நாளைய காலண்டர் 27.5.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ |
மங்களம் உண்டாகட்டும்.

நாளைய_காலண்டர்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நாளை

தமிழ்_காலண்டர்.

இன்று பிரதோஷம்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 15 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.45.
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் தவறானது. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 27.5.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
13ந் தேதி வெள்ளிக்கிழமை.
காலை 11.50 வரை தே.த்வாதசி திதி.பிறகு திரயோதசி திதி. இரவு 2.12 வரை அசுவினி நட்சத்திரம். அதன் பிறகு பரணி.

ராகுநேரம்: 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am.

நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm

நாள் முழுவதும் நல்ல யோகநாள் .


வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

வாஸ்து சாஸ்திர வகையில் லிப்ட் என்கிற வசதி ஏற்படுத்துவது அதாவது தானியங்கி மாடிப்படி, இயங்கும் படிகள் என்று சொல்லக்கூடிய மாடிப்படி சார்ந்த லிப்ட் வாஸ்துப்படி அமைப்பது என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் லிப்ட் விஷயத்துக்கு வாஸ்து முதல் தரமாக இருப்பது முக்கியம். இருக்க வேண்டிய இடம் என்பது வடமேற்கு பகுதி அதேசமயம் வடமேற்குப் பகுதியின் மூலையில் வரக்கூடாது . அதே சமயம் லிப்ட் சார்ந்த விஷயத்தில் தரையில் பள்ளம் என்கிற விஷயத்தை பொறுத்தி அமைக்கக் கூடாது. அதே சமயம் ஒரு சில இடங்களில், வடமேற்கு பகுதியில் அமைக்க முடியவில்லை என்றால் கொஞ்சம் வடமேற்கு கலந்து , வடக்கு கலந்து இருப்பது போல அமைத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் மேற்கு மையத்தில் அமைத்துக் கொள்ளலாம். இது ஒரு வகையான ஒரு 70 சதவீத வாஸ்து பலம் உள்ள விஷயமாக இருக்கும். அதனைத் தவிர மற்ற இடங்களில் அமைப்பது என்பது தவறு. இருந்தாலும் தெற்கு தென் கிழக்கு பகுதிக்கு போகாது ,மேற்கு தென்மேற்கு பகுதிக்கு போகாது அல்லது, உயரக்கூண்டு இல்லாமல் தனிப்பட்ட முறையில் அமைத்துக் கொள்ளலாம். இதனை தவிர வேறு எந்த பகுதிகளிலும் அமைப்பது வாஸ்து ரீதியாக தவறு. லிப்ட் என்பதை ஒரு வாஸ்து நிபுணர் ஆலோசனை வைத்துக்கொண்டு அமைக்கும் பொழுது சரியான முறையில் அமைந்து விடும் என்பேன். ஏனென்று சொன்னால் ஒரு லிப்ட் விஷயத்திற்கு அதிக பணம் செலவு செய்யும் நிகழ்வாக இருக்கும். இந்த இடத்தில் அந்த தானியங்கி படி வாங்குவதில் கூட பேரம் பேசி பணத்தை கொஞ்சம் குறைத்து ஒரு வாஸ்து ஆலோசகருக்கு கொஞ்சம் கொடுத்து சரியான இடத்தை டிகிரி வைத்து பார்த்து அமைத்துக் கொள்வது சாலச்சிறந்தது என்று சொல்லுவேன்.


தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- நன்மை
ரிசபம்- பெருமை
மிதுனம்- நட்பு
கடகம்- லாபம்
சிம்மம்- புகழ்
கன்னி- தெளிவு
துலாம் – ஈகை
விருச்சிகம்- முயற்சி
தனுசு- உயர்வு
மகரம்- வெற்றி
கும்பம்- திடம்
மீனம் – மகிழ்ச்சி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.


வரலாற்றில்_இன்று

May_27

நைஜிரியா குழந்தைகள் தினம்

பொலீவியா அன்னையர் தினம்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இறந்த தினம்(1964)

ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர், புனித பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தான்(1703)


மேலும் விபரங்களுக்கு

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

  1. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
  2. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
  3. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading