ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 15-6-2026 பராபவ வருடம் ஆனி மாதம் 1 ந் தேதி. திங்கட்கிழமை. காலை 8.25 வரை அமாவாசை பிறகு நாளை விடியற்காலை 4.33 வரை பிரதமை பிறகு துதியை திதி. இரவு 6 57 வரை மிருஹசீரிசம் பிறகு திருவாதிரை நட்சத்திரம். யோகநாள். மேல்நோக்கு நாள். அமாவாசை
ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3p
இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 45
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:
மார்கழி (மார்கசீரிஷ) மாத அமாவாசையும், திங்கட்கிழமையும் (சோமவாரம்) ஒன்றாக வரும் நாள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் அரச மரத்தை வலம் வந்து (சோம பிரதட்சணம்) வழிபடுவது, சந்திர தோஷங்களை நீக்கி, முன்னோர்களின் ஆசியையும், மன அமைதியையும் தரும்.
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
வடகிழக்கு கார்னர் மனை
எல்லா இடங்களிலும் யோகத்தை செய்யாது –வாஸ்து கவனித்து வாங்குங்கள்!
பலர் வடகிழக்கு (North-East Corner) மனை என்றாலே 100% யோகம் தரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் வாஸ்து பார்வையில், வடகிழக்கு கார்னர் மனை என்பது மட்டும் போதாது. அந்த மனையின் சாலை அகலமான அமைப்பு, நிலத்தின் உயர்வு–தாழ்வு, சுற்றுப்புற சூழல், தெருக்குத்து, நீர்நிலை அமைப்பு போன்ற பல அம்சங்களும் சேர்ந்து நல்ல பலனை தீர்மானிக்கின்றன.
#வடகிழக்கு_கார்னர்_மனை #வாஸ்து #மனைவாங்குமுன் #வாஸ்துகுறிப்புகள் #சென்னைவாஸ்து #JaganathanVastu #VastuTipsTamil #PlotVastu #CornerPlotVastu #TamilVastu
வடகிழக்கு கார்னர் மனையில்:
வடகிழக்கு பகுதி வெட்டுப்பட்டு இருக்கக் கூடாது.
வடகிழக்கில் குப்பை, செப்டிக் டேங்க் அல்லது கனமான கட்டிடங்கள் இருக்கக் கூடாது.
வடக்கு மற்றும் கிழக்கு சாலைகள் சரியான அளவில் இருக்க வேண்டும்.
வடகிழக்கு திசை திறந்த வெளியாகவும், ஒளி மற்றும் காற்றோட்டம் கிடைக்கும்படியும் இருக்க வேண்டும். மின்சார கடத்தி வந்து விடக்கூடாது. இப்படி பலகாரணங்கள் இருக்கலாம்.
எனவே, “வடகிழக்கு கார்னர் மனை” என்ற பெயரை மட்டும் பார்த்து வாங்காமல், முழுமையான வாஸ்து ஆய்வுக்குப் பிறகே முடிவு செய்யுங்கள். சரியான அமைப்பு இருந்தால் மட்டுமே யோகம்; இல்லையெனில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம்.
___________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .