
தினசரி நாள்காட்டி 8.12.2022 #சுபக்கிருது; #கார்த்திகை மாதம்.22ந் தேதி . வியாழக்கிழமை. காலை 9.39 வரை பவுர்ணமி பிறகு தே.பிரதமை.மதியம் 12.18 வரை ரோகிணி பிறகு மிருஹஷிரிஷம்.
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு .
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம். vastu tips today
வாஸ்து ரீதியாக எந்தெந்த மரங்கள் ஒரு இல்லத்தின் அருகில் இருக்கலாம் என்கிற விஷயத்தை அனைத்து வாஸ்து நிபுணர்களும் சொல்லி வருகின்றனர். அந்த வகையில் மிகவும் துன்பத்தைக் கொடுக்கிற மரமாக ஒரு மரம் இருக்கிறது என்று சொன்னால் அது புளிய மரத்தை நாம் குறிப்பிட வேண்டும். அந்த வகையில் புளியமரம் ஒரு இல்லத்துக்கு அருகில் இருப்பது எமன் பாச கயிறு சுழற்சி வீசுவது போலத்தான் என்று சொல்லுவேன். வீட்டின் வாசல் முன் புளியமரம் இருப்பது நேரத்தை நெருங்கிய துர் மரணத்தை கொடுக்கிற பலனாக இருக்கும். ஒரு இல்லத்தின் கிழக்கு பகுதியில் இருப்பது அந்த குடும்பத் தலைவருக்கு ஆகாது. இல்லத்திற்கு வடக்கு பகுதியில் இருப்பது அந்த வீட்டின் குடும்ப தலைவிக்கு ஆகாது. ஒரு இல்லத்தின் மேற்கு பகுதியில் இருப்பது வயதான முதியவர்களுக்கு ஆகாது. ஒரு இல்லத்தின் தெற்கு பகுதியில் இருப்பது வயது வந்த பெண்களுக்காகாது.
தெற்கும் மேற்கு பகுதியில் மரங்கள் இருக்கலாம் என்று சொன்னாலும் புளியமரம் என்பது இருக்கக் கூடாது. வடகிழக்கு பகுதியில் இருந்தால் வம்சமே அழிந்து போகும். தென்கிழக்கு பகுதியில இருந்தால் அந்த வீட்டின் இளம் வயது பெண்களுக்காகாது. தென்மேற்கு பகுதியில் இருப்பது எதிரி தொல்லையால் மரணம் கூட நிகழும். வடமேற்கு பகுதியில் இருப்பது அந்த இல்லத்தின் மறு மகனுக்கு ஆகாது . ஆக புளிய மரத்தின் நிழல் ஒரு இல்லத்து மேல் விழுந்தால் இல்லத்திற்கு ஆகாது. அதே சமயம் நான்கு திசைகளிலும் 150 அடிகள் கடந்து புளிய மரங்கள் இருப்பது எந்த தோஷமும் கிடையாது.இதற்கு காரணம் அறிவியல் ரீதியாக கூட உண்டு புளியமரம் இரவில் கார்பன் டை ஆக்சைடு வெளியில் விடும் மரமாக இருக்கிறது. ஆனால் மற்ற மரங்கள் அந்த வேலையை செய்யாது. இதன் எதிர் மறை என்பது புளி எதிர் மறை நிகழ்வுகளை விரட்டி விடும் செயலை செய்யும்.அதாவது எதிரிகள் வீட்டில் உணவு உண்டால் கூட அதனை தோசம் கழிக்கும் விசயமாக புளி இருக்கும். இருக்கிறது.
______________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – மேன்மை
ரிஷபம்- சிரமம்
மிதுனம்- ஓய்வு
கடகம்- பயம்
சிம்மம்- சுகம்
கன்னி- துணிவு
துலாம் – ஆர்வம்
விருச்சிகம்- முயற்சி
தனசு- பணிவு
மகரம்- தனம்
கும்பம்- பக்தி
மீனம் – சினம்