ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
28.7.2022
#தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.56.
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
தினசரி நாள்காட்டி 28.7.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
12ந் தேதி வியாழக்கிழமை . இரவு 11.26 வரை அமாவாசை திதி. பிறகு வ.பிரதமை திதி.காலை 6.50 வரை புனர்பூசம் பிறகு பூசம் நட்சத்திரம்.
ராகு எமகண்ட நேரம்:
1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am.
இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .
__________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:
வாஸ்து அறிவு என்பது, வாஸ்து விஷயங்கள் என்பது , வாஸ்து என்கிற விஷயம் ஒரு இல்லத்திற்கு மட்டும் கிடையாது. சாதாரண சிறிய அளவில் 10 மனிதர்களை வைத்து சுய தொழில் சார்ந்த வேலை செய்கிற இடங்களுக்கும் வாஸ்து உண்டு. எடுத்துக்காட்டாக ஒரு டெய்லரிங் ஷாப், அதேபோல பனியன் கம்பெனி சிறிய அளவில் செய்கிற ஒரு நிறுவனம், சிறிய அளவில் 10 நபர்களை வைத்து தொழில் செய்கிற ஒரு இடம், ஆக இந்த இடங்களில் வாஸ்து என்பது கண்டிப்பாக வேண்டும். அப்படிப்பட்ட இடங்களில் கிழக்கு என்பது திறப்பாகவும் வடக்கு என்பது திறப்பாகவும், மேற்கு தெற்கு இந்த விஷயங்கள் கொஞ்சம் இடம் குறைவாகவும் இருந்தால் நல்லது. அதே சமயம் தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த கடைகளை என்ன செய்வது என்கிற கேள்வி எழும் பொழுது, தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த இடங்களில் உங்கள் நிறுவனத்தின் ஒரு விளம்பரம் சார்ந்த இட அமைப்பை செட் பேக் அமைப்பாக ஏற்படுத்தி அதற்குப் பிறகு, உங்களுடைய நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் செய்யும் பொழுது அந்த நிறுவனம் வாஸ்து ரீதியாக பெரிய அளவில் செய்கிற நிறுவனமாக இருக்கும்.
அதே சமயம் ஒரு நிறுவனத்தின் தலைவாசல் இருக்கும் பொழுது, அந்த தலைவாசலுக்கு பக்கத்தில் இருக்கிற கட்டடத்தின் முனைகள் குத்துக்களாக வரக்கூடாது. அதேசமயம் பக்கத்து கட்டிடத்தின் தூண்கள் கூட குத்துக்களாக வரக்கூடாது. அப்படி முனை குத்தல்கள் சார்ந்த விஷயத்தில் ஒரு சில நேரங்களில் பாதிப்பை கொடுக்கும் நிகழ்வாக இருக்கும். எப்பொழுதுமே கடைகளில் திறப்புக்கள் என்பது உச்சப் பகுதியில் வரவேண்டும். உச்சம் என்பது வடக்கு கிழக்கு ஒட்டியும், கிழக்கிற்கு வடக்கு ஒட்டியும் தெற்கிற்கு, கிழக்கு ஒட்டியும், மேற்குக்கு வடக்கு ஒட்டியும் இருக்க வேண்டும் . அப்படி மாறி இருக்கிற இடங்களில் ஒரு விண்டோ அமைப்பை ஏற்படுத்தி தடுத்து வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சில இடங்களில் திறப்புக்கள் வேண்டும் என்று சொல்வார்கள். காற்றும் வெளிச்சமும் வர வேண்டும் என்பார்கள். தாராளமாக வரட்டும். ஆனால் தரைப்பகுதியை அடைத்து விட்டு மேற்புறப் பகுதியை தாராளமாக திறப்பு களாக விடலாம். கடைகளை, நிறுவனங்களை, வேலை முடிந்ததும் கடைகளை அடைக்கும் பொழுது, கடை கதவுகளை மட்டும் அடைத்து விடலாம். அது கடைகளுக்கும் சரியான முறையில் வாஸ்துவை பொருத்திப் பார்ப்பது, அந்த கடையின் வளர்ச்சியை இரண்டாவது நிலைக்கு அழைத்துச் செல்லும்.
______________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேஷம்- வெற்றி
ரிசபம்- பாராட்டு
மிதுனம்- வரவு
கடகம்- நலம்
சிம்மம்- லாபம்
கன்னி- களிப்பு
துலாம் – ஆதாயம்
விருச்சிகம்- பரிசு
தனசு – நன்மை
மகரம்- சுகம்
கும்பம்- வெற்றி
மீனம் – பெருமை
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
#August_28
உலக கல்லீரல் நோய் தினம்
பெரு விடுதலை தினம்(1821)
முதல் உலகப் போர் ஆரம்பமானது(1914)
முதல் முறையாக பிரிட்டனில் உருளைக் கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டது(1586)
_________________
மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995
450 total views, 1 views today