ஆயாதி குழிக்கணக்கு வாஸ்து

ஆயாதி குழிக்கணக்கு என்பது நமது சாஸ்திரத்தில் மனையின் வெளிப்புற அகலங்களை அங்குல அளவுகளாக மாற்றி அதனை அன்றைய காலகட்ட அளக்கும் அளவான 34 அங்குல அளவுக்கு வகுத்துக் கொள்ளும் பொழுது அது மானங்குல அளவாக மாறி விடும். ஆக இரண்டு புறங்களிலும் மானங்குல அளவாக மாற்றி பெருக்கும்போது கிடைக்கிற விடையே குழி அளவாகும். இதனை நம்முடைய முன்னோர்கள் சொல்லுவது போன்ற ஆயாதி குழிக்கணக்கு அளவுகளுக்கு கொண்டுவரவேண்டும். அந்த வகையில் மனைப்பொருத்தம் வகையில் கற்பம் என்பது 34 அங்குலத்திற்கு வகுக்க வேண்டும். இதனை  வகுக்கும்போது என்ன மீறி வருகிறதோ அதுவே கர்ப்பம் என்கிற தங்கும் அளவு ஆகும்.

கர்ப்ப பொருத்தம்:

இதில் நம்முடைய முன்னோர்கள் 8 புள்ளிகளை கொடுத்திருக்கிறார்கள் இந்த எட்டு அளவு என்பது ஒற்றைப்படை புள்ளிகள் எல்லாமே நல்ல கற்ப அளவுகள் ஆகும். இரட்டைப்படை மீதம் வரும் பொழுது அதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இதில் 1 சிம்ம மனை
3 கருடமனை.
5 பசு மனை
7 யானை மனை இவைகள் மட்டுமே நல்ல மனைகள் ஆகும்.

இரண்டாவது ஆதாய பொருத்தம்:

இதனை  அளவு 12ல் கழிக்க மீது நிற்பது ஆதாயம் இந்த 12 புள்ளிகளில் அனைத்துமே நன்மை அளவுகள் ஆகும்.

மூன்றாவது செலவு பொருத்தம் 9 ஆல் பெருக்கி பத்தில் வகுத்திட மீதி கிடைப்பது செலவு பொருத்தம் என்று சொல்லக்கூடிய சேடம். அந்த வகையில் நான்கு மீதி வந்தால் புத்திர விருத்தி. மூன்று வந்தாலும் நன்மை. ஆறு வந்தால் ஆரோக்கியம். 8 வந்தால் மகாலட்சுமி வாசம். 10 வந்தால் உத்தமம்.

அடுத்து யோனிப் பொருத்தம் மூன்றாவது எட்டில் வகுக்க யோனிப்பொருத்தம் இதில் இந்த எட்டு புள்ளிகளில் ஒன்றும், மூன்றும், ஐந்தும்  சிறப்பு.

அடுத்து மனை வயதுகணக்கு:
45 வயதுக்கு மேல் இருப்பது சிறப்பு குறைந்த வயது வந்தால் அந்த மனை அளவை தவிர்க்க வேண்டும். அதே போல குழி அளவுகளில் மரணயோகம், மரண சூத்திரம் எந்த இடத்திலும் வரக்கூடாது. இது  தாராபலன் அடிப்படையில் கணிக்கக் கூடிய விஷயம். நல்ல குழி அளவுகளை நீங்கள் தெரிந்து கொண்டால் நல்லது என்பேன். அந்த வகையில் எப்படி மனையடி அளவுகள் இருக்கின்றதோ அதுபோல நல்ல குழி அளவு தெரிந்து கொள்வோம்.

நல்ல ஆயாதி குழிகள்:

