நாளைய பஞ்சாங்கம் காலண்டர்

Tomorrow Tamil Calendar 2022

தினசரி நாள்காட்டி 1.10.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.14ந் தேதி . சனிக்கிழமை இரவு 8.48 வரை சஷ்டி திதி . பிறகு  வ.சப்தமி திதி.விடியற்காலை 2.58 வரை கேட்டை நட்சத்திரம். பிறகு மூலம் நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்  . #சஷ்டி_விரதம் Tomorrow Tamil Calendar 2022

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

வாஸ்து சார்ந்த விஷயத்தில் எந்த முனைகளும் வளரக்கூடாது என்கிற விதி இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட முனைகள் குறுகலாமா? அல்லது பெருகலாமா? என்று பார்க்கும் பொழுது பெருக்கினால் என்ன தவறு? குறுகினால் என்ன தவறு .? என்கிற ஒரு சில கருத்துக்களை பார்ப்போம். கிழக்கு அக்னி மூலை பெருகுதல் மிகுந்த கேடு கொடுக்கும் . ஒரு இல்லத்தில் பெண்களுக்கு ஆஞ்சநேயம் பெருகுதல் சண்டை சச்சரவு இருக்கும். இல்லமாக இருக்கும் போது சாலைகள் இல்லாது இருந்து தென்கிழக்கு தெற்கு அக்னி வளர்ந்தால் தவறு கிடையாது.   கிழக்கு அக்னி வளர்வது ஆண்களின் உழைப்பை தின்கிற வீடு. மேற்கு வாயு கோணமாக வளர்வது வாஸ்துரீதியாக தவறு. அதே சமயம் சாலை இல்லாத போது இடம் மட்டும் வளருவது நல்ல பலன்களை கொடுக்கும். இல்லம் வடக்கு வாயு வளர்ச்சி வம்சத்தை அழிக்கும்.  வடக்கு ஈசானியம் வளர்வது தனத்தோடு வாழும் இல்லம். கிழக்கு ஈசானியம் வளருதல் ஆண்கள் பாக்கெட்டில் எப்பொழுதும் பணம் இருக்கும். இந்த விதிகளை கவனித்து ஒரு இல்லம் அமைக்க வேண்டும். அந்த இல்லம் நல்ல மகிழ்ச்சியை கொடுக்கிற இல்லமாக இருக்கும்.

ஒரு இல்லத்தில் எந்த முனைகளுமே 90 டிகிரிக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கக் கூடாது என்று சொல்கின்றோம். ஆனால் ஒரு சில இடங்களில் இருந்தால் பெரிய அளவுக்கு தவறு இருக்காது . அது பற்றி தெரிந்து கொள்வோம். எப்பொழுதுமே தென்மேற்கு மூலை 90 டிகிரி களுக்கு இருக்க வேண்டும். மற்ற மூலைகளில் வடமேற்கு கோணங்கள் விரியலாம். தென்கிழக்கு கோணங்கள் விரியலாம். இதனைத் தவிர தென்கிழக்கு குறுகுவதோ, வடமேற்கு குறுகுவதோ, தென்மேற்கு விரிவதும்,  குறுகுவதும் வாஸ்துவின் ரீதியாக மிக மிக மோசமான விளைவுகளை கொடுக்கிற இல்லமாக இருக்கும். வாஸ்து என்கிற விஷயம் அந்த இடத்தில் கொஞ்சம் கூட இருக்காது  நீங்கள் என்னதான் வீட்டை வாஸ்துபடி கட்டிக் கொண்டாலும் , அந்த விஷயம் சார்ந்த வாஸ்து அங்கு வேலை செய்யாது.இதனை முழுமையாக தெரிந்து கொண்டு இல்லத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
______________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- நலம்
மிதுனம்- சுகம்
கடகம்- வாழ்வு
சிம்மம்- பொறுமை
கன்னி- மகிழ்ச்சி
துலாம் – உயர்வு
விருச்சிகம்- புகழ்
தனசு- ஆதரவு
மகரம்- உற்சாகம்
கும்பம்- சாந்தம்
மீனம் – நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.Tomorrow Tamil Calendar 2022

________________________

#வரலாற்றில்_இன்று
#October_01

உலக முதியோர் தினம்

உலக சைவ உணவாளர்கள் தினம்

தென்கொரியா ராணுவ தினம்

சிங்கப்பூர் குழந்தைகள் தினம்

இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது(1854)

ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது(1953)

உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது(1869)

Loading