டிகிரி சுத்தம் வாஸ்து What is degree Vastu?

ஒரு வீடு கட்டுவதற்கு முன்பு முதலில் பார்க்கிற விஷயம் என்னை பொறுத்த அளவில் இடத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே இடம் இருந்தாலும் சரி அல்லது இடம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தாலும் சரி, முதலில் சரியான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். கட்டுகிற இடத்திற்கு வாஸ்துவின் பலம் என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் முதல் தரமான ஒரு மனையாக என்னால் பார்க்கப்படுகிறது சதுரமாக இருக்கிற மனை. அதற்குப் பிறகு தெற்கு வடக்கு நீளமாகவோ, கிழக்கு மேற்கு நீளமாகவோ இருக்கலாம். அதே சமயம் சமமான மனையும் நல்ல பலனை கொடுக்கும். வடக்கு சரிவு உள்ள பூமியும் நல்ல பலனை கொடுக்கும். கிழக்கு சரிவு உள்ள பூமியும் சரி செய்து கட்டும் போது அதுவும் வடக்கு என்ன பலனை கொடுக்குமோ அதே அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் .  தெற்கு சரிவுகளையும், மேற்கு சரிவுகளையும் தவிர்ப்பது நலம்.

எந்த ஒரு இடத்தின் மூலையும் 90 டிகிரி இருக்க வேண்டும். திசை காட்டிக்கு வடக்கு இடம் என்பது 360 டிகிரிக்கு உள்ளாகவும் 30 டிகிரிக்கு உள்ளாகும் இருக்கலாம். கிழக்கு இடம் என்பது 90 டிகிரிக்கு உள்ளாகவும் 60 டிகிரிக்கு உள்ளாகவும் இருக்கலாம். தெற்கு இடம் என்பது 180 டிகிரியில் இருந்து 160 டிகிரிக்கு உள்ளாக இருக்கலாம். மேற்கு இடம் என்பது 270° இல் இருந்து 250 டிகிரிக்கு உள்ளாக இருக்கலாம். இந்த மனைகள் எல்லாமே அற்புதமான மனைகள். தெற்கு மேற்கு சாலைகள் இருந்தால் அதனை பொருத்தும் விதமாக வடக்கு ஒரு பூங்கா அமைப்பு சார்ந்த சாலையை ஏற்படுத்திய பிறகு கட்டும் பொழுது மேற்கு சாலை இருந்தால் கிழக்கு பகுதியில் பூங்கா அமைப்பை ஏற்படுத்தி ஒரு இல்லத்தை கட்டும் போது அற்புதமான பலனை கொடுக்கிற வீடாக அமையும். முதலில் இடம் தேர்ந்தெடுப்பது என்பது தான் வாஸ்து வகையில் சரியான முடிவு.What is degree Vastu?

Before building a house, the first thing to look for is to inspect the site to scale. Whether you already have a place or decide to buy a place, the first thing you need to do is choose the right place. Vastu strength is very important to the building site. In that sense, I see a square plot as the first quality plot. After that it can be south north length and east west length. At the same time even ground also gives good results. Land with north slope also gives good results. When the land on the east slope is repaired, it can also create the same structure as the north. It is better to avoid south slopes and west slopes.Any corner of a space should be 90 degrees. North for a compass can be within 360 degrees and within 30 degrees. East location can be between 90 degrees and 60 degrees. South location can be anywhere from 180 degrees to 160 degrees. A western location can range from 270° to 250 degrees. All these plots are wonderful plots. If there are south-west roads, then after building a park-like road in the north, if there is a west road, then in the east, a park-like structure will be built, and when a house is built, it will become a house that gives wonderful results. Choosing a location first is the right decision in terms of Vastu.

Loading