Vastu Tips For Hall
வாஸ்து வகையில் வரவேற்பறை, ஹால், கூடம் என்று பல வகையில் நாம் அழைக்கின்றோம். ஆனால் உண்மை நிலை என்பது ஆங்கிலத்தில் சொன்னால் ஹால் என்றும் தமிழில் சொன்னால் கூடம் என்றும் சொல்லலாம் . அந்த வகையில் கூடம் என்று சொன்னாலே குடும்ப உறுப்பினர்கள் கூடுகிற இடம் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக கூடம் என்பது மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் . அப்படி இருக்கின்ற பொழுது அந்த கூடம் எப்பொழுதுமே வடக்கு சார்ந்த, வடகிழக்கு சார்ந்த கிழக்கு சார்ந்த பகுதிகளில் பெரிய அளவில் பிரமாண்டமாக வரக்கூடாது. அந்த கூடங்கள் என்பது எப்பொழுதுமே பிரம்மஸ்தானத்தில் ஒட்டிய அமைப்பில் மிகப்பெரியதாக பிரம்மாண்டமாக வரும் பொழுது தான் யோகத்தை செய்கிற வீடாக அந்த வீடு இருக்கும். கூடத்திற்கு வேலை என்பது என்னவென்றால் குடும்பத்திற்கு அனைத்து மக்களும் கூடுகிற இடம் ஒரு வீட்டில் விசேஷம் நடக்கிறது என்று சொன்னால் அந்த இடத்தில் அனைவருமே அந்த நிகழ்வு செய்கிற இடமாக பார்க்கப்படுகிறது. கூடமே ஒரு வீட்டின் முக்கிய பகுதியாக இருக்கின்றது. அப்படி இருக்கின்ற அந்த கூடத்தில் தான் தொலைக்காட்சி பெட்டி இருக்கும். குழந்தைகள் ஒரு மூலையில் படிப்பார்கள். அலங்கார பொருட்களை ஒரு இடத்தில் வைத்து இருப்பார்கள். வீட்டில் இருக்கிற பெண்கள் ஒரு பகுதியில் இருப்பார்கள். ஆக ஒவ்வொருவருமே பல வேலைகளை அதாவது அமர்ந்து செய்கிற ஓய்வாக இருக்கிற அந்த நேரத்தில் செய்கிற வேலைகளை செய்கிற இடமாக இருக்கிற இடமாக கூடங்கள் மட்டுமே முக்கியப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கூடம் என்பது ஒரு வீட்டில் குறைந்தபட்சமாக 10×16 ,16×16, அதிகபட்சமாக 30 அடிக்கு 22 அடி ஆகவும் இருக்கலாம். எப்பொழுதுமே கூடங்களில் பொருள்கள் வைப்பதற்கு உரிய பரணை கட்டக்கூடாது. பரிசு பொருட்களையும் அலங்கார பொருட்களை வைப்பதற்கு அளமாரிகளை மட்டும் செல்ப் அமைப்பை கண்ணாடி பொறுத்தி ஏற்படுத்திக் கொள்ளலாம். கூடத்தில் ஜன்னல் அமைப்பு என்பது கிழக்கு திசை கூடமாக இருந்தால் கிழக்குப்புறத்திலும், வடக்கு திசை கூடமாக இருந்தால் வடக்கு புறத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.ஏன் தெற்கு திசை கூடமாக இருந்தால் தெற்கு புறத்திலும் மேற்கு திசைப்படுமா கூடமாக இருந்தால் மேற்கு புறத்தில் மட்டும் அமைய வேண்டும்.அப்படி அமைகின்ற பொழுது அதன் எதிர் எதிர் திசைகளில் நேர் ஜன்னல்களை இணைத்து வைக்கும் பொழுது ஒரு காற்றோட்ட வசதியாக அந்த கூடம் என்பது சரியான முறையில் செயல்படும். அந்த கூடத்தை வாஸ்து விதிகளுக்கு பொருத்தி சரியான முறையில் அமைத்துக் கொள்வது சாலச்சிறந்தது. அதேசமயம் கூடத்தில் நீங்கள் பால் சீலிங் அமைக்கிறீர்கள் என்று சொன்னால் அந்த பால் சீலிங் என்பது வடகிழக்கு அறையோடு பொருந்திக்கொண்டு அந்த பால் சீலிங் அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த பகுதியில் மட்டும் பால் சிலிங் அமைப்பது வாஸ்து குற்றத்தை கொடுத்து விடும். ஒரு சில இடங்களில் கூடத்தில் ஊஞ்சல்களை அமைப்பார்கள். அந்த ஊஞ்சல் என்கிற விஷயத்தை தவிர்த்து விடுவது நலம். கூடத்தில் காற்றோட்ட வசதி இல்லையென்றால் தாராளமாக ஏர் கண்டிஷனர் செய்து கொள்ளலாம். அதே சமயம் மின்விசிறிகளையும் ஒன்றுக்கு நான்காக அமைத்து கொள்ளலாம். கூடுதலாக இருக்கும் பொழுது எப்பொழுதுமே கூடம் என்பது எல்லோரும் பயன்படுத்துகிற ஒரு நிகழ்வு . ஆக கூடத்தில் நீங்கள் எப்பொழுதுமே சுத்தமாக வைத்துக் கொள்வது நலம். கூடத்தில் நான்கு பக்கமும் நீங்கள் சோபாக்களை அமைத்துக் கொள்ளலாம். அப்படி அமைக்கின்ற பொழுது வடகிழக்கு சார்ந்த பகுதியில் மட்டும் தவிர்த்துக் கொள்வது நலம் என்று சொல்வேன்.நல்ல முறையில் ஹால் என்று சொல்லக்கூடிய கூடத்தை வாஸ்து முறையில் அமைத்து வளமான வாழ்க்கை வாழுங்கள்.
