படிக்கும் அறை வாஸ்து
ஒரு தலைமுறையில் பெறுகின்ற கல்வி என்பது அவர்களின் ஏழு தலைமுறைக்கு தொடர்ந்து வரும் என்று வள்ளுவப் பெருந்தகை கூறியிருக்கின்றார்கள். அந்த வகையில் ஒரு இல்லத்தில் எதனை நீங்கள் ஒரு கட்டிடமாக ஒரு அறையாக அமைகின்றீர்களோ என்பதனை விட வாஸ்து வகையில் ஒரு படிக்கின்ற அறையை நீங்கள் ஏற்படுத்துகிற போது அந்த இல்லத்தில் இருந்து மிகப்பெரிய ஒரு கல்வியாளர் ஒரு அறிவு சார்ந்த ஒரு மனிதர் உருவாகிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் எப்படி ஒரு இடத்தில் படுக்கையறை இருக்கின்றதோ? வரவேற்பறை இருக்கின்றதோ? ஒரு சமையலறை இருக்கின்றதோ. ஒரு உணவு அருந்தும் அறை இருக்கின்றதோ? ஒரு கழிவறை இருக்கின்றதோ? அதுபோல நிச்சயமாக ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு படிக்கின்ற அறையை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லுவேன். அந்த அறை வரவேற்பறை சார்ந்த அறையாக கூட இருக்கலாம். எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் படிக்கின்ற அறை என்பது ஒரு இல்லத்தில் வடகிழக்கு பகுதியில் வரவேண்டும். இந்த இடத்தில் ஒருவர் அமர்ந்து எந்த குழப்பங்களும் இல்லாமல் அல்லது, எந்த குழப்பங்கள் இருந்தாலும் நிவர்த்தி செய்துவிட்டு தான் அந்த இடத்தில் இருந்து செல்வேன் என்கிற ஒரு இடமாக படிக்கும் அறை இருக்க வேண்டும்.
ஆக படிக்கின்ற அறை என்பது ஒரு இல்லத்தின் வடகிழக்கு பகுதியில் வடக்கு சுவரும் கிழக்கு சுவரும் சந்திக்கக்கூடிய இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சில மக்கள் மனம் போன போக்கில் வட மேற்கிலோ, தென்கிழக்கு மற்றும் மத்திய பாகத்திலோ மேற்கின் மத்திய பாகத்திலோ படிக்கும் அறையை அமைப்பார்கள். அது 100% தவறு. எப்பொழுதுமே ஒரு இல்லத்தில் படிக்கின்ற அறை என்பது வடகிழக்கு மட்டுமே இருக்க வேண்டும். அதே சமயம் தனியாக படிக்கிற புத்தகங்களை வைத்து படிக்கிற என்று சொல்லுகிற லைப்ரரி அமைப்பு என்பது அந்த இடத்தில் வேண்டாம். இது முழுக்க முழுக்க ஒரு உயர்நிலை கல்வி வரை படிக்கின்ற ஒரு 22 வயது வரை படிக்கின்ற மக்களுக்கான படிக்கும் அறையாக தான் இருக்க வேண்டும். ஒரு 25 வயதுக்கு மேல் இருக்கிற மக்களின் கல்விக்கான படிக்கும் அறையாக அந்த அறை வடகிழக்கு பகுதியில் இருக்கக்கூடாது . இது தெரிந்து கொண்டு ஒரு படிக்கும் வாஸ்து வகையில் அமைத்துக் கொள்ளுங்கள். வாஸ்து ரீதியாக அது பெரிய அளவில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். படிக்கும் அறை வாஸ்து,குழந்தைகளின் படிக்கும் அறை,படிக்கும் அறைக்கான வாஸ்து,வாஸ்து சாஸ்திரப்படி படிக்கும் அறை,Vastu Tips For Study Room, study room vastu,