பூரம் நட்சத்திரம்

25.10.2022
#தமிழ்_காலண்டர்.

இன்று கந்த சஷ்டி ஆரம்ப நாள்.

சந்திரனின் நிழல் பூமியில் விழுவதே சூரிய கிரகணம். கிரகணம் தோன்றும் 4 ஜாமங்கள் உணவு வேண்டாம். பிறகு 3 ஜாமங்கள் வேண்டாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலருக்கு முடியாது. அதனால் பகல்12 மணிக்கு உள்ளாக வேண்டாம்.
இன்று #அமாவாசை இன்று சூரிய கிரகணம் மாலை 5.13 முதல் தொடக்கம் முடிவு 6.25 மதியம் 12 மணிக்கு உள்ளாக உணவு அருந்தவும் பிறகு இரவு குளித்த பிறகு ஆலயம் சென்று வழிபாடு முடிக்கவும். திருவாதிரை சதயம் சுவாதி சித்திரை விசாகம் நட்சத்திர காரர்கள் கண்டிப்பாக ஆலயம் சென்று வருவது நல்லது.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 02 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி

தினசரி நாள்காட்டி 25.10.2022 #சுபக்கிருது; #ஐப்பசி மாதம்.8ந் தேதி .  செவ்வாய் மாலை 4.20 மணி வரை அமாவாசை திதி பிறகு  பிரதமை திதி. இன்று மதியம் 2.04 வரை சித்திரை நட்சத்திரம்.பிறகு சுவாதி நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.

நட்சத்திர ரகசியங்கள் வரிசையில் ஒவ்வொரு நட்சத்திரமாக பார்த்து வருகிறோம் . அந்த வகையில் 27 நட்சத்திரங்களில் பதினொன்றாவது நட்சத்திரமாக இருக்கக் கூடிய பூரம் நட்சத்திரம்.இந்த நட்சத்திரம் சார்ந்த ஒரு சில கருத்துக்களை இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம். பூரம் நட்சத்திரத்தின் உருவம் கட்டில் கால் ஆகும். அல்லது சதுரம் போன்றும் தோற்றமளிக்கும் . இந்த பூர நட்சத்திரம் சிம்ம ராசியில் இருந்து அமைந்திருக்கிற ஒரு நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். அதே சமயம் பூரம் நட்சத்திரத்தின் அதி தேவதை துர்க்கை. பூரம் நட்சத்திரத்தின் வசிப்பிடம் இல்லம் அதாவது வீடு. ஆக பூர நட்சத்திரத்தின் உருவம் கட்டில் கால் என்பதாலும், இதன் அதிபதி சுக்கிரன் என்பதாலும், சுக்கிரன் ஆடம்பரப் பொருட்களை குறிப்பவன் என்பதாலும், கையில் இருக்கிற பணத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய காரகத்துடன் என்பதாலும், வீட்டுக்கு தேவையான கட்டில் மேசை நாற்காலி சோபா பணம் வைக்கும் தண்டவாள பணப்பெட்டி போன்ற பொருட்கள் வாங்கவும், ஒருவரிடம் பணத்தை வாங்கவும் உகந்த நட்சத்திரம்.

பூர நட்சத்திரத்தில் உருவம் சதுரம் போன்று காணப்படுவதால் மாந்திரீக சக்கரங்கள் வருவதற்கும், சித்திரம் எழுதுவதற்கும் நல்ல நட்சத்திரம். பூரம் நட்சத்திரத்தின் அதிதேவதை துர்க்கை என்கின்ற காரணத்தால் பில்லி சூனியம் ஏவல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட பூரம் நட்சத்திரத்தன்று விரதம் இருந்து துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மூடியில் நெய்யுற்றி விளக்கேற்றி வர அபிச்சார தோஷங்கள் நீங்கும் . அதாவது விலகும். பூரம் நட்சத்திரத்தின் இருப்பிடம் வசிப்பிடம் வீடு என்பதால், வீடு கட்ட, வீடு வாங்க , கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நட்சத்திரம். ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் என்பதால் விரும்பிய மணமகனை திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்கள் பூரம் நட்சத்திரம் வருகின்ற நாளில், பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடுகள் செய்தால் விரும்பிய கணவனை மணவாளனாக அடையலாம். ஆண்டாள் அவதரித்த பூர நட்சத்திரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருமுறை சென்று, அங்குள்ள ஆண்டாள் நாட்சியார் வணங்கிய பெருமாளை சேவித்தாலும் விரும்பியவாறு கணவன் கிடைப்பார் என்பது நம்முடைய ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

_____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வரவு
ரிஷபம்- நலம்
மிதுனம்- லாபம்
கடகம்- பரிவு
சிம்மம்- நன்மை
கன்னி- தனம்
துலாம் – அன்பு
விருச்சிகம்- பணிவு
தனசு- ஆக்கம்
மகரம்- நற்செயல்
கும்பம்- அமைதி
மீனம் –   சாதனை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

Loading