வாஸ்து சார்ந்த விஷயத்தில் முதலில் செய்ய வேண்டிய வேலை என்பது ஒரு வரைபடம் தயாரிப்பது. அந்த வரைபடம் தயாரிக்கிற நிகழ்வு என்பது ஒரு ஆர்க்கிடெக்ட், இன்ஜினியர், வாஸ்து நிபுணர், அல்லது கட்டிட மேஸ்திரி, கொத்தனார் அல்லது வீட்டு சொந்தக்காரர்கள், வீட்டு உறுப்பினர்கள் யார் அதை முடிவு செய்யலாம் என்கிற கேள்வியை என்னைப் போன்ற ஒரு வாஸ்து நிபுணரிடம் கேட்கும் போது எனது பதில் என்பது, உங்களுடைய பணம் செலவு செய்வதற்கு எந்த யோசனையும் கிடையாது என்று சொன்னால் முதலில் ஒரு இன்ஜினியர் அல்லது கட்டிட கலைஞர் என்று சொல்லக் கூடிய ஆர்கிடெக்ட் வசம் வரைபடத்தை வாங்க வேண்டும். அதற்கு பிறகு அந்த வரைபடத்தை கையில் வைத்துக்கொண்டு ஒரு வாஸ்து மனிதனை அழைத்து அந்த இடத்தின் சுற்றுப்புற சூழ்நிலை சரிபார்த்த பிறகு, அந்த வரைபடத்தை அதில் இருக்கக்கூடிய தவறுகள் ஏதாவது இருந்தால் உங்களுடைய வாஸ்து அறிவு கொண்டு சரிசெய்து கொடுங்கள் என்று கேட்க வேண்டும்.வாஸ்து நிபுணரிடம் வரைபடம் கேட்பது என்பது என்னை பொறுத்த அளவில் மிக மிக தவறு என்று சொல்வேன். ஏன் என்று சொன்னால் ஒரு இன்ஜினியர் ஒரு ஆர்க்கிடெக்ட் கொண்ட நபர்கள் இடம் இருக்கும் அந்த கிரியேட்டிவிட்டி என்கிற ஒரு விஷயம் வாஸ்து நிபுணர்களிடம் இருக்காது. அவருடைய பார்வை எல்லாமே தவறு எங்கு இருக்கிறது என்கிற விஷயம் மட்டும் தான் இருக்கும். ஒரு வரைபடத்தை போடுங்கள் என்று சொன்னால் பெரிய அளவில் அவர்களால் போட முடியாது . ஒரே ஒரு வரைபடம் வைத்திருப்பார். இது எப்படி சொல்ல வேண்டும் என்று சொன்னால் கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு வார்த்தை சொல்வார்கள். வேறு வேறு மேடைகள் வேறு வேறு ஊர்கள் என்பதுதான். வேறு பேச்சு என்பது எங்களை பொறுத்த அளவில் மேடைப் பேச்சாளர்களுக்கு ஒன்றுதான் என்று சொல்வார் . அதுபோல எங்களைப்போல வாஸ்து மனிதர்களிடம் வரைபடம் என்பது ஒன்றுதான். இடங்கள் மட்டுமே மாறுபாடு இருக்கும் என்று சொல்லுவேன். ஆக உங்களுடைய அறிவு உங்களுடைய விருப்பத்திற்கு தகுந்த மாதிரி ஒரு இன்ஜினியரிடம் உட்கார்ந்து வரைபடம் போடுவது தான் சாலச் சிறந்தது. அதனை ஒரு வாஸ்து நிபுணரிடம் கொடுத்து சரி பார்த்து அதற்குப் பிறகு கட்டிடம் கட்டுவது சரியான முடிவு என்று என்னால் சொல்லப்படுகிறது. அதே சமயம் ஒரு எனது நுகர்வோர் நீங்கள் போட்டு கொடுங்கள் என்று சொன்னாலும் நான் மறுக்கிற வார்த்தையை தான் சொல்லுவேன்.
The first thing to do in a Vastu-related matter is to prepare a map. When a Vastu expert like me is asked the question of who can decide the process of preparing that map, whether it is an architect, engineer, Vastu expert, or building master, bricklayer or the homeowners and household members, my answer is that if you say that you have no idea how to spend your money, then first you should buy a map from an architect who can be called an engineer or an architect. After that, with that map in hand, call a Vastu person and check the surrounding environment of that place, and if there are any mistakes in that map, you should ask him to correct it with your Vastu knowledge. I would say that asking a Vastu expert for a map is very, very wrong as far as I am concerned. Why do people like an engineer and an architect have that creativity, but Vastu experts do not have it. His vision is all about where the mistake is. If you ask them to draw a map, they cannot draw it on a large scale. They will have only one map. If you ask how to say this, poet Vairamuthu will say one word. Different platforms, different cities. Different speech is the same for us stage speakers. Similarly, for Vastu people like us, a map is the same. Only the locations will be different. So, it is best to sit down with an engineer and draw a map according to your knowledge and wishes. I say that giving it to a Vastu expert to check and then build a building is the right decision. At the same time, even if a customer of mine asks you to draw it, I will say the word that I refuse.