Kumaran Kundru | Tamilnadu Temple
ஆலய தரிசனம்;
அருள்மிகு
ஶ்ரீ வள்ளி, தெய்வானை சமேத
ஶ்ரீ கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
குமரன் குன்று,
அன்னூர் வட்டம்,
கோவை மாவட்டம்.
(சுமார் 500-ஆண்டுகள் பழமையான இந்த சிறிய மலைக்குன்று தலத்தில்,
ஶ்ரீவள்ளி, தெய்வானையுடன் ‘எனை ஆளும் ஆண்டவன்’ எம்பெருமான் முருகன்,
ஶ்ரீ கல்யாண சுப்பிரமணியராக அழகு அருட்காட்சியகிறார்.
(சிறப்புக்கள் பல பெற்ற, இத்திருத்தலத்தின் பதிவுகள்Kumaran Kundru | Tamilnadu Temple
சில மட்டும்)
புலிப்பாணி சித்தர் தவம்புரிந்த தலங்களில் இத்தலமும் ஒன்று என்பது தலச்சிறப்பு.
முற்காலத்தில்,
முற்றிலும் வனமாக இருந்த இத்தலத்தில், ஆடுகள் மேய்க்கும் சிறுவர்கள் மூலமாக, பூமியினுள் தான் இருப்பதை உணர்த்தி
சிறிது பின்னம்பட்ட சிலையாக
வெளிப்பட்ட இறைவனை,
இவ்வூர் மக்கள்
ஶ்ரீ தண்டாயுதபாணி எனும் திருப்பெயருடன்
வழிபட்டு வந்ததாகவும்,
பிற்காலத்தில்,
பின்னம்பட்ட அச்சிலைக்கு பதிலாக
ஶ்ரீவள்ளி, தெய்வானையுடன் கூடிய புதிய முருகன்
விக்ரகம் வடிக்கப்பட்டு, ஶ்ரீ கல்யாண சுப்பிரமணிய சுவாமியாக
பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதாகவும்
தலவரலாறு கூறுகிறது.
பேரழகுமிக்க முருகன் தம்பதியர் வீற்றிருக்கும், பசுமைமிகு
இந்த சிறுமலைக்குன்றின் ஆலயத்திற்கு செல்ல படிகள் கிடையாது.
(கார்,வேன் போன்ற சிறு
வாகனங்களிலும் செல்லலாம்) மலைப்பாதையில் சிறிது தூரம் நடந்து சென்றாலே போதும்.
திருமணம் கைகூட வேண்டுதல் வைப்பதும்,
வரன் அமைந்ததும் இத்தலத்தின் இறைதம்பதியர்
முன்னே திருமணம்
நடைபெறுவதும் இத்தல விசேஷங்களில் ஒன்று.
(இவ்வாறு ஏராளமான திருமணங்கள் இங்கு நடைபெற்றுள்ளனவாம்)
தமிழ் வருடப்பிறப்பான
சித்திரை முதல் நாள் காலையில், சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் முருகப்பெருமானின்
மீது படர்ந்து வணங்கிச்செல்வதும்,
இத்திருக்காட்சியை காண, முதல் நாள் இரவிலிருந்தே ஆயிரக்கணக்கான மக்கள் இத்தலத்தில்
காத்திருந்து, (இரவு முழுவதும்
சஷ்டி கவசம் போன்ற முருகன் பாடல்கள் பாடுவார்களாம்)
பின் கண்டு மெய்சிலிர்த்து வழிபட்டுச்செல்வதும்
மற்றுமொரு தலவிசேஷம்.
கந்தனுக்குரிய
கந்த சஷ்டி, விசாகம், பங்குனி உத்திரம், கிருத்திகை போன்ற அத்தனை விழாக்களும் சிறப்பாக நடைபெறும்
இத்தலத்தில், 13-நாட்கள் நடைபெறும் தைப்பூசத்
தேர்த்திருவிழா ஊர்கூடித்தேர் இழுத்து கொண்டாடி மகிழ்ந்திடும் பெரும் விழாகாலமாகும்).
ஓம்
ஶ்ரீ குமரன் குன்று முருகனுக்கு,
அரோகரா!
அரோகரா!
அரோகரா!



436 total views, 1 views today