ஆலய தரிசனம் திருவாவடுதுறை

இன்றைய #ஆலய_தரிசனம்;

அருள்மிகு ஶ்ரீ (ஒப்பிலாமுலைநாயகி)
அதுல்ய குஜாம்பிகை சமேத ஶ்ரீ (மாசிலாமணீஸ்வரர்) கோமுக்தீஸ்வரர்
திருக்கோயில்,
(நந்தி நகர்,
நவகோடி சித்தர்புரம்)
திருவாவடுதுறை (மடம்),
குத்தாலம் வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம்.

“இடரினும் தளரினும்*
*எனதுறுநோய்* *தொடரினும் உனகழல்*
*தொழுதெழுவேன்*
*கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை*
*மிடறினில் அடக்கிய வேதியனே*
*இதுவோ எமை ஆளுமா*
*றீவதொன்றெமக் கில்லையேல்*
*அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே”*
எனத்தொடரும், திருஞானசம்பந்தரால் திருப்பதிகம் பாடப்பெற்ற சிறப்புமிகு இச்சிவத்தலம், தேவாரப்பாடல்பெற்ற 276-சிவனாலயங்களில் 99-வது ஈஸ்வரன் தலமாகும்.

திருவாவடுதுறை மடத்தினைச்சேர்ந்த,
சுமார் 2000-ஆண்டுகள் பழமையான இத்தலத்தில்
நம் இனிய ஈசன் சுயம்புலிங்க திருமேனியராய் அருட்காட்சியளிக்க,
அம்பிகை
தனி சன்னதியில்
நின்ற திருக்கோலமாக
வீற்றிருக்கிறாள்.

(சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)

முப்பத்து முக்கோடி தேவர்களும் படர் அரசமரமாக இருக்க,
அம்மரத்தின் கீழ்
நம் ஈசன் திருநடனம் புரிந்த திருத்தலம்,

திருமூலர், திருமந்திரப்பாடல்கள் மூவாயிரம் அருளிய திருத்தலம்.

உலகம் நன்மை பெற
தமது தந்தை நடத்தும் வேள்விக்காக, திருஞானசம்பந்தர்
நம் ஈசனிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்ற திருத்தலம்.

நமது தமிழகத்திலேயே,
உயரமான நந்தியம்பெருமான் அமையப்பெற்ற திருத்தலம்.

(இவரது உயரம் 14-அடி, 9-அங்குலம்.
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஒரே கல்லால் வடிக்கப்பட்டிருக்கும்
நந்தியம்பெருமானின்
உயரம் 14-அடி)

நம் ஈசனே
சகல தோஷங்களுக்கும்
நிவாரணமாக இருப்பதால்,
நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லாத திருத்தலம்.

முசுகுந்த சக்கரவர்த்திக்கு, தியாகேசப்பெருமான்
குழந்தைப்பேறு அருளிய திருத்தலம்
என,
இன்னும் நிறைய, நிறைய பதிவுகள் செய்துகொண்டே போகலாம் இந்த
இறை தலத்தின்
அருமை பெருமைகளைப்பற்றி..,).

ஓம் நமச்சிவாய நமக:

Vastu temple

Loading