Vastu mistakes people make
வாஸ்து விஷயத்தில் நிறைய மக்கள் தவறான கருத்துக்களை மனதோடு வைத்திருக்கிறார்கள் அல்லது அவர்கள் சார்ந்த மக்களோடு சேர்ந்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லுவேன். எப்படி என்று சொன்னால் ஒரு விஷயம் தவறாக இருக்கும் அதை உண்மை என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். எப்படி என்று சொன்னால் ஒரு வீட்டில் மனையடி குழி கணக்கு சார்ந்த விஷயங்கள் 100 சதவீதம் உண்மையா? மனையின் வெளி அளவுகள் உள் அளவுகள் இதனை பொருத்தி ஒரு கட்டிடத்தை கட்ட வேண்டுமா? என்கிற நிறைய சந்தேகங்கள் அவர்களுக்கு இருக்கும். அதே சமயம் அது உண்மை என்று நினைத்துக் கொண்டு அதன்படி ஒரு இல்லத்தை கட்ட வேண்டும் என்பார்கள். ஒரு சில இடங்களில் மனை அடி தவிர்த்து ஒரு சில இடங்களில் இடம் விட வேண்டும். அதனால் மனையடி முக்கிய படுத்தி நீங்கள் கட்டிடத்தை அகலப்படுத்தி கட்ட வேண்டாம் மனையடி என்கிற விஷயத்தை தவிர்த்து விட்டு கிழக்கிலும் அல்லது வடக்கிலும் இடம் கண்டிப்பாக வேண்டும் இந்த இடத்தில் மனையடி உண்மை என்று நம்பிக் கொண்டு, நீங்கள் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ இடம் விடாது ஒரு கட்டிடத்தை கட்டக்கூடாது என்று சொல்லுவேன். அந்த இடத்தில் அதை நம்ப மாட்டார்கள். இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் ஒரு தவறான விஷயத்தை உண்மை என்று நம்பிக் கொண்டும், உண்மையான விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை ஆனால் எடுத்துக் கொள்வதும் வாஸ்து சாஸ்திர வகையில் தவறு கிடையாது. அந்த மனிதர்கள் மீதுதான் தவறு என்று சொல்வேன்.
இது எங்கே அவர்களுக்கு வேலை செய்து கொண்டிருப்பது என்று சொன்னால், அவருடைய நேரமும் அவருடைய கர்மாவும் ஒரு நல்ல வீட்டை அவர்களுக்கு கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது என்று தான் இந்த இடத்தில் சொல்லுவேன். ஆக இந்த இடத்தில் என்னைப்போல வாஸ்து சொல்லுகிற மக்களின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று சொன்னால் தமிழ்நாட்டில் ஒரு பத்து நபர்கள் முக்கியமான வாஸ்து நபர்கள் இருப்பார்கள். அந்த பத்து மனிதர்களின் யாரவது ஒருவரை கருத்தைக் கேட்டுக் கொண்டு நீங்கள் முடிவு செய்யுங்கள் என்று சொல்வேன். அதே சமயம் எக்காரணம் கொண்டும் ஜோதிடத்தை பார்க்கிற வாஸ்து நிபுணர்களை அணுக வேண்டாம். அந்த இடத்தில் தவறு உங்களுக்கு நடந்து விடும். வாஸ்துவை முழுதாக புரிந்து கொண்டு ஜோதிடம் பார்க்கிற வாஸ்து மனிதர்கள் அதாவது, ஆனால் இந்த இடத்தில் ஒரு விஷயம் யாராக இருந்தாலும் ஒரு விசயத்தில் ஒருவர் பிரபல்யமாக இருக்க வேண்டும். ஜோதிடம் பார்த்துக் கொண்டும், வாஸ்து பார்த்துக் கொண்டும், ஒருவர் எண் கணிதம் பார்த்துக் கொண்டும் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அவர் பணத்திற்காக அந்த வேலையை, ஆற்றில் ஒருகால் சசேற்றில் ஒரு கால் வைத்துக் கொண்டு மற்றும் உங்கள் வாழ்க்கையை கெடுத்து கொண்டிருக்கிறார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது முழுக்க முழுக்க ஒரு விழிப்புணர்வு பதிவு. நானாக இருந்தாலும் சரி,வேறு யாராக இருந்தாலும் சரி ஒரு வேலையில் ஒழுங்காக இருக்க வேண்டும் . ஏன் என்று சொன்னால் அந்த ஒரு துறையில் ஒழுங்காக நீங்கள் சேவை செய்தீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு அதிலேயே நேரம் என்பது இருக்காது. ஆக நேரம் இல்லாத மனிதர்கள் தான் எல்லா துறைகளிலும் காலை வைத்துக்கொண்டு உழப்பிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் பணம் பண்ணுவதற்காக என்று தான் சொல்வேனே தவிர வேறு எதுவும் இதில் காரணம் கிடையாது. அப்படிப்பட்ட மனிதர்களிடம் ஒருவர் மாட்டும் பொழுது அவருடைய நேரம் தவறாக இருக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
I would say that many people have misconceptions about Vastu or they are with their dependent people. If you say how, something is wrong and they think it is true. How is it 100 percent true in a house in a house? Do you want to build a building by matching the outer dimensions of the plot and the internal dimensions? They have many doubts. At the same time, they say that it is true and build a house accordingly. In a few places, space should be left in a few places, excluding the land. Therefore, you should not widen the building and build it, but you must avoid the matter of Manaiyadi and believe that the land is true in the east or in the north. They will not believe it in that place. What I am saying at this point is that there is no mistake in Vastu Shastra, believing a wrong thing to be true and taking the real thing seriously. I would say that it is the fault of those people. If we tell them where this is working for them, I will say at this point that his time and his karma push them to a situation where they cannot give them a good home. So if you say that you cannot accept the opinion of the people who say Vastu like me in this place, there will be ten important Vastu people in Tamil Nadu. I would say you decide by listening to any of those ten men. At the same time, do not approach Vastu experts who see astrology for any reason. A mistake will happen to you in that place. Vastu people who fully understand Vastu and see astrology, but one thing in this place, one should be famous in one thing. If a person says that there is a person who is looking at astrology, Vastu, and someone is looking at numerology, you should know that he is ruining your life by keeping one foot in the river for money. This is an entirely awareness post. Whether it is me or anyone else, one should be in order in a job. If you say why you have served properly in that one field, you will not have time in it. So it is the people who do not have time to plow in all fields. There is no reason for this except that they say that they are meant to make money. When a person does not fall for such people, it should be assumed that his time will be wrong.