வாஸ்து வகையில் மூடப்பட்ட படிக்கட்டு
வாஸ்து வகையில் ஒரு சில விளக்கங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வீட்டின் வெளிப்புறம் வருகிற படிக்கட்டுகளை எக்காரணம் கொண்டும் மூடப்பட்டு கட்டக்கூடாது. வெளிப்புற படிக்கட்டுகள் திறந்தவெளி படிக்கட்டுகளாக இருக்க வேண்டும். அதாவது வடமேற்கு பகுதியில், தென்கிழக்கு பகுதியில், ஏன் தென்மேற்கு பகுதியில் தூண் இல்லாமல் தொங்கும் அமைப்பில் படிகளை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் தெற்கு சார்ந்த, மேற்கு சார்ந்த சாலைகள் வரும் பொழுது தென்மேற்கு பகுதியில் மூடப்பட்ட அமைப்பில் கூண்டு அமைப்பு ஏற்படுத்தி படிகளை சேயற்க்கையான ரெடிமேட் படிகளை அமைக்கும் பொழுது அது யோகத்தை கொடுக்கிற இடமாக மாறிவிடும். எப்பொழுதுமே வாழ்க்கைக்கு வெற்றியைக் கொடுக்கும் வட கிழக்கு மூலையில் வீட்டின் உள்ளே இருந்தாலும் சரி, வீட்டிற்கு வெளியில் இருந்தாலும் சரி படிக்கட்டு என்பது எக்காரணம் கொண்டும் வரவே கூடாது. வெளி படிக்கட்டுகளுக்கு கீழே கழிப்பறை மற்றும் அறைகளை அமைப்பது என்பது தவறு. அப்படி அமைக்க வேண்டும் என்று சொன்னால், வீட்டோடு இணைந்து இருக்காமல் அமைப்பதுதான் சரியான ஒரு முறை . ஆக படிக்கட்டுகள் அமைக்கும் போது வாஸ்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அது வெளி படிக்கட்டுகளாக இருந்தாலும் சரி, உள் படிக்கட்டுகளாக இருந்தாலும் சரி.
Let us know some explanations in this post in terms of Vastu. Stairs coming from outside the house should not be closed for any reason. External stairs should be open stairs. That is, stairs can be built in a hanging structure without pillars in the northwest, southeast, or southwest. But when the roads facing south and west are coming, a cage structure can be made in a closed structure in the southwest and ready-made stairs can be built. It becomes a place that gives yoga. Stairs should never come in the northeast corner of the house, whether inside or outside the house, which always gives success in life. It is wrong to build toilets and rooms under the external stairs. If you say that it should be built like that, then the right way is to build it without being attached to the house. Therefore, it is mandatory to follow the rules of Vastu while building stairs. Whether it is external stairs or internal stairs.