கன்னி ராசி சனி பெயர்ச்சி Transit of Saturn in Virgo

Transit of Saturn in Virgo

கன்னி ராசி சனி பெயர்ச்சி 2023 சனிபெயர்ச்சி பலன்

உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சனி பெயர்ச்சி நடக்கிறது. இது நல்ல பெயர்ச்சி என்றே கூறலாம். பொதுவாக சனி 3வது ,6வது, மற்றும் 11வது வீட்டிற்கு பெயர்ச்சி ஆவது நன்மை என்றே கூறலாம். ஆறாம் வீடு என்பது எதிரிகளைக் குறிக்கும். எனவே நீங்கள் உங்கள் எதிரிகளை வெற்றி பெற முடியும். சனி மெதுவாக பலன் அளித்தாலும் கண்டிப்பாக பலன் அளிக்கத் தவறமாட்டார். சனி பெயர்ச்சி 2023 ஒரு பயனுள்ள  சாதகமான ஆண்டாக இருக்கும்.

ஆறாம் வீடு என்பது வேலையையும் குறிக்கும்.  எனவே நீங்கள் இந்த காலக்கட்டத்தில் சதா சர்வ காலமும் வேலை வேலை என்றே இருப்பீர்கள். உங்கள் வேலை அதிகரிக்கும். உத்தியோகத்தில்  முன்னேற்றம் இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பணியில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். அடுத்த கட்டடத்திற்கு முன்னேறுவீர்கள்.  உங்கள் எதிரிகள் உங்களை விட பலமாக இருப்பார்கள் என்பதால் நீங்கள் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.  நீங்கள் பணியில்  கவனம் தேவை .
உறவுகள் சிறப்பாக இருக்கும். கடந்த காலத்தில் நீங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்கள் எல்லாம் மறந்து போகும்.  சொந்த பந்தங்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அளிப்பார்கள். அதனை வரவேற்பார்கள். புறம் பேசாதீர்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.  இதனால் உறவு வலுப்படும். ஒரு சிலருக்கு காதல் உறவு திருமணமாக மாறும். திருமணமான தம்பதிகள் பரஸ்பரம் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புரிந்துணர்வு காரணமாக இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் உங்களை அதிகம் செலவு செய்ய வைக்கும். எனவே உங்கள் செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். பணத்தை செலவு செய்வதற்கு முன் நன்றாக யோசியுங்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உங்களில்  ஒரு சிலர் கடன் வாங்க நேரலாம்.  தொழில் சம்பந்தமாக பணத்தை முதலீடு செய்வீர்கள். அதில் லாபம் காண சிறிது கால தாமதம் ஆகும்.
மாணவர்கள் சிறப்பாகக் கல்வி  ஆர்வம். திட்டமிடல் மற்றும் கவனம் முன்னேற்றத்திற்கு உதவும். படைப்பாற்றல், புதுமை ஆகியவை வெளிப்படும். நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். ராசிக்கு ஆறாம் வீட்டில் சனியின் சஞ்சாரம் என்பதால் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்க கொஞ்சம் சிரமம். உங்கள் உடலை கவனிக்க நேர கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த எதிர்பாராத செலவுகளை நீங்கள் மேற்கொள்ள நேரலாம்.  நீங்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் ஒருசில நேரம். மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு கால் சம்பந்தமான பிரச்சினைகள் எழலாம். ஆகவே உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.


 Tags: Kanni rasi sani peyarchi 2023 in tamil sani peyarchi 2023 to 2026 Kanni rasi Kanni rasi sani peyarchi 2023 to 2026 in tamil Kanni rasi sani peyarchi 2023 Kanni rasi sani peyarchi 2023 in tamil sani peyarchi 2023 Kannim Kanni rasi sani peyarchi palan 2023 sani peyarchi 2023 to 2026 palangal in tamil கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026

Loading