நாளை காலண்டர் | வாஸ்து கருத்துக்கள்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

30.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 30.8.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
14ந் தேதி  செவ்வாய்க்கிழமை மதியம் 3.35 வரை திருதியை திதி . பிறகு வ.சதுர்த்தி திதி  இரவு 11.36 வரை அஸ்தம் நட்சத்திரம். பிறகு சித்திரை நட்சத்திரம் .

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

வாஸ்து பயணங்களில் உணர்கிற விஷயம் என்று சொல்வதை விட, வாஸ்து விதிகள் ஒரு இடத்தில் மிக மிக முக்கியம். அந்த வகையில் ஒரு தோட்டங்களில் அல்லதுபண்ணை நிலங்களில் அல்லது விவசாய நிலங்களில் ஒரு பண்ணை வீடு கட்டும்பொழுது வாஸ்து விதிமுறைகள் முக்கியம். நம்முடைய முன்னோர்கள் எப்பொழுதுமே கூட்டங்களாக குழுக்களாக ஊர் பகுதிகளில் தான் வாழ்ந்தார்கள். பட்டிகள் என்றும் வலசு என்றும், பாளையம் என்றும் பதி என்றும்,வாடி என்றும் இடங்களில் பெயர் அமைத்து வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று நவநாகரீக உலகத்தில் பயணங்கள் என்கிற விஷயம் எளிதானதாக மாறிய காரணத்தாலும், பாதுகாப்பு என்கிற விஷயம் மாறிவிட்ட காரணத்தாலும், இன்று யார் எங்கு வேண்டுமானாலும் வாழ்கின்ற சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

அப்படி அமைக்கின்ற போது ஒரு சில இடங்களில் வாஸ்து குற்றங்களாக அமைந்து விடுவதுண்டு. அந்த வகையில் தோட்டங்களில் நீங்கள் வாஸ்து படி வீடு அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் கிணறு எங்கு இருக்கிறது என்பது மிக மிக முக்கியம். அந்த இடத்தில் உங்களுடைய கிணறு வடகிழக்கு பகுதிகளோ, வடக்கு பகுதிகளோ,அல்லது கிழக்குப் பகுதியில் இருக்கலாம். அதனைத் தவிர வேறு திசையில் ஒரு குறிப்பிட்ட தூரம் சார்ந்த அடிகள் கடந்து இருந்தால் பெரிய தவறுகள் கிடையாது. நெருங்கிய அமைப்பில் மற்றவர்களுடைய கிணறு இருக்கும் போது குற்றமாக மாறிவிடும். அதற்குப் பிறகு அந்த இடத்தில் சரிவுகள் என்பது மிக மிக முக்கியம். வடக்கு சரிவுகளாக அல்லது சம தளமாக இருப்பது முதல் தரமான தோட்டமாக பார்க்கப்படுகிறது. அதற்கு பிறகு கிழக்கு சரிவுகள் இருக்கும் பொழுது முடிந்தால் சரி செய்ய முடியும். இல்லை என்றால் விட்டுவிட வேண்டும் .அதாவது முடிந்தால் என்பது கிழக்கு சரிவுகளாக இருக்கும் இடத்தை நமது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு மாற்றிக் கொள்ளலாம். தெற்கு மேற்கு சரிவு உள்ள இடங்களை தவிர்க்கிட வேண்டும் என்று தான் சொல்லுவேன் . சரிவுகள் தோட்டங்களில் வீடு கட்டும் போது முக்கியம்.மற்றும் கிணறுகள் முக்கியம். இதனை கவனித்து பண்ணை வீடுகளை அமைத்துக் கொள்ளலாம்..

 
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -ஏமாற்றம்
ரிசபம்-வாழ்வு
மிதுனம்-சாந்தம்
கடகம்- பயம்
சிம்மம்-தடை
கன்னி- செலவு
துலாம் -உறுதி
விருச்சிகம்- பிரயாசை
தனசு – ஆதாயம்
மகரம்- லாபம்
கும்பம்- வெற்றி
மீனம் – வரவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_30

சர்வதேச காணாமல் போனோர் தினம்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)

பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் இறந்த தினம்(1957)

இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா இறந்த தினம்(2008)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.Vastu Shastra is based on the concept of scientifically combining the five basic elements – earth, water, fire, air and sky – to create a pleasant setting. Vasthu principles integrated with architecture boost health, wealth, energy and prosperity and make the living or working atmosphere serene and enlightened.

வாஸ்து கருத்துக்கள்,Vastu concepts,Basic Concepts of Vastu ,The Basics – Vaastu Shastra, Vaastu concept ideas ,Basic Concepts On Vastu,Basics of Vastu and Vastu For Home,

Chennai vastu Perundurai
099650 21122
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading