Vastu For Well
கிணறு என்கிற ஒரு விஷயம் இன்று யாரும் எடுப்பது கிடையாது. கிணறு என்பதை தண்ணீர் மேலே இருக்கக்கூடிய பகுதிகளில் கிணறுகளை வெட்டுகிறார்கள். ஏற்கனவே கிணறு இருந்தால் அதனை விட்டு விடலாம் ஆனால் அது சரியான இடத்தில் இருக்க வேண்டும். அந்த வகையில் வாஸ்துபடி கிணறு எங்கு இருக்கலாம் என்று பார்க்கும் பொழுது ஒரு இடத்தில் வடகிழக்கு பகுதியில் வரவேண்டும். ஒரு தோட்டம் இருக்கிறது ஒரு இடம் இருக்கிறது ஒரு வீட்டுமனை இருக்கிறது என்று சொன்னாலே கிணறு வரக்கூடிய இடம் என்பது வடமேற்கு தென்மேற்கு தென்கிழக்கு எக்காரணம் கொண்டும் வரக்கூடாது. வரக்கூடிய இடம் என்பது வடகிழக்கு மட்டுமே. பறந்த இடமாக இருந்தால் தாராளமாக கிணறுகளை அமைத்துக் கொள்ளலாம். அப்படி கிணறுகளை அமைக்கும் பொழுது இந்த கிணறுகளின் சுவர்கள் என்பது பெரிய அளவில் இருக்க கூடாது அதாவது வீட்டின் தரைமட்டம் இருக்கின்றது அல்லவா அதற்கு மேலாக எக்காரணம் மட்டும் அந்த கிணறு சுற்றுச்சுவர் உயரமாக இருக்கக் கூடாது. தண்ணீர் சேந்துகிற அமைப்பாக ஒரு தூண் அமைப்பை ஏற்படுத்தி பெரிய அளவில் வடகிழக்கு பகுதியில் உயரமாக எப்பொழுதும் கிணறுகளை உருவாக்கக்கூடாது. இது நகர் பகுதியாக இருந்தாலும் சரி கிராம பகுதியாக இருந்தாலும் சரி இந்த விதி என்பது பொருந்தும். ஒரு பரந்த இடத்தில் கிணறுகள் இருக்கும் பொழுது உயரமாக இருந்தாலும் தவறு கிடையாது. அப்படி அந்த கிணறு இருந்தால் அந்த கிணற்றுக்கும் அந்த வீட்டிற்கும் ஒரு 300 அடிகள் தூரமாக இருக்க வேண்டும். அதேபோல ஏக்கர் கணக்கில் இருக்கிற இடங்களில் கிணறு தவறான இடத்தில் இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு வீடு இருந்தால் தவறு கிடையாது. அப்படி இருக்கின்ற இடத்தில் அந்த கிணறுக்கும் அந்த வீட்டிற்கும் ஒரு சுற்று சுவரை ஏற்படுத்தும் பொழுது இது தனி, அது தனி என்கிற ஒரு நிகழ்வுக்கு அது வந்துவிடும். ஆக கிணறுகளை எப்போதும் வாஸ்து முறையில் அமைப்பது சாலச் சிறந்தது.
A thing called a well is not taken by anyone today. A well means cutting wells in areas where water may be above the surface. If there is already a well it can be left but it should be in proper place. In that way, when looking at where the Vastupadi well can be, it should come at a place in the North-East. Saying that there is a garden, there is a place, there is a house, where a well can come, North-West, South-West, South-East should not be brought up for any reason. The only possible destination is the North East. If it is a remote area, wells can be set liberally. When constructing such wells, the walls of these wells should not be large, i.e. the height of the surrounding wall of the well should not be higher than the floor level of the house. Wells should never be built high up in north-east area with a pillar system as water harvesting system. This rule applies whether it is an urban or rural area. There is nothing wrong with having wells in a wide area even if they are high. If there is such a well, the distance between the well and the house should be 300 feet. Similarly, even if the well is in the wrong place in acres of land, it is not wrong if there is a house after a certain distance. In such a place, when a round wall is made between that well and that house, it will come to a phenomenon that this is separate and that is separate. So it is best to always arrange wells in Vastu style. Vastu For Well,Well in front of house Vastu,Well in west Vastu,Vastu for well position ,north-west well vastu,Vastu for closing well,south west well Vastu,Position of well as per Vastu tamil,Well in South Vastu, chennai vastu