ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
தினசரி நாள்காட்டி 6.2.2025 குரோதி வருடம் தை மாதம் 24ந் தேதி. வியாழக்கிழமை. இரவு 10.55 மணி வரை வ.நவமி திதி பிறகு தசமி திதி. இரவு 7.16 மணி வரை கிருத்திகை பிறகு ரோகிணி நட்சத்திரம். யோகநாள் குறைவு. சந்தரஷ்டமம் : சித்திரை சுவாதி
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice :
ஒவ்வொரு தொழில் செய்கிற மக்களுக்கும் ஒவ்வொரு வகையாக அவர்களுடைய வீடு என்பது இருக்கும். நாம் இந்த இடத்தில் வாஸ்து விதிகளுக்கு அவர்களுடைய பழைய வீட்டை மாற்றுகிற பொழுது அவர்களுடைய தொழிலிலும் அதன் தாக்கம் என்பது இருக்கும். ஆக அப்படி மாற்றுகின்ற பொழுது அதில் வேகம் கூடலாம் அல்லது, குறையலாம். மற்றொரு விஷயம் வீட்டோடு தான் தாயாரையும் இணைத்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு மாற்றங்கள் செய்கின்ற பொழுது வீட்டை இடிக்கின்ற பொழுது வீட்டை விதிகளுக்கு, வாஸ்து விதிகளுக்கு கொண்டு வருகிற பொழுது அகம் சார்ந்த நிகழ்வு, புறம் சார்ந்த நிகழ்வு என்கிற இரண்டு விஷயங்களை வைத்திருக்கிறது. இந்த இடத்தில் ஜோதிடத்தோடும் நினைத்து பார்க்க வேண்டும் என்பேன். இந்த இடத்தில் எனது கிருஷ்ணமூர்த்தி பத்ததியின் விதிகள் கொண்ட சார ஜோதிட சக்ரவர்த்தி ஜோதிட குருநாதர் திரு. தேவராஜ் ஐயா அவர்கள் ஒரு வார்த்தையை சொல்வார்கள். எல்லா கிரகங்களும் நல்ல கிரகங்களே. எல்லா கிரகங்களும் கெட்ட கிரகங்களே என்பார்கள். இந்த இடத்தில் ஒரு கிரகத்தின் செயல் வடிவம் என்பது நல்ல பத்து விஷயங்களை கொடுக்கும். அதன் தவறுகளும் இரண்டு விஷயங்கள் இருக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் வீடு நிலம் வாகனம் என்று சொன்னால் ஒரே நான்காம் பாவத்தில் வருகிற விஷயம். ஆக ஒரு வீட்டை வாஸ்து மாற்றங்கள் செய்கின்ற பொழுது, அது ஒரு சில நேரங்களில் எதிர்மறை பலன்களாகநாம் வைத்திருக்கும் வாகனத்தை பாதிக்கும் அல்லது , வீட்டில் இருக்கிற ஒருவருடைய தாயாரை பாதிக்கும். இதை கவனத்தில் கொண்டு ஒரு வீட்டு மாற்றத்தை செய்வது நல்லது என்று சொல்லுவேன். ஒரு சில இடங்களில் அம்மா இறந்து விட்டார்கள் சமாதி கட்ட வேண்டும் கொஞ்சம் வாருங்கள்.சாமாதிக்கு வாஸ்து பார்க்க வேண்டும் என்பார்கள். இந்த இடத்தில் வீட்டோடு இணைந்த விஷயமாக இதனை பார்க்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995