அக்னி நட்சத்திரம் 2022

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் எனக்கு வருகின்ற தொலைபேசி அழைப்பு சார்ந்து இப்பதிவு.

அக்னி நட்சத்திர காலங்களில் வீடு சார்ந்த வேலைகளை செய்யலாமா?. என்கிற கேள்விகளுக்கு பதிலை இப்பதிவு வழியே தெரிந்து கொள்ளுங்கள்.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

சூரியன் பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் தொடக்கம் செய்யக்கூடிய  நாள்களில் இருந்து தொடர்ந்து 25 நாட்கள்  தான் அக்னி நட்சத்திரம்.இந்த ஆண்டு மே 4 தொடங்கி மே 28 வரை இருக்கும்

இந்த காலம் வடகிழக்கு பருவமழை காலத்திற்கும் தென்மேற்கு பருவமழை காலத்திற்கும் இடைப்பட்ட காலமாகும்.

பஞ்சாங்கத்தின் படி 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கத்தை விட இந்த நாட்களில் சூரிய பகவான் அதிக உஷ்ணத்தை கொடுக்க கூடிய நாட்களாக இருக்கும்.

இந்த காலப்பகுதியை கத்திரி வெயில் என்றும் அழைப்பார்கள்.

அந்த வகையில் அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடியவை பற்றி பார்ப்போம்.

பூணுல் போடுவது .

திருமண பொருத்தம்.

மாப்பிளை பெண் வீட்டுக்கு செல்வது.

திருமண நிச்சயம்.

ஒப்புதல் தாம்பூலம்.

திருமணம் செய்ய.

மஞ்சள் நீராட்டு விழா.

யாகங்கள்.

பொதுசேவை சத்திரங்கள் கட்ட.

வாடகை வீடு குடி போக.

மேற்கூறிய செயல்களை செய்யலாம்.

அதுபோல அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடாத விசயங்களை தெரிந்து கொள்வோம்.

செடிகள், மரங்கள் வெட்டுவது கூடாது.

நிலம், வீடு வகைகள் ஆரம்பிக்க கூடாது. (வீடு கட்டுவது)

விதை விதைத்தல்.

கிணறு,கூபம் வெட்டுவது.

புதுமனை புகுதல்.

தீட்சை எடுத்தல் .

மொட்டை அடிப்பது.
காது  குத்துவது.

கோவில் கும்பாவிஷேகம் செய்வது

கூரை போடுவது.
கதவு நிலவு நிறுத்துவது. ஆக மேற்கூறிய காரியங்களை அக்கினி நாட்களில் செய்ய கூடாது.

மீண்டும் நல்ல கருத்தோடு சந்திப்போம். என்றும் சமூகம் சார்ந்த வாஸ்து ஜோதிட பணியில் அருக்காணி ஜெகன்னாதன்
ph:9941899995

Loading