Vastu In Chennai Tips
ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
chatgpt #AI #Deepseek-Coder finetune #geminiai
தினசரி நாள்காட்டி 16.2.2025 குரோதி வருடம் மாசி மாதம் 04 ந் தேதி. ஞாயிற்றுக்கிழமை. விடியற்காலை 2.17 மணி வரை தே.சதுர்த்தி திதி பிறகு பஞ்சமி திதி. விடியற்க்காலை 4.16 மணி வரை அஸ்தம் பிறகு சித்திரை நட்சத்திரம். யோகநாள் . சந்தரஷ்டமம் : சதயம் பூரட்டாதி
ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice :
எப்படி ஈசானிய பாரத்தை வாஸ்துவில் குற்றம் என்று சொல்கின்றோமோ அதுபோல ஒரு சில நேரங்களில் அக்னி மூலையும் பாரத்தில் இருக்கிற நிகழ்வாக மாறிவிடும். இந்த எடை என்கிற விஷயத்தை வாயு மூலையோடு தொடர்பு படுத்தியும்,நைருதி மூலையோடு தொடர்பு படுத்தியும் பார்க்க வேண்டும். அக்னி மூலையில் படிகள் வரலாம். அதே சமயம் அக்னி மூலையில் உட்பகுதி படிகள் வருகின்ற பொழுது அது எடை என்கிற நிகழ்வுக்கு சென்று விடும். அப்படி இருக்கிற வீடுகளில் பெண் குழந்தைகள் இருப்பதை தடை ஏற்படுத்தும். அதே போல ஆக்னேய வெட்டு என்பது கூட ஒரு கட்டிடம் வளர்ந்து அது பாரத்தை கொடுத்து விடும். அதேபோல அக்னி மூலை மாடியில் தண்ணீர் தொட்டிகளையும் அமைக்க கூடாது. அதுவும் பாரம் சார்ந்த நிகழ்வு அமைந்துவிடும். அதேபோல அக்னி மூலை என்பது கிழக்கோடு இணைந்து இருக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்ற காரணத்தால் அந்த மூலைக்கு மட்டும் ஒரு கூண்டு அமைப்பை ஏற்படுத்தி அதாவது படிகளுக்கு அல்லது அந்த மூலையில் மட்டும் ஒரு அறையை ஏற்படுத்தும் போது அது கிழக்கு பாரமாகத்தான் பார்க்கப்படும். அதையும் தவிர்க்க வேண்டும். அதேபோல கிழக்கும் தெற்கும் இணைந்த ஒரு மூலையில் அறைகளை ஏற்படுத்தக் கூடாது. அப்படி ஏற்படுகின்ற போது அது அக்னி மூடலாக பார்க்கப்படும். அதேபோல வீட்டின் கிழக்கு சுவரையும், கிழக்கு சுற்றுச்சுவரையும் இணைத்து படிகள் இருக்கும் அமைப்பாக கட்டிடம் கட்டக்கூடாது. அதுவும் அக்னி மூடலாக பார்க்கப்படும். அதேசமயம் அக்னி மூலையில் கழிவறைகள் இருந்தால் பெண்களின் உடலில் நோய் கூறுகள் உறுவாக்க துணை புரியும். இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு ஒரு கட்டிடத்தை நிர்மானம் செய்ய வேண்டும். Vastu In Chennai Tips,Vastu tips for homes in Chennai,Vastu Tips for a Harmonious Main Entrance in Your New Home,Which facing house is good in Chennai?,
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995
