தென் மேற்கு வாஸ்து குற்றங்கள் தினசரி காலண்டர் 20.11.2022

தினசரி நாள்காட்டி 20.11.2022 #சுபக்கிருது; #கார்த்திகை மாதம்.04ந் தேதி .ஞாயிறு. காலை 10.43 வரை ஏகாதசி திதி பிறகு தே.த்வாதசி திதி.  இரவு  12.01 வரை சித்திரை பிறகு சுவாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று   நாள்  முழுவதும் நல்ல யோகநாள்   .


__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

நீராக நீயொட உதவா கரையாக நான் இருக்க என்றும் சொல்லாமல், உதவும் கரையாக நாம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்று சொன்னால் அந்த நதி உதவாது. தரிகெட்டு ஓடிவிடும். அப்படி ஒரு மனிதன் வாழ்கிறார்கள் என்று சொன்னால், ஒரு இல்லத்தில் தென்மேற்கு குற்றங்களும், வடகிழக்கு குற்றங்களும் இருந்தால் தான் அந்த நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஆக ஒரு மனிதன் அனைவருக்கும் உதவும் மனிதனாக, உதாரண மனிதனாக வேண்டுமென்று சொன்னால், தென்மேற்கு ஒரு இல்லத்தில் பள்ளங்கள் எக்காரணம் கொண்டும் இருக்கக் கூடாது. அதனை கவனிப்பது நலம். அதே சமயம் தென்மேற்கு காலியிடங்களும் இருக்கக் கூடாது .

அதே சமயம் மனித வாழ்க்கையில் ஐந்து விஷயங்கள் பொறுந்தி வர வேண்டும். முன் ஜென்ம முன்னோர் செயல்களை மாற்ற முடியாது. ஜாதகம் மாற்ற முடியாது. இந்த இரண்டு  விஷயங்களை மாற்ற முடியாது . ஆனால் மாற்றக்கூடிய விஷயம் நமது எண்ணம் சொல் செயல் நமது நடவடிக்கை மற்றும் மனிதனாக வாழ்கின்றோமா?. என்கிற செயலை மாற்ற முடியும். உண்மையான தெய்வ வழிபாடு ,சரியான தெய்வ வழிபாடு நாம் எடுத்துக் கொள்ள முடியும் அது ஜாதகத்தின் மூலமாக கூட இருக்கலாம். அடுத்து வசிக்கின்ற இடத்தின் நிலையை வாஸ்து என்ற பெயரில் இருக்கிற, ஒரு பூமியின் இருப்பு நில இயல் சார்ந்த விஷயத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்த நில இயல் என்கிற வார்த்தைவாஸ்து பிதாமகன்  ஐயா திருப்பதி ரெட்டி அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விஷயம். ஆக இந்த ஐந்து விஷயங்களில் மூன்று விஷயங்களை நாம் மாற்றும் பொழுது நமது வாழ்க்கைக்கு 60% மார்க் என்கிற விஷயம் கிடைத்து வாழ்க்கை ஒரு சந்தோசமான வாழ்க்கை கொடுக்கிற நிகழ்வாக உங்கள் வாழ்க்கை அமையும். வாஸ்து தவிர மீதி இரண்டு விஷயங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சொன்னால் அதாவது மனிதனாக மற்றும், இறை வடிவமாக, உண்மையான தெய்வ வழிபாடு சார்ந்த நிகழ்வை ஒரு வாஸ்து படி இருக்கிற வீட்டில் தான் பெற முடியும் . ஆக தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீடும் வாஸ்துபடி இருந்தால் தமிழ்நாடு இந்தியாவிற்கு ஒரு உதாரண மாநிலமாக இருக்கும்.

   ______________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – தடங்கள்
ரிஷபம்- சந்தோசம்
மிதுனம்- உயர்வு
கடகம்- காத்திருப்பு
சிம்மம்- அச்சம்
கன்னி- வருமானம்
துலாம் – பயம்
விருச்சிகம்- பொறுப்பு
தனசு- முயற்சி
மகரம்- தூக்கம்
கும்பம்- ஆதாயம்
மீனம் – எதிர்ப்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#November_20

யுனிசெஃப் குழந்தைகள் தினம்

வியட்நாம் ஆசிரியர் தினம்

மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது(1985)

உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது(1917)

ஜெர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க், ரெண்டென்மார்க் ஆல் மாற்றப்பட்டது(1923)

Loading