இன்று வாஸ்து காலண்டர்| வணக்கம் சென்னை

இன்று
#தமிழ்_காலண்டர்.

இன்றைய நாள்காட்டி 1.5.2022 சுபக்கிருது சித்திரை மாதம்
18ந் தேதி .ஞாயிற்றுக்கிழமை.

விடியற்காலை 3.27  வரை பிரதமை திதி  பிறகு    வ.துதியை திதி.  இன்று இரவு 9.56 வரை பரணி நட்சத்திரம். பிறகு கிருத்திகை நட்சத்திரம்.

இன்றைய
ராகுநேரம்: 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நல்ல யோகநாள்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 8 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை சூரிய உதயம் காலை 5.52.
___________________

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

  வாஸ்து வகையில் விபத்து ஏற்படும் ஏற்படுத்தும் தென்மேற்கு திசை குற்றங்களை தெரிந்துகொள்வோம். தென்மேற்கு மூலையில் அதிக இடங்கள் இருப்பது, ஒரு இல்லத்தில் இருக்கும் நபர்களுக்கு பாதிப்பு கொடுக்கும். ஒரு இல்லத்தின் தென்மேற்கு வழியாக சாலைக்குச் செல்லும் வாசல் இருந்தால் விபத்தை கொடுக்கும். தென்மேற்கு பகுதியில் தண்ணீர் தொட்டி சார்ந்த பள்ளங்கள் இருந்தால், கழிவு நீர் தொட்டிகள் இருந்தால் விபத்தை கொடுக்கும் . தெற்கும் மேற்கும் சந்திக்கக்கூடிய மூலை நேராக இல்லாது விரிந்தோ, குறுகியோ இருந்தாலும் விபத்து கொடுக்கும். தென்மேற்கு மூலை  கழிவறை கட்டடங்களாக இருக்கும் போதும் விபத்தை கொடுக்கும். தென்மேற்கு மூலையில் வெளிப்பகுதியில் கிணறுகள் இருந்தாலும் விபத்து கொடுக்கும். தென்மேற்கு மூலை  எதிர்மறை பலன்களை கொடுக்கிற இடமாக இருக்கும் போது, ஒரு வீட்டில் எதிர்மறை பலன்கள் நடந்து கொண்டிருக்கும்.  முதலில் அதை அடக்க வேண்டும். அந்த அடக்குமுறை செயலை தென்மேற்கில் இருந்து தொடங்க வேண்டும்.  தென்மேற்கு என்பது ஒரு பாத்திரத்தில் இருக்கும் ஓட்டையை போல, அதை அடைத்தால்தான் தண்ணீர் உள்ளே தேங்கும். அதுபோலத்தான் தென்மேற்கு பள்ளங்கள் இருக்கும் பொழுது, அந்த வீட்டில் பணம் கூட தங்காது. அது என்னவென்று பார்த்து வாஸ்து ரீதியாக சரிசெய்தால் மட்டுமே பணம் அங்கு இருக்கும்.அல்லது பெருகும்.

Loading