கிழக்கு திசை திசைகாட்டி
வாஸ்து வகையில் ஒரு இடத்திற்கு திசைகாட்டியை தெரிந்து கொள்வது எப்படி என்கிற கேள்வியை ஒரு சில இடங்களில் நான் வாஸ்து பார்க்க போகும் இடங்களில் மக்கள் என்னை கேட்டிருக்கிறார்கள். அந்த வகையில் கிழக்கு பார்த்த இடம் என்று சொன்னால் கிழக்கு என்று நாம் திசைகாட்டியில் பார்ப்போம் அல்லது, ஒவ்வொருவருடைய செல்போனிலும் காம்பஸ் என்கிற ஒரு ஆப் இருக்கும். அந்த ஆப்பில் நீங்கள் திசையை பார்க்கும் பொழுது கிழக்கு என்று சொன்னால் 90 டிகிரியை காட்ட வேண்டும். ஒரு வேளை அது 100 அல்லது 110 வையோ காட்டினால் அது எதிர் நிலையில் கிழக்கு திசை இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் . ஒரு வேலை அது என்பது டிகிரிகளோ 70 டிகிரிகளோ காட்டினால் அது நல்ல யோகமான மனை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் கிழக்கு பார்த்து தாராளமாக ஒரு இல்லத்தை நீங்கள் கட்டலாம். 110 டிகிரிகள் கிழக்கு காட்டுகிறது என்று சொன்னால் அந்த இடத்தில் கிழக்கு வாசல் வைத்து ஒரு வீட்டை கட்டக் கூடாது. ஒரு சில மக்கள் என்னிடம் கேட்பார்கள் டிகிரிக்காக வீட்டை திருப்பி கட்டலாமா என்பார்கள் அதனையும் 100% கட்டக்கூடாது. அப்படி கட்டினாலும் வாஸ்து ரீதியாக குற்றமாக முடிந்து விடும். ஆக ஒவ்வொரு திசை பார்த்த ஒரு மனையை வாங்கும் பொழுது திசையை பார்த்து ஒரு இல்லத்தை அமைக்க வேண்டும். இந்த இடத்தில் கிழக்கு சாலை இருக்கிறது. கிழக்கு பார்த்துத்தான் வீட்டை கட்ட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் அது வாஸ்துரீதியாக குற்றமாக முடிந்து விடும். இந்த இடத்தில் முழுக்க முழுக்க வடக்கு பார்த்து தான் கட்ட வேண்டும். ஆக இதுதான் கிழக்கு திசைக்கு திசை காட்டி வைத்து தெரிந்து கொள்வது.இதனை திசைகாட்டி எப்படி பார்ப்பது என்று கூட சொல்லலாம். கிழக்கு திசை திசைகாட்டி,East direction compass vastu,What is a Vastu compass? ,How to find the east direction?,How to check compass for Vastu?,Which compass is good for Vastu?,What should be kept in east direction?,
💐💐💐💐💐💐💐💐💐💐
For English
People have asked me the question of how to know the compass for a place in terms of Vastu in a few places where I go to see Vastu. In that way, if we say the place where the east is seen, we will see the east in the compass or, every cell phone has an app called compass. When you see the direction in that app, if it says East, it should show 90 degrees. Perhaps if it shows 100 or 110 then you should know that it is in the opposite direction of East. If a work shows that it is degrees or 70 degrees then it should be taken as a good yoga house. You can build a house freely facing east at that place. If it is said that 110 degrees shows east, then you should not build a house with east door at that place. A few people ask me if they can rebuild the house for degrees and not build it 100%. Even if it is built like that, it will end up as a crime in Vastu terms. So when buying a plot looking at each direction, you should look at the direction and set up a house. At this place there is an eastern road. If you decide to build the house facing east, it will turn out to be an architectural crime. At this place it should be built facing north. So this is how to know by pointing to the east direction. It can also be said how to see the compass.