Chennai Vastu Consultant Tips

Vastu Consultant Tips

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 14.1.2024 சோபக்ருது மார்கழி மாதம். 29ந் தேதி ஞாயிறு காலை 8.01 வரை வ.திருதியை திதி.பிறகு நாளை அதிகாலை 5.01 வரை (திங்கள்)  வ.சதுர்த்தி திதி. பிறகு பஞ்சமி திதி. காலை 10.10 வரை அவிட்டம் பிறகு சதயம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

இன்று காலை 10.10 மேல் நாள் முழுவதும்  யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பேராசை
ரிஷபம்- நிறைவு
மிதுனம்- சுகம்
கடகம்- பகை
சிம்மம்- சலனம்
கன்னி- குழப்பம்
துலாம் – சோதனை
விருச்சிகம் – பரிவு
தனசு- நட்பு
மகரம்- எதிர்ப்பு
கும்பம்- ஆதாயம்
மீனம் – போட்டி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

வீடு கட்டும் பொழுது அந்த  இடத்தை சுத்தம் செய்யும்போது சல்லியம் பார்க்க வேண்டும் என்று நிறைய மக்கள் சொல்லுவார்கள். பழைய வாஸ்து நபர்கள் அந்த வார்த்தையை சொல்வார்கள். ஒரு இடத்தில் எலும்புகள் புதைந்து இருந்ததோ, புதைந்து இருந்தாலோ ஓடுகள் இருந்தாலோ,கரி இருந்தாலோ பழைய கட்டிடத்தின் சிதைவுகள் இருந்தாலோ, வீட்டிற்கு கஷ்டங்களை கொடுக்கும் கஷ்டப்படுவார்கள் என்று சொல்வார்கள். சகலதோஷங்களும் இருக்கும் என்று சொல்வார்கள்   நான் சொல்கிற விஷயம் என்னவென்றால் வாஸ்து சாஸ்திரத்தில் இது எல்லாம் இருக்கிறதா? என்று சொன்னால் நான் இல்லை என்று சொல்லுவேன்  ஏனேன்று சொன்னால் இந்த பூமியே போர்க்களம் தான். பூமியில் இருக்கிற நிலக்கரி ஒரு காலத்தில் அழிவுகளின் சிதைவுதான் என்று சொல்ல வேண்டும். அந்த இடத்தில் அதன் மேல் அந்த பூமியின் மேல் யாருமே வாழவில்லை என்று சொன்னால் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று சொல்லுவேன். அந்த வகையில் சில வாஸ்து நிபுணர்கள் சொல்வார்கள் பூமி சுத்தம் செய்வது பழைய வீட்டை புதுப்பிக்கும் போது புதிய வீடு கட்டும்போது மனைகள் இருக்கிற பழைய மண்ணைத் தோண்டி புதிய மண்ணின் நிரப்ப வேண்டும் என்று சொல்வார்கள். இந்த விஷயம் இந்த வீடு கட்டும் மக்களுக்கு வீண் செலவுதானே தவிர வேற எதுவும் கிடையாது  எப்படி இருந்தாலும் நாம் மேல்மட்டம் செய்வதற்கு புதிய மண் கொட்டித்தான் ஆகவேண்டும். ஆக நான் சொல்லுகிற விஷயம் வாஸ்து சாஸ்திர விதிகளின்படி சுடுகாட்டில் இல்லத்தை கட்டினால் கூட சரியான முறையில் வாஸ்துப்படி கட்டினால் எந்த விதமான தீமைகளும் இருக்காது என்பதுதான் எனது பதிலாக இருக்கும். ஆக இந்த இடத்தில் இந்த உலகத்தில் இன்றைய காலகட்டம் வரை உயிர்கள் பிறப்பதும், உயிர்கள் இறப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆக இயற்கையின் காரணமாக பூமி அதிர்ச்சி, புயல் வெள்ளம் ஆகியவற்றால் உயிர்கள் அழிகின்றன. அவற்றின் எலும்புகள் அந்த இடத்திலேயே  விழுந்து விடுகின்றன. ஆக எவ்வளவு ஆழத்தில் உள்ள ஆழத்தில் நீங்கள் பூமியை தோண்டினாலும் அந்த இறப்பு கழிவுகளை நீங்கள் எடுக்க முடியுமா என்று சொன்னால் முடியாது என்று தான் சொல்ல முடியும். பழைய வாஸ்து மனிதர்கள் சொல்லுவார்கள் வீடு கட்டுகிற அந்த கட்டிட உரிமையாளர் அவருடைய இடுப்பு வரையிலும் கழுத்து வரையிலும், எலும்பைக் கண்டு எடுக்க ஆழத்தை குறிப்பிடுவார்கள். இதற்கென்று எந்த முறையும் இல்லை என்பது தான் எனது பதில். ஆக இன்றைய வளைகுடா நாடுகளில் பெட்ரோலிய கழிவுகளும் மனிதனின் மரங்களின் கழிவுகளை உயிரின் எச்சங்களே. அதேபோன்று நிலக்கரி இருக்கிற இடமும் மரங்களும் மனிதர்களின் எச்சங்களே. இன்றைக்கு ஜப்பானில் இருக்கிற நாகசாகி  நகரத்தில் இறந்த உயிர்களின் மேல்தான் நகரங்களை அமைத்து வாழ்கின்றார்கள். ஆக இந்த விஷயத்தை வாஸ்துவோடு இணைத்து பார்ப்பது சரியானது கிடையாது என்று சொல்லுவேன். வாஸ்து முறைப்படி நீங்கள் வீடு கட்டி எங்கு வேணாலும் கட்டலாம்  இந்த சல்லியம் பார்ப்பது, எலும்பு பொறுக்குவதெல்லாம் தேவையில்லாத ஆணி புடுங்குகிற விஷயம் என்று வாஸ்து வகையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Loading