  9குழிகள்
13 குழிகள்
17 குழிகள்
21குழிகள்
27குழிகள்
33குழிகள்
37குழிகள்
39குழிகள்
43குழிகள்
51குழிகள்
57குழிகள்
73குழிகள்
77குழிகள்
87குழிகள்
98குழிகள்
99குழிகள்
102குழிகள்
103குழிகள்
109குழிகள்
117குழிகள்
127குழிகள்
129குழிகள்
147குழிகள்
153குழிகள்
159குழிகள்
165குழிகள்
175குழிகள்
187குழிகள்
195குழிகள்
199குழிகள்
207குழிகள்
210குழிகள்
213குழிகள்
217குழிகள்
225குழிகள்
227குழிகள்
229குழிகள்
239குழிகள்
243குழிகள்
249குழிகள்
253குழிகள்.
257குழிகள்.
261குழிகள்.
269குழிகள்.
273குழிகள்.
279குழிகள்.
283குழிகள்.
285குழிகள்.
287குழிகள்.
291குழிகள்.
295குழிகள்.
303குழிகள்.
307குழிகள்.
337குழிகள்.
339குழிகள்.
343குழிகள்.
347குழிகள்.
351குழிகள்.
373குழிகள்.
377குழிகள்.
379குழிகள்.
385குழிகள்.
387குழிகள்.
399குழிகள்.
403குழிகள்.
405குழிகள்.
411குழிகள்.
429குழிகள்.
433குழிகள்.
435குழிகள்.
439குழிகள்.
465குழிகள்.
469குழிகள்.
477குழிகள்.
483குழிகள்.
487குழிகள்.
495குழிகள்.
501குழிகள்.
505குழிகள்.
507குழிகள்.
509குழிகள்.
527குழிகள்.
531குழிகள்.
537குழிகள்.
543குழிகள்.
559குழிகள்.
565குழிகள்.
569குழிகள்.
576குழிகள்.
577குழிகள்.
585குழிகள்.
591குழிகள்.
595குழிகள்.
607குழிகள்.
617குழிகள்.
621குழிகள்.
647குழிகள்.
647குழிகள்.
657குழிகள்.
659குழிகள்.
669குழிகள்.
673குழிகள்.
675குழிகள்.
681குழிகள்.
685குழிகள்.
699குழிகள்.
707குழிகள்.
709குழிகள்.
717குழிகள்.
729குழிகள்.
747குழிகள்.
748குழிகள்.
757குழிகள்.
759குழிகள்.
765குழிகள்.
789குழிகள்.
775குழிகள்.
777குழிகள்.
779குழிகள்.
783குழிகள்.
797குழிகள்.
807குழிகள்.
809குழிகள்.
813குழிகள்.
817குழிகள்.
839குழிகள்.
843குழிகள்.
847குழிகள்.
855குழிகள்.
859குழிகள்.
861குழிகள்.
869குழிகள்.
873குழிகள்.
879குழிகள்.
885குழிகள்.
887குழிகள்.
909குழிகள்.
921குழிகள்.
937குழிகள்.
943குழிகள்.
951குழிகள்.
955குழிகள்.
959குழிகள்.
969குழிகள்.
973குழிகள்.
977குழிகள்.
979குழிகள்.
987குழிகள்.
985குழிகள்.
999குழிகள்.
1005குழிகள்.
1009குழிகள் .

மேற்கண்ட குழி அளவுகளை நீங்கள் உபயோகித்து நல்ல முறையில் இல்லத்தை அமைத்து அதிஅற்புதமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். எக்காரணம் கொண்டும் வெள அளவுகளை மனை அடிக்கு வைக்கிறேன்னு சொல்லி தயவுசெய்து குழி கணக்கில்லாத வீடுகளை கட்ட வேண்டாம். வெளி அளவு மனையடிக்கு வரவில்லை என்றாலும் கூட, நீங்கள் குழிக்கணக்கு பொருத்தி இல்லத்தை அமைத்துக்கொள்ளுங்கள். இதில் சொல்லாது விடுபட்டுள்ள குழி அளவுகளை நீங்கள் உபயோகிக்க வேண்டாம். அப்படியே ஒரு இல்லம் ஏற்கனவே கட்டப்பட்டு இருக்கிறது, அதற்கு நீங்கள் குழி கணக்கு பார்க்கும் பொழுது, மனையடி பொருந்தினாலும் குழி கணக்கு, வயது பொருத்திருந்து, வருமானம் பொருந்தியிருந்தது, கற்பம் பொருந்தவில்லை என்றாலும் கூட கொஞ்சம் வெளியில் சென்று தங்கி விட்டு பிறகு வருகிற அமைப்பில் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் மரண சூத்திரம், மரணயோகம் இருக்கிற அமைப்பு எப்போதும் வேண்டாம். மீண்டும் வேறொரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.

 19 total views,  2 views today

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *