
@chennaivastu படிக்கும் அறைகளுக்கு வாஸ்து இன்று பார்க்கும் பொழுது, நிறைய மக்கள் அதற்காக ஒரு அறையை ஏற்படுத்துவது கிடையாது. ஒரு சமையலறை வேண்டும். ஒரு வரவேற்பறை வேண்டும். ஒரு படுக்கையறை வேண்டும். ஒரு கழிவறை வேண்டும் . ஒரு பொருள் வைக்கும் அறை வேண்டும். ஒரு துணி அலங்காரம் அறை வேண்டும். இரண்டாவது வரவேற்பறை வேண்டும். இரண்டாவது சமையலறை வேண்டும். இரண்டாவது கழிவறை வேண்டும். மூன்றாவது படுக்கையறை வேண்டும். இப்படி எல்லாம் இரண்டு எண்ணிக்கையில் வேண்டும் என்பார்கள். ஆனால் ஒரே ஒரு படிக்கும் அறை என்கிற விஷயத்தை உட்புகுத்த மாட்டார்கள். எனது வாஸ்து பயணத்தில் எப்பொழுதுமே படிக்கிற விஷயத்திற்கு முதன்மைப்படுத்த வேண்டும் என்பேன். ஏனெனில் ஒரு மனிதனை மனிதனாக மாற்றுவது என்பது கல்வியறிவு மட்டுமே. அந்த கல்வியறிவு பொருளாதார வலிமைக்கும் துணை சேர்க்கிற கல்வி அறிவு இருக்க வேண்டும். எந்த காலத்திலும் மிகப்பெரிய கல்விப் புலமை பெற்றவர், உலகம் போற்றும் மனிதர். இதனைக் கூட சரஸ்வதி பாடல் கல்விக் கடவுளாம் ஸ்ரீதேவியின் வழிபாட்டு பாடலில் கூட,
வெள்ளைக் கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு, வெண் தாமரையில் வீற்றிருப்பாள் என் அன்னை. சொல்லோடு பொருள் தந்து என்னை,
அரசரோடு என்னை சரியாசனம் வைத்த தேவி என்ற பாடல் சிறப்பு.chennaivastu
பாடல்களில் கூட மிகப் பெரிய அளவில் அரசரோடு இணையாக உட்காரும் பாக்கியம் யாருக்கு கிடைக்கும் என்று சொன்னால், கல்வி கற்ற மாந்தருக்கு மட்டுமே கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் கூட நமது மக்களாட்சி முறை என்பது அது நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, விதான் சவுதா என்று சொல்லக்கூடிய சட்டமன்றமாக இருந்தாலும் சரி, 5 ஆண்டுகள் ஆட்சி, ஐந்தாண்டுகள் நிலையாக இருக்கிற ஒரு ஆட்சியாளர்கள், மீண்டும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர்களுடைய ஆட்சி நடக்குமா என்று சொன்னால் அது அவர்களுடைய கையில் கிடையாது. இந்த நாட்டில் இருக்கிற மக்களின் கை விரல்களின் வழியாக நடக்கிற விளையாட்டு சார்ந்த விஷயமாக மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட அரசியல் தலைவர்கள் ஐந்து வருடம் இருந்த பிறகு வேறு ஒரு தலைவர், அடுத்த 5 ஆண்டுகளுக்கு வருவார். அது முதல் அமைச்சராக இருந்தாலும் சரி, பிரதமராக இருந்தாலும் சரி, மத்திய நாடாளுமன்ற , மாநில சட்டமன்ற உறுப்பினர் களாக இருந்தாலும் சரி, இன்றைக்கு இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இருப்பாரா என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு கல்விப் புலமை பெற்ற ஒரு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த, இந்திய காவல் பணியில் சேர்ந்த, மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிற ஒரு அதிகாரி ஒரு முதலமைச்சருக்கு இணையாக தலைமைச் செயலகப் பணிகளில் உட்காரும் நிகழ்வை கொடுப்பது எது என்று கேட்டால், கல்வி