ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
தினசரி நாள்காட்டி 2.2.2025 குரோதி வருடம் தை மாதம் 20ந் தேதி. ஞாயிற்றுக்கிழமை. காலை 9.16. மணி வரை வ.சதுர்த்தி திதி பிறகு வ.பஞ்சமி திதி.இரவு 12.45 மணி வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி நட்சத்திரம். யோகநாள் .சந்தரஷ்டமம்:பூரம்.
ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice :
எனது வாஸ்து அறிவு எங்கு தோன்றியது என்று சொன்னால் முதன் முதலில் கவுரு திருப்பதி ரெட்டி ஐயா அவர்களின் வாஸ்து சாஸ்திர வாஸ்துவங்கள் என்கிற புத்தகம் எனக்கு ஒரு சில ஐடியாக்களை கொடுத்தது என்று சொல்லலாம். அந்த புத்தகத்தில் அவரும் அவருடைய அண்ணனும் தங்களுடைய பூர்வீக வீட்டை இரண்டாக பிரித்துக் கொண்டிருக்கிற போது திருப்பதி ஐயா அவர்கள் தனது வீட்டில் வடக்கு பக்கத்தில் இரண்டு அடி அகலம் கூரையை பிரித்து தனியாக சுவர் எழுப்பி கொண்டார் என்பதை சொல்லி இருக்கிறார். ஆக எப்பொழுதுமே வடக்கு என்பது பிரதானம் வடக்கை முதன்மைப்படுத்தி ஒரு இல்லத்தை அமைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் கிழக்கில் பக்கத்தில் உள்ள வீட்டோடு ஒட்டி இருக்கின்றதா? அதனையும் இரண்டு அடிகளை பிரித்து சூரியனின் ஒளி உள்ளே விழுவது போல ஒரு அமைப்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதுதான் முதல் படி. இதற்கு முன்பு எப்படி அந்த வீட்டில் வசித்தீர்கள் அதாவது வடக்கு மூடப்பட்ட, கிழக்கு மூடப்பட்ட வீடுகளில் எப்படி வசித்தீர்கள் என்பதை நினைவு கூர்ந்து பாருங்கள். பிரித்த பிறகு இரண்டு வருடங்களுக்கு பிறகு எப்படி வாழ்ந்தீர்கள். பிரிப்பதற்கு முன்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு எப்படி வாழ்ந்தீர்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்த்து வாஸ்து சார்ந்த சாத்திரத்தை எப்படி பலன் எடுக்கலாம் என்பதை தெரிந்து கொண்டு ஒரு மாற்றத்தை செய்யுங்கள். நான் வாஸ்து பார்க்க போகிற இடங்களில் உடனே அதை இடியுங்கள் இதை இடித்து விடுங்கள் என்று சொல்ல மாட்டேன். முதலில் இதை மட்டும் செய்யுங்கள். இதை செய்த பிறகு கொஞ்ச நாள் பாருங்கள். நீங்களே அடுத்த வேலையை செய்து விடுவீர்கள் என்று சொல்லுவேன். ஆக வாஸ்து என்பது உங்களுக்கு செலவு வைக்கிற விஷயம் கிடையாது பணத்தை கொடுக்கிற விஷயம்.
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995