ஏன் இரண்டு முறை வாஸ்து ஆலோசனை பெற வேண்டும்? / Today Calanders 2.11.2026

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

தினசரி நாள்காட்டி 2-11-2026 பராபவ வருடம் ஐப்பசி மாதம் 16 ந் தேதி. திங்கட்கிழமை.
மதியம் 1.12 வரை அஸ்டமி பிறகு தே.நவமி திதி. அதிகாலை 3.33 வரை ஆயில்யம் பிறகு மகம் நட்சத்திரம் . யோகநாள். கீழ்நோக்கு நாள்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம் 10.30-12noon
குளிகை 1.30-3pm
————————
இன்று நல்ல நேரங்கள்: 4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

 

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu

___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
10 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 10
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்.

___________________

இன்றைய பஞ்சாங்கம்:

காலாஷ்டமி (Kalashtami) என்பது சிவபெருமானின் உக்கிரமான வடிவமான கால பைரவரை வழிபடக்கூடிய மிக முக்கியமான நாளாகும்.

முக்கிய அம்சங்கள்:

நாள்: ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை அஷ்டமி (Krishna Paksha Ashtami) திதி காலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

——————————–

வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.

ஏன் இரண்டு முறை வாஸ்து ஆலோசனை பெற வேண்டும்?
✅ முதல் முறை – வீடு கட்டுவதற்கு முன்பு!
மனை வாங்கிய பிறகு அல்லது வீடு கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது வாஸ்து ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம். மனையின் அமைப்பு, திசைகள், தெருக்குத்து, வடகிழக்கு, தென்மேற்கு, கட்டிடத்தின் அமைப்பு, அறைகளின் இடங்கள், நுழைவுவாயில் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து திட்டமிட வேண்டும்.
இந்த நிலையில் தவறுகள் கண்டறியப்பட்டால், கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன்பே தேவையான மாற்றங்களைச் செய்வது எளிதாக இருக்கும்.
✅ இரண்டாவது முறை – வீடு கட்டி முடிப்பதற்கு முன்பு!
வீட்டின் கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிவடையும் நிலையில், மீண்டும் ஒரு முறை வாஸ்து ஆலோசனை பெறுங்கள்.
ஏனெனில், கட்டுமானத்தின்போது ஆரம்பத் திட்டத்தில் இருந்து சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். படிக்கட்டு, கதவுகள், ஜன்னல்கள், சமையலறை, படுக்கையறைகள், கழிப்பறைகள், தண்ணீர்த் தொட்டி, செப்டிக் டேங்க் மற்றும் பிற கட்டமைப்புகள் திட்டமிட்டபடி அமைந்துள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.

_________________

 

நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!