சார்ந்த ஒரு கொடை என்றே சொல்லலாம். அந்த வகையில் சரஸ்வதி தேவியின் பாடலுக்கு அந்தப் பதவி கிடைக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அப்படிப்பட்ட பதவி ஒருவருக்கு தேடி வரவேண்டும் என்று சொன்னால், அவர்கள் ஆசைப்பட்டது கிடைக்க வேண்டும் என்று சொன்னால், மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகள் ஆகட்டும், மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் ஆகட்டும், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி, கல்வி தேர்வுகள் ஆகட்டும், கல்லூரி பட்டயப் படிப்பு சார்ந்த தேர்வுகள் ஆகட்டும் அதில் வெற்றி பெற ஒருவர் சரியான இடத்தில் அமர்ந்து படிக்கும் பொழுது அது நிச்சயமாக நடக்கும். அந்த வகையில் படிக்கக் கூடிய இடமாக இருப்பது என்பது வாஸ்துவின் ரீதியாக ஒரு இல்லத்தில் வடகிழக்குப் பகுதி. அப்படிப்பட்ட வடகிழக்குப் பகுதியில் கல்வி சார்ந்த படிக்கும் அறையை அமைப்பது மிக மிகச் சாலச் சிறந்தது. அப்படிப்பட்ட அறையில் கிழக்கு பார்த்த, வடக்கு பார்த்து, அந்த இடத்தின் திசைகாட்டிக்கு தகுந்தாற்போல அமர்ந்து படிக்கும் போது மிகப்பெரிய வெற்றி மாணவ மாணவியராக திகழ்வார்கள். படிக்கும் அறை எப்பொழுதும் வடக்குப்பகுதி ஆகட்டும், கிழக்குப்பகுதி ஆகட்டும், 24 மணி நேரமும், 365 நாட்களும் இந்த கட்டடம் பூமியில் இருக்கும் காலம் மட்டும், திறந்து இருப்பது மிக மிக முக்கியம். அந்த அறைகளில் பெரிய அளவில் எடைகளை வைக்காது, தரையில் உட்கார்ந்து அல்லது, ஒரு மிகப்பெரிய கட்டமைப்பில் இல்லாத அது சிறிய அளவில் ஒரு நாற்காலியும், சிறிய அளவில் ஒரு மேஜையும் வைத்து, அந்த அறையின் தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த பகுதிகளில் தனியாக ஒரு மர பீரோ வைக்காமல், ஒரு இரும்பு பீரோ வைக்காமல், அதன்சுவர் கப்போர்டு செல்ப் சார்ந்த அமைப்பில், பள்ளி கல்லூரி பாட புத்தகங்களை வைத்துக்கொண்டு படிக்கும் பொழுது, அது அந்த வீடு, அந்த வீட்டில் படிக்கிற குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கும்.
பெரிய அளவில் போட்டித் தேர்வை எழுதுகிறார்கள் வடகிழக்கு படிக்கும் அறையை ஏற்படுத்தி தொடர்ந்து படித்து வரும் போது தேர்வில் வெற்றி பெறும் மனிதராக மாறி விடுவார்கள். அந்த இடத்தில் ஜாதக நிலை ஆகட்டும் அது ஒருவகையில் எதிர்மறை பலனைக் கொடுக்கும் நிலையில் இருந்தாலும், திருவள்ளுவரின் திருக்குறளுக்கு இணையாக, தெய்வத்தினால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பதற்கிணங்க, தொடர்ந்து அந்த இடத்தின் சாந்நித்தியம் வாஸ்து பலன்களின் காரணமாக நிச்சயமாக தேர்வுகளில் வெற்றி பெறுவோம். முதல் மாணவனாகத் திகழ்ந்து . அது இந்திய ஆட்சிப்பணி ஆக இருக்கட்டும், இந்திய குடிமைப்பணியாக இருக்கட்டும், இந்திய காவல்துறை உயர் பணியாக இருக்கட்டும், இந்திய வனத்துறை சார்ந்த பணியாக இருக்கட்டும், இந்திய வருமானத் துறை சார்ந்த பணியாக இருக்கட்டும். நிச்சயமாக வெற்றி பெற முடியும்.