ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்
ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 21-6-2026 பராபவ வருடம் ஆனி மாதம் 7ந் தேதி. ஞாயிற்றுக்கிழமை. மாலை 3.22 வரை சப்தமி பிறகு வ.அஸ்டமி திதி. காலை 9.17 மணி வரை பூரம் பிறகு உத்ரம் நட்சத்திரம். யோகநாள். கீழ்நோக்கு நாள்.
ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
————————
இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am 7.30-10am
2-4.30pm 9-12pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
13 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 47
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:
பானு சப்தமி என்பது சப்தமி திதியும் சூரியனுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையும் ஒன்றாக வரும் புண்ணிய நாளாகும். இந்து மதத்தில் சூரிய வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு, தானங்கள் மற்றும் பித்ரு தர்ப்பணங்கள் சாதாரண நாட்களை விட ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
சூரியன் அதிகம் வீட்டுக்குள் வேண்டாம் – வாஸ்து பார்வை
வாஸ்து முறையில் வீட்டிற்குள் இயற்கை வெளிச்சம் வருவது நல்லது. ஆனால் அளவுக்கு அதிகமாக சூரிய வெப்பமும், நேரடி கதிர்களும் வீட்டிற்குள் நுழைந்தால் உஷ்ணம் அதிகரித்து வசிப்பவர்களுக்கு சிரமம் ஏற்படலாம்.
#Vastu #VastuTips #ChennaiVastu #VastuConsultant #HomeVastu #Sunlight #HouseDesign #VastuTamil #TamilVastu #EnergyBalance #PositiveVibes #VastuExpert #HomePlanning #VastuAdvice
குறிப்பாக:
மேற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் பெரிய ஜன்னல்கள் இருந்தால் மாலை வெப்பம் அதிகமாக வரும்.
தெற்கு திசையில் நேரடி சூரிய வெப்பத்தை கட்டுப்படுத்த சன்-ஷேட், திரைச்சீலை அல்லது வெப்பத் தடுப்பு கண்ணாடி பயன்படுத்தலாம்.
வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் இயற்கை வெளிச்சம் வருவது பொதுவாக நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் கிழக்கு பகல் 11 மணிக்கு மேல் அதிக வெப்பம் வாஸ்து வகையில் ஆபத்து.
வீட்டின் உள் வெப்பம் அதிகரிக்காத வகையில் சரியான காற்றோட்டம் அவசியம்.
“வீட்டில் வெளிச்சம் அவசியம் என்றாலும், அளவுக்கு அதிகமான சூரிய வெப்பம் வீட்டிற்குள் நுழைவது வசதியையும், அமைதியையுமனெர பாதிக்கலாம். வாஸ்து மற்றும் கட்டிட வடிவமைப்பு இரண்டையும் கருத்தில் கொண்டு ஜன்னல்கள், கதவுகள் மற்றும் நிழல் ஏற்பாடுகளை அமைத்தால் வீட்டின் வெப்பம் குறைந்து சுகமான சூழல் கிடைக்கும். சூரிய ஒளி வர வேண்டும், ஆனால் சூரிய வெப்பம் அதிகமாக வீட்டை ஆக்கிரமிக்கக் கூடாது என்பதே முக்கியம்.”
___________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995