ஶ்ரீதேவி சீதேவி அம்மன்
விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட, பழமைமிகு ஆலயத்தின் கருவறையில்,
ஸ்ரீ சீதேவியம்மன்
எட்டு திருக்கரங்களுடன்
வடக்கு நோக்கி அருள்பாலிப்பது தலச்சிறப்பாகும்.
நம் திருமாலின் தேவியான திருமகளை
சீதேவி என்றழைப்பர். அத்திருப்பெயரில்
நம் பராசக்தி,
ஸ்ரீ சீதேவியம்மனாக
கோயில் கொண்டிருப்பது இத்திருத்தலத்தில் மட்டுமே என்பது தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும்.
பெண்களை காத்தருளும் அம்மன்:
பெண்களுக்கு பிறந்த வீட்டிலோ, புகுந்த வீட்டிலோ அல்லது
பிற வகைகளிலோ
பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இத்தல அம்பிகையிடம் உளமார வழிபடுதல் நல்ல தீர்வு கிடைக்கும் என்பது நிச்சயமான நம்பிக்கையாகும்.
வெள்ளிக்கிழமை நாட்களில், விளைநிலம், கால்நடைகள்,
வேலை நிமித்தம் , திருமணம், உடல்நிலை என பல்வேறு வேண்டுதலுக்காக ‘பூவாக்கு’ கேட்பது இத்திருதலத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும்.
கொங்கு வேளாளர்களில்,
செம்பன் குலம்,
முளசி கண்ணன் குலம் மற்றும்
காஞ்சிக்கோயில் கண்ணன் குல மக்களின் குலதெய்வமாக போற்றி வழிபடப்படும்
இத்தல அம்மனுக்கு,
ஆண்டுதோறும்
ஆனி மாதம் 15-நாட்கள்
நடைபெறும்
குண்டம், தேர்த்திருவிழா
பிரசித்தி பெற்ற
பெரும் திருவிழா காலமாகும். தற்போது வைகாசி மாதத்தில் நிர்வாகத்தினர் வைக்கின்றனர்.
ஈரோடு, திருப்பூர் கோயம்புத்தூர் மாவட்டங்களிலிருந்து
ஏராளமான மக்கள், (இந்த விஞ்ஞான உலகில், மாற்றம் ஏதுமில்லாமல் முற்காலத்தினைப்போலவே
இன்றளவும் ஒரு கிராமத்திற்கு உரிய திருவிழாவாக,
உற்றார் உறவினர்களுடன்)
கலந்து கொண்டாடி மகிழும் இப்பெரும்விழாவில்,
60-அடி நீள குண்டத்தில்
பெண்களும்,
ஆண்களும்
வெள்ளை நிற ஆடைகள் அணிந்து
தீ மிதிப்பது
தலச்சிறப்புக்களில் மற்றுமொரு நிகழ்வாகும். இதே காஞ்சிக்கோயில் கண்ணன் கூட்டத்தாருக்கு தனிகோவிலாக ஶ்ரீராவுத்தகுமாரசாமி இருபதுக்கும் இந்த காஞ்சிக்கோவில் நகருக்கு சிறப்பு.