வாஸ்து பெரியதா? ஜோதிடம் பெரியதா?
ஜோதிடம் பெரியதா?. வாஸ்து பெரியதா? என்ற கேள்வியை நிறைய மனிதர்கள் என்னிடம் கேட்பார்கள் நிச்சயமாக இரண்டும் வேறு வேறு தான். ஆனால் இரண்டும் இணைந்த ஒரு புகை வண்டியின் தண்டவளையம் போலத்தான். ஏன் என்று சொன்னால் இரண்டும் இணையாது. ஆனால் இணைந்து கொண்டு தான் செல்லும். கட்டங்களை பார்ப்பது ஜோதிடம்.கட்டிடங்களை பார்ப்பது வாஸ்து அதற்கும் 360 டிகிரிகள் தான். இதற்கும் 360 டிகிரிகள் தான் எந்த டிகிரியில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும் என்பது ஜோதிடம் எந்த டிகிரியில் எதனை வைக்க வேண்டும் என்பது வாஸ்து இந்த இடத்தில் ஒரு வாஸ்து நிபுணர் எக்காரணம் கொண்டும் ஐந்தாம் பாவத்தை இயக்கக் கூடாது. ஐந்தாம் பாவம் என்பது கலை, ஜோதிடம், சுய திறமை, என்று சொள்ளலாம் ஏன் காதல் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். காதல் என்று சொன்னாலே வரம்பு மீறிய காதல் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இந்த இடத்தில் சொல்லுகிற விஷயம் காதல் திருமணம் செய்கிற ஒரு மனிதன் நிச்சயமாக வாஸ்து பார்க்க கூடாது. நடைமுறை வாழ்க்கையில், நடப்பு வாழ்க்கையில் காதல் செய்கிற மனிதர்களும் வாஸ்து தொழிலலில் வெற்றியை பெற முடியாது. ஏன் என்று சொன்னால் ஜோதிட ரீதியாக ஐந்தாம் பாவம். வாஸ்து என்றால் வீடு நிலம் வாகனம் தாயார் என்று சொல்லக்கூடிய விசயம்.
ஜோதிட நிகழ்வோடு இணைந்த மனிதர்கள் ஐந்தாம் பாவமும் ஏழாம் பாவமும் அகத்தின் பாவங்கள். இரண்டாம் பாவங்கள் புறத்தின் பாவங்கள். நீங்கள் எதில் நிற்கின்றீர்கள் என்று சொன்னால் இரண்டாம் பாவம் என்கிற ஒரு தனது குடும்பத்தையும் தனக்கு வருகிற பணத்தையும் கொடுக்குற இடமாக நான்காம் பாவத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். அதனை கெடுக்கும் ஐந்தாம் பாவத்தை நீங்கள் ஜோதிடம் முழு நேர ஜோதிடராக ஈடுபடும் போது, சுய திறமையான ஒரு கலையில் ஈடுபடும் போது சுய தொழிலில் ஈடுபடும் போது தான் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஒரு தொழிலில் ஈடுபடும் போது நிச்சயமாக ஒரு வாஸ்து நிபுணர் பிரபலம் அடைய முடியாது. ஜோதிடத்தில் இணைத்து வாஸ்து பார்க்கிற மனிதர்கள் இதனை தெரிந்து கொள்வது நலம் என்று சொல்வேன் . ஏன் என்று சொன்னால் ஒரு தொழில் பண்டித்தியம் பெற பத்து வருடங்கள் தேவை. 10 வருடங்கள் கழித்து உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் இரண்டு தொழில்களையுமே கோட்டை விட்ட மனிதர்களாக மாறிவிடுவீர்கள். எப்படி சிலை செய்கிற மனிதர்களுக்கு கண் பாதிப்பு இருக்குமோ, கண் கண்ணாடி கடை மனிதர்களுக்கு கண் பாதிப்பு கண்டிப்பாக இருக்குமோ? டைலர் வேலைகளை பார்க்கிற டாஸ்மாக் சார்ந்த வேலைகளை பார்க்கிற மக்களுக்கு பெண்கள் சார்ந்த விஷயத்தில் குறைகள் இருக்குமோ,அதேபோல் அரசியலில் ஈடுபடுகிற மக்களுக்கு குழந்தை சார்ந்த வகையில் பாதிப்பு இருப்பது உண்மையோ, அதுபோல வாஸ்து பார்க்கிற மக்களும் பெண்களை தனது மனைவியைத் தவிர அனைவரையும் தாயாக சகோதரியாக பவித்தால் மட்டுமே அதில் வெற்றி பெற்ற மனிதர்களாக மாற முடியும். இதை மாற்றி ஒருவர் செய்யும் பொழுது அந்த துறையில் இருந்து காணாமல் போய்விடுவார்கள். இது முழுக்க முழுக்க உண்மை.