம்

இந்திய தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்

பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது(1859)

பாரீசில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1904)

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்த தினம்(1991)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading