ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 15-4-2026 பராபவ வருடம் சித்திரை மாதம் 2ந் தேதி. புதன்கிழமை. இரவு 10.33 வரை திரயோதசி திதி. பிறகு தே. சதுர்த்தசி திதி. மாலை 3.10 வரை பூரட்டாதி நட்சத்திரம். பிறகு உத்திரட்டாதி. யோகநாள் . கீழ்நோக்குநாள்.
ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm
வாட்ஸ்அப் தொடர்பில்:
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
0 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 00
நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்.
மத்ஸிய ஜெயந்தி (Matsya Jayanti) என்பது விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் (மீன் வடிவம்) தோன்றிய நாளாகும். இது இந்து நாட்காட்டியின்படி, சைத்ர மாதத்தில் (மார்ச்/ஏப்ரல்) சுக்ல பக்ஷ திருதியை அன்று கொண்டாடப்படுகிறது. பெரும் பிரளயத்தில் வேதங்களையும், மனிதகுலத்தையும் காப்பாற்றிய இந்த அவதாரத்தை விஷ்ணு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், விரதங்கள் மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்துடன் பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
Today Vastu Tips:
வாசலுக்கு நேராக மரங்களோ தூண்களோ சுவரின் முனை குத்தல்களோ எக்காரணம் கொண்டும் இருக்கக் கூடாது. ஆனால் அதே சமயம் ஒரு சாலை இருக்கிறது அதனை கடந்து அந்த மரம் இருக்கிறது மற்றொரு வீட்டில் முனை குத்தல் இருக்கிறது என்று சொன்னால் அதைப்பற்றி கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. இதை ஒரு சிலர் பயப்படுத்தும் விதமாக பதிவுகளை இடுவார்கள். அதைப்பற்றி நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. இது எங்கு உங்களுக்கு பாதிப்பை கொடுக்கும் என்று சொன்னால் சாலை இல்லாத இடங்களில் அல்லது, ஏதோ ஒரு காரணமாக உங்கள் வாசலை பக்கத்து வீட்டின் சுவர் முனை இருக்கும் அல்லது, பக்கத்து வீட்டின் மரங்கள் உங்களுடைய வாசலுக்கு நேராக வரும் அல்லது, புதிதாக மரம் வைத்திருப்பார்கள் அது வளர்ந்து குத்தலாக வரும், அப்படி வருகின்ற போது தான் அது குத்தலாக வேலை செய்யும். மற்றபடி பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. வாஸ்து வகையில் உண்மை எது? பொய் எது? என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் அதனை சரி பார்த்துக் கொள்வது நலம்.
- வாசலுக்கு நேராக மரம்,
- மின்சார தூண் / லைட் போல்,
- எதிரில் உள்ள வீட்டின் சுவர் முனை (corner),
- குறுகிய தெருவில் நேராக வரும் சாலை முடிவு,
___________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .
வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY
#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai