கடக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் :
உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சனி பெயர்ச்சி ஆகி பயணம் செய்வதால் நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதற்குரிய பலனை பெறுவதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும் உங்கள் வாழ்வில் எந்தவொரு விஷயத்திலும் சரியான பாதையில் நீங்கள் செல்ல வேண்டியது அவசியம். குறுக்கு வழிகள் உங்களுக்கு பிரச்சினயை விளைவிக்கும். ஆன்மீக ஈடுபாடு நன்மை அளிக்கும். பிரார்த்தனை மற்றும் வழிபாட்டிற்கு நேரம் ஒதுக்குங்கள். அது எதிர்மறையை குறைத்து உங்கள் வாழ்வில் நேர்மறை ஆற்றலை அளிக்கும். மேலும் ஆத்ம ஞானம் மற்றும் அமைதியை அளிக்கும். சனி பெயர்ச்சி 2023 இல் பெரும்பாலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
இந்த காலக்கட்டத்தில் நீங்கள் சில பல சவால்களை சந்திக்க நேரும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் உங்களுக்கு எதிராக செயல்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலையின் தரம் கேள்விக்குறியாகும் வாய்ப்பு உள்ளது. உங்களால் செய்து முடிக்க இயலும் என்று தெரிந்த பணிகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். உங்கள்தகுதிக்கு மீறிய பணிகளை ஒத்துக் கொள்ளாதீர்கள். பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு கிடைக்க கால தாமதம் ஆகலாம். எந்தவொரு வேலையையும் ஆர்வமுடன் மேற்கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் செல்வதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களைக் காண்பீர்கள். உங்கள் அமைதியை குலைக்கக் கூடிய எந்தவொரு முக்கிய முடிவையும் நீங்கள் எடுக்காதீர்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்கள் துணையில் கவனம் தேவை.தம்பதிகள் வாழ்க்கை நன்கு அமைய அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இது குறுகிய கால நிலை என்பதை நினைவில் கொண்டு நிம்மதி பெறுங்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்கள் துணையைதேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. ஏமாற்றத்தை தவிர்க்க உங்கள் எதிர்பார்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பொருளாதார தேவைகளை உணர்ந்து நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். புதிய முதலீடு எதையும் மேற்கொள்ளாதீர்கள். கட்டாயம் எனில் நன்கு ஆராய்ந்து பின்னர் முடிவெடுங்கள். பங்கு வர்த்தகம் செய்வதிலும் கவனம் தேவை. அதில் உங்கள் பணம் நஷ்டம் அடையும் வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவி நிலையில் நீங்கள் கடின உழைப்பை மேற்கொண்டால் உங்கள் கனவுகள் யாவும் நனவாகும்.phd மாணவர்கள் வெற்றி காண்பார்கள். கடந்த கால தோல்விகளை வெற்றிப் படிகளாக மாற்ற முயன்றால் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெற இயலும். கல்வியில் கவனம் சிதறாமல் இருப்பது நலம்.
436 total views, 1 views today