For English Translation:
In terms of Vastu, we call reception hall, hall, hall in various ways. But the real situation can be called Hall in English and Kudam in Tamil. In that way, if we say hall, we should take it as a place where family members gather. So the hall should be huge. When it is like that, the hall should not always be big in the north, north-east and east areas. Those halls are always the largest and grandest in the structure attached to the Brahmasthan, and that house is the house where yoga is practiced. The work for the hall is the place where all the people gather for the family. When it is said that a special event is happening in a house, it is seen as a place where everyone is doing that event. The shed itself is an important part of a house. There is a television set in that hall. Children study in a corner. Decorative items are kept in one place. Women at home will be in one area. Therefore, halls are only important as a place where everyone does many things, i.e. sitting and doing the work they are doing at that time. In that case, a shed can be a minimum of 10×16, 16×16, and a maximum of 30 feet by 22 feet in a house. Do not always pay for the storage of items in halls. You can also create a mirrored self-service system with shelves to store gifts and decorative items. The window system in the hall should be on the east side if it is an east direction hall and on the north side if it is a north direction hall. Why should it be on the south side if it is a south direction hall and if it is a west direction hall it should be on the west side only. The hall is functioning properly as a ventilation facility. It is best to arrange the hall in a proper manner as per Vastu rules. On the other hand, if you say that you are setting up a false ceiling in the hall, that false ceiling should be aligned with the north-east room. Building a milk ceiling only in that area will give Vastu offense. A few places will set up swings in the hall. It is good to avoid that swing thing. If there is no ventilation facility in the hall, air conditioner can be used liberally. At the same time, the fans can be arranged as one to four. A phenomenon that everyone uses is always the hall when there is extra. So it is good that you always keep the hall clean. You can arrange sofas on all four sides of the hall. I would say that it is good to avoid only the north-east area when setting up in such a way. Build a hall that can be called a hall in a good manner and live a prosperous life.
Vastu Tips For Hall,Vastu tips for living room,TV position in living room as per Vastu,living room in south-west vastu,Vastu tips for living room decoration,south-east living room vastu,living room in north-east vastu,living room in north-west vastu,Seating arrangement in living room as per Vastu,Living room Vastu for west-facing house,