ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
இன்று #தன்வந்திரி தினம்
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.
தினசரி நாள்காட்டி 3.11.2023 சோபக்ருது ஐப்பசி மாதம் . 17 ந் தேதி . வெள்ளிக்கிழமை இரவு 11.09 மணி வரை சஷ்டி திதி. பிறகு தே.சப்தமி திதி. இன்று நாள் முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம்.
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .
____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – குழப்பம்
ரிஷபம்- நற்செயல்
மிதுனம்- ஏமாற்றம்
கடகம்- வெற்றி
சிம்மம்-உதவி
கன்னி- சினம்
துலாம் – மறதி
விருச்சிகம் – ஓய்வு
தனசு- துயரம்
மகரம்- போட்டி
கும்பம்- சுகம்
மீனம் – இன்பம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
_________________________
சென்னை வாஸ்து கருத்து:
Chennai Vastu Tips :
பணம் சார்ந்த நிகழ்வு என்பது ஒரு இடத்தின் தன்மையை பொறுத்து அந்த இடத்தின் முன்னேற்றம் என்பது இருக்கும். இது கொஞ்சம் ஜோதிடத்தில் இரட்டைப்படை பாவங்கள் திசா புத்திகளாக நடத்தும் பொழுது பணம் வருகிறது என்று சொன்னாலும், அதற்கு சப்போர்ட் செய்கிற விதமாக வாஸ்துவின் வகையில் ஒரு சில விஷயங்கள் இணைந்து வர வேண்டும். அந்த வகையில் வீடு வாடகைக்கு செல்லும் பொழுது அல்லது ஒரு புதிய வீட்டை வாங்கும் பொழுது அதாவது ஏற்கனவே வீடு கட்டி கொஞ்ச நாள் வாழ்ந்திருப்பார்கள். பிறகு அவர்கள் வெளியூர் செல்வதற்காகவோ அல்லது பெரிய வீடு கட்டுவதற்காகவோ ஒரு இல்லத்தை விற்றுவிட்டு புதிய வீடு கட்டுவதற்காக விற்பனை செய்வார்கள். அப்படி விற்பனைக்கு வருகிற வீடுகளை வாங்கும் பொழுது ஒரு சில விஷயங்களில் கவனம் தேவை. அந்த வகையில் மற்றவர்கள் வாழ்ந்த வீட்டில் குடி புகும் முன்பு அங்கு வாழ்ந்தவர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த இடத்தில் எப்படி வாழ்ந்தார்கள் நல்ல பணத்தோடு பலமாக வாழ்ந்தார்களா?. உறவுகளோடு பலமாக வாழ்ந்தார்களா? அவர்களுடைய வாரிசுகள் எப்படி இருக்கிறார்கள்? பணம் சார்ந்த நிகழ்வுகளில் எப்படி இருக்கின்றது அல்லது, வங்கியின் மூலமாக இந்த வீடு வருகிறதா?. இப்படி பல கட்டங்களில் நம் ஆய்வு செய்ய வேண்டும் நீங்கள் மீண்டும் அதே அமைப்பில் அந்த இடத்திற்கு செல்லும் பொழுது , அதன் வேலையைத்தான் அது வைத்திருக்கும். ஆக நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். ஏதோ ஒரு கணக்கில் அந்த இல்லத்தை வாங்கி விட்டீர்கள் ஆனால் உள்ளே நுழைவதற்கு முன்பு ஒரு வாஸ்து ஒருவரை சரியான முறையில் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்து செல்ல வேண்டும்.. அந்த வகையில் அவர்களுடைய வாழ்ந்தவர்களின் வரலாற்றில் நன்றாக செல்வ செளிப்பாக வாழ்ந்தார்கள் என்றால் தாராளமாக உள்ளே செல்லுங்கள்.இந்த இடத்தில் ஒரு வாஸ்து நிபுணர் கூட தேவை கிடையாது ஆனால், அவர்களின் பணத்தில் பாதிப்பு இருப்பது என்றால் நீங்கள் சோதனை செய்து கொள்ள தான் உள்ளே செல்ல வேண்டும். இல்லை என்றால் உங்களுடைய வாழ்க்கையிலும் பணம் சார்ந்த பாதிப்பை நிச்சயம் கொடுத்து விடும்.
மேலும் எனது வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .
