Saturn’s transit to Capricorn
தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023 :
உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டில் சனி பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்கிறார். இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு 71/2 சனி முடிகிறது . தடைகளும் தாமதங்களும் உங்கள் வழியில் இருந்து விலகி நல்ல நேரம் வருகிறது. நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் யாவற்றிலும் வெற்றியும் பயணத்தை காண்பீர்கள்.
உத்தியோக நிலையில் உங்களில் ஒரு சிலர் உயர் பதவி கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் செயல் திறன் பிறரின் கவனத்தைக் கவரும். சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உங்கள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் சவால்களை சந்திக்கும் வலிமை பெறுவீர்கள். உங்கள் முயற்சி மற்றும் தகவல் தொடர்பு திறன் உங்கள் முன்னேற்றத்திற்கு நல்லது.

குடும்பத்தில் இதற்கு முன்பு இருந்த பிரச்சினைகள் நீங்கிவிடும். உடன் பிறந்தவர்களின் உறவு சுமுகமாக இருக்கும். குழந்தைகள் கருத்துக்கு எதிராக செயல்பட மாட்டார்கள். நீங்கள் குடும்பத்துடன் வெளியூர் சுற்றுலா சென்று வருவீர்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள். தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு தக்க துணை தேர்ந்தெடுக்க இது உகந்த நேரம். தம்பதிகள் உறவில் பந்தமும் நெருக்கமும் சிறப்பாக இருக்கும். ஆனால் சில சோதனைக் கட்டங்களை நீங்கள் தாண்டி பயணப்பட நேரும். அனுசரித்து உறவில் நடந்தால் அமைதியான வாழ்க்கை நடக்கும்.
நிதிநிலையில் பொருளாதார பிரச்சினைகள் காணாமல் போகும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கடன்கள் இருந்தால் அதனை இந்த காலக்கட்டத்தில் அடைத்து முடிப்பீர்கள்.மாணவர்கள் இந்த காலக்கட்டத்தில் கல்வியில் சிறந்த வெற்றி பெறுவார்கள். மிகவும் அறிவோடு இருப்பார்கள். அவர்களின் திறமை வெளிப்படும். ஒரு சிலர் ஆய்வு அல்லது ஆராயச்சிக் கல்வியை மேற்கொள்வார்கள். மாணவர்கள் கவனமுடனும் ஆர்வத்துடனும் கல்வி பயில்வார்கள். ஒரு சிலருக்கு உயர் கல்வி படிக்க வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி காண்பார்கள். நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி காண்பார்கள்.ஒவ்வொரு சனிக்கிழமையும் கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுங்கள். ஹனுமார் சாலீஸாவை பாராயணம் செய்யுங்கள்.
சனிக்கிழமை ஏழை எளியவர்களுக்கு போர்வை மற்றும் ஆடை தானம் செய்யுங்கள்
அசைவம் மற்றும் மது இவற்றை சனிக்கிழமை தவிருங்கள்
சனிக்கிழமை நாய், காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் அளியுங்கள்
மருத்துவமனைக்கு முடிந்த அளவு தொண்டு செய்யுங்கள் Saturn’s transit to Capricorn