ஶ்ரீதேவி சீதேவி அம்மன்
விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட, பழமைமிகு ஆலயத்தின் கருவறையில்,
ஸ்ரீ சீதேவியம்மன்
எட்டு திருக்கரங்களுடன்
வடக்கு நோக்கி அருள்பாலிப்பது தலச்சிறப்பாகும்.
நம் திருமாலின் தேவியான திருமகளை
சீதேவி என்றழைப்பர். அத்திருப்பெயரில்
நம் பராசக்தி,
ஸ்ரீ சீதேவியம்மனாக
கோயில் கொண்டிருப்பது இத்திருத்தலத்தில் மட்டுமே என்பது தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும்.
பெண்களை காத்தருளும் அம்மன்:
பெண்களுக்கு பிறந்த வீட்டிலோ, புகுந்த வீட்டிலோ அல்லது
பிற வகைகளிலோ
பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இத்தல அம்பிகையிடம் உளமார வழிபடுதல் நல்ல தீர்வு கிடைக்கும் என்பது நிச்சயமான நம்பிக்கையாகும்.
வெள்ளிக்கிழமை நாட்களில், விளைநிலம், கால்நடைகள்,
வேலை நிமித்தம் , திருமணம், உடல்நிலை என பல்வேறு வேண்டுதலுக்காக ‘பூவாக்கு’ கேட்பது இத்திருதலத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும்.
கொங்கு வேளாளர்களில்,
செம்பன் குலம்,
முளசி கண்ணன் குலம் மற்றும்
காஞ்சிக்கோயில் கண்ணன் குல மக்களின் குலதெய்வமாக போற்றி வழிபடப்படும்
இத்தல அம்மனுக்கு,
ஆண்டுதோறும்
ஆனி மாதம் 15-நாட்கள்
நடைபெறும்
குண்டம், தேர்த்திருவிழா
பிரசித்தி பெற்ற
பெரும் திருவிழா காலமாகும். தற்போது வைகாசி மாதத்தில் நிர்வாகத்தினர் வைக்கின்றனர்.
ஈரோடு, திருப்பூர் கோயம்புத்தூர் மாவட்டங்களிலிருந்து
ஏராளமான மக்கள், (இந்த விஞ்ஞான உலகில், மாற்றம் ஏதுமில்லாமல் முற்காலத்தினைப்போலவே
இன்றளவும் ஒரு கிராமத்திற்கு உரிய திருவிழாவாக,
உற்றார் உறவினர்களுடன்)
கலந்து கொண்டாடி மகிழும் இப்பெரும்விழாவில்,
60-அடி நீள குண்டத்தில்
பெண்களும்,
ஆண்களும்
வெள்ளை நிற ஆடைகள் அணிந்து
தீ மிதிப்பது
தலச்சிறப்புக்களில் மற்றுமொரு நிகழ்வாகும். இதே காஞ்சிக்கோயில் கண்ணன் கூட்டத்தாருக்கு தனிகோவிலாக ஶ்ரீராவுத்தகுமாரசாமி ஆலயம் இருப்பதும் இந்த காஞ்சிக்கோவில் நகருக்கு சிறப்பு.
In the sanctum sanctorum of the ancient temple built by the Vijayanagara kings, the eight-armed Sri Seedevi Amman is worshipped facing north.
The goddess of our temple is called Seedevi. The main attraction is that this temple is the only one where the Parashakti Sri Seedevi Amman is present. சீதேவி அம்மன் Sri Sedeviamman Temple Kanjikovil,சீதேவி அம்மன் : குலதெய்வ வரலாறு,காஞ்சிக்கோவில் சீதேவி அம்மன் சீதேவி அம்மன் குண்டம்,Sri Sedeviamman chennai vastu,
The goddess who protects women:
If women have any problems in the house where they were born, in the house where they have moved or in other ways, it is a sure belief that by worshipping the goddess of this temple, they will get a good solution.
On Fridays, one of the special features of this temple is to offer ‘poovakku’ for various requests such as agricultural land, cattle, work, marriage, health.
Among the Kongu Vellalars, the Kundam and Therthiruvizha, which is held for 15 days every year in the month of Ani (Vaikasi), is a famous festival for the Ithala Amman, who is worshipped as the ancestral deity of the Semban clan, Mulasi Kannan clan and Kanchikoy Kannan clan. A large number of people from Erode and Tiruppur districts (in this scientific world, without any changes, as in the past, it is still a village festival, with relatives) join in this festival and enjoy it. Another unique event in the world is the 60-foot-long Kundam, where women and men wear white clothes and tread fire. And the fact that the Sri Rautthakumaraswamy Temple is a separate temple of the same Kannan clan is also special for this KanchiKovil temple town.