சகுனங்கள் வாஸ்து
ஒரு மனை வாங்க செல்கின்ற பொழுது, ஒரு வீடு கட்ட தொடங்கும் முன்பு ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு பயணப்படுகின்றீர்கள். உங்கள் குடும்பத்தில் திருமணம் சார்ந்த நிகழ்வுக்காக செல்கின்றீர்கள் என்கிற பொழுது சகுட நிமிர்த்தங்களை பார்க்க வேண்டும். அந்த சகுனங்கள் நிகழ்த்த சகுன நிமிர்த்தம் என்பது நமக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கிற நிகழ்வாக நமக்கு விரையத்தை ஏற்படுத்துகிற நிகழ்வை தடுக்கிற நிகழ்வாக பார்த்துக் கொள்ள வேண்டும். சகுனங்களை என்பது நீங்கள் தடையாக பார்க்கக்கூடாது . ஆக நீங்கள் செய்கிற செயலை கொஞ்ச நாளிற்கு தள்ளிப் போடுகிற நிகழ்வாகத்தான் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் நல்ல சகுனங்கள் என்று பார்க்கும் பொழுது காரியத்தக்கையில்லாது உங்கள் தாராளமாக அந்த விஷயத்தை செய்யலாம் என்று கொண்டு எடுத்துக் கொள்ளலாம். இந்த நிகழ்வு என்பது ஒரு ஒரு திருமண நிகழ்விற்கு கூட நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.அந்த வகையில் கண்ணில் படுகிற நிகழ்வுகள் என்ன என்பதனை தெரிந்து கொள்வோம்.
ஒரு கல்யாண கோலத்தை பார்ப்பது , பெண்களை அழைத்து வருவது, நாதஸ்வரம் வாசிப்பது, ஆலயமணியின் ஓசையை கேட்பது, கோயில் பூஜை சத்தத்தை கேட்பது, பசு மாடுகள் கூட்டமாக வருவது, சுமங்கலி தம்பதிகள் கூட்டங்கள் வருவது, பசு கன்று ஒன்றாக வருவது, நாய்கள் விளையாடுவது, திருமணத்துக்கு ஆண்களோ பெண்களோ பார்க்க செல்கிற ஒரு கூட்ட நிகழ்வு, பூஜை பொருட்களை ஒருவர் எடுத்து வருவது, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பது, பெண்கள் பூப்படைந்த ஒரு செய்தியிடம் கேட்பது, பிரசவம் முடிந்து குழந்தையை வீட்டிற்கு எடுத்து வருகிற நிகழ்வு, வங்கிக்கு பொருள்கள் பணம் வாங்க கொண்டு செல்லும் காட்சி, கிரகப்பிரவேசம், திருமண நிகழ்வு, பூணூல் கல்யாணம், சுப காரியங்கள், எந்த சுப காரிய காட்சிகளும் வாஸ்து வகையில் ஒரு சகுனம் மித்தமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல தீய சகுனங்கள் என்று பார்க்கும் பொழுது சாலையில் ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருப்பது, பெண்கள் தலைவலி கோலமாக வருவது, உடலில் ஏதாவது குறை இருக்கிறவர்கள் எதிரில் வருவது, தவறான செய்திகளை கேட்பது, அதேபோல எதிர்மறை செயல்கள் அதாவது, காவலர் குற்றவாளிகளோடு செல்வது, அந்த இடத்தில் மரங்கள் சாய்ந்து கிடக்கிற நிலை, போகும் போது விபத்து காட்சிகளை பார்ப்பது, இந்த நிகழ்வுகள் இருக்கும் பொழுது அந்த காரியங்களை நீங்கள் ஒரு மூன்று மாதத்திற்கு தள்ளி வைத்து செய்ய வேண்டும் என்று சொல்லுவேன். கிரகப்பிரவேச நிகழ்வு ஒரு வீடு கட்ட தொடங்குகிற நிகழ்வை வாஸ்து கவனித்துக் கொண்டு செயல்பட வேண்டும்.