Vastu in chennai

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 27-4-2026 பராபவ வருடம் சித்திரை மாதம் 14ந் தேதி.
திங்கட்கிழமை. மாலை 6.17 வரை ஏகாதசி பிறகு த்வாதசி திதி. இரவு 9.04 வரை பூரம் பிறகு உத்திரம் நட்சத்திரம். யோகநாள் கீழ்நோக்குநாள்.

 

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3p

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

 

வாட்ஸ்அப் தொடர்பில்:

https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
8 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 52
நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

 

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்.

மோகினி ஏகாதசி 2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை (வைசாக சுக்ல ஏகாதசி) அனுசரிக்கப்படுகிறது. விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுத்த தினமாக இது போற்றப்படுகிறது. இந்த நாளில் விரதமிருப்பது, செய்த பாவங்களைப் போக்கி, மன அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. இது அமிர்தம் கடையும் நிகழ்வோடு தொடர்புடைய ஒரு புனிதமான நாளாகும்

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

Today Vastu Tips:

எந்த வீடு நாம் வாங்குவதாக இருந்தாலும் வாஸ்து முழுவதுமாக வேண்டும் என்று சொன்னால் நீங்கள் எதிர் எதிர் நிலைகளை கவனிக்க வேண்டும். அதாவது கிழக்குக்கு மேற்கு பார்க்க வேண்டும். வடக்குக்கு தெற்கு பார்க்க வேண்டும். தென்கிழக்கு இணைத்து வட மேற்கு பார்க்க வேண்டும். தென்மேற்கை வடகிழக்கோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வட கிழக்கை வட மேற்கோடும், தென்கிழக்கு தென்மேற்கோடும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்படி ஒப்பிட்டு பார்த்து மிகுந்த யோகத்தை கொடுக்கிற வீடாக மாற்ற வேண்டும் என்று சொன்னால், அது முழுக்க முழுக்க அரண்மனை என்று சொல்லக்கூடிய ஒரு கட்டிடத்திற்கு மட்டும் பொருந்தும். அந்த அரண்மனை சார்ந்த வாஸ்து விஷயங்களை கொண்டு வருவதற்கு இரண்டு விஷயங்கள் நமக்கு தேவைப்படும். ஒன்று பரந்த இடங்கள் இருக்க வேண்டும். அல்லது நமக்கு அருகில் பெரிய அளவில் ஒட்டிய அமைப்பில் யாரும் இருக்கக்கூடாது. இந்த அமைப்புதான் முழுக்க முழுக்க வாஸ்து சார்ந்த விஷயத்தை உங்களுக்கு கிடைக்கச் செய்யும் என்று சொல்லுவேன். அல்லது இயற்கையாக பாசிட்டிவான இடங்களில் காலியாகவும், நெகட்டிவான இடங்களில் எடையாகவும் இருந்தால் மிகுந்த யோகத்தை செய்யும். இதுவும் உங்களோடு சேர்ந்த கர்மா தான். கொஞ்சம் புத்தியை செலவழித்தால் நிச்சயமாக நல்ல வீடு எல்லா இடங்களிலும் கிடைக்கும். இதற்கு இந்த அறிவு இருக்கும் வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பணத்தையும் கொஞ்சம் செலவு செய்ய வேண்டும்.

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:

https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview  #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!