Toilet Vastu Tips
ஒரு இல்லத்தில் வாஸ்துரீதியாக கழிவறை என்பது வீட்டில் இருக்கவே கூடாது என்று கூடச் சொல்லுவேன். ஏனென்று சொன்னால் பழங்காலத்தில் கழிவறைகள் என்பது புலக்கடை என்ற பெயரில் பின்புறத்தில் மல ஜலம் கழிக்கும் அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் கழிவறைகளை வீட்டிற்கு உள்ளே அமைத்துக் கொள்கிறார்கள். அப்படி அமைத்துக் கொள்கிற போது இன்றைய நவீன காலத்தில்யூரோப்பியன் ஸ்டைல் சொல்லக்கூடிய கழிவு பேசினை அமைக்க வேண்டும். இந்திய முறை என்று சொல்லக்கூடிய கழிவறை பேசின் அமைக்க வேண்டாம் என்று சொல்லுவேன். ஏனென்று சொன்னால் அதன் உயரம் அந்த கழிவறை பேசின் உயரம் கீழே இருக்கும் பள்ளத்திற்கு இணையாக வந்துவிடும். அதே சமயம் கழிவறை அமைக்கக்கூடிய இடம் என்று பார்க்கும் பொழுது ஒரு இல்லத்தில் மேற்கு சார்ந்த வடமேற்குக்கும் வடக்கு சார்ந்த வடமேற்க்கும் உகந்த இடங்கள். அதே சமயம் ஒரு அறைக்கு வடக்கு சார்ந்த வடமேற்கு, மேற்கு சார்ந்த வடமேற்கு பகுதியில் வரலாம். அந்த அறை தென்மேற்கு படுக்கை அறைக்கும் பொருந்தும். ஒரு சில இடங்களில் தென்கிழக்கு பகுதியில் கூட அமைப்பார்கள். அப்படி அமைக்கின்ற பொழுது அதன் பலன் என்பது இரண்டாம் கட்டத்தில் தான் இருக்கும் இருந்தாலும் வேறு வழி இல்லை என்று சொன்னால் அமைத்துக் கொள்ளலாம். அப்படி அமைக்கின்ற அந்த கழிவறை தரைத்தளம் என்பது வாஸ்து ரீதியாக பள்ளமாக வந்து விடக்கூடாது . அந்த அறையின் எந்த அறையில் இருந்து கழிவறைக்கு செல்கின்றோமோ அந்த அறையின் உயரத்திற்கு தகுந்தார் போல தரைத்தளத்தை அமைத்துக் கொள்வது சாலச்சிறந்தது. அதேபோல கழிவறையின் வாசல்கள் உச்சத்தில் இருக்க வேண்டும். தவறான அமைப்பில் எதிர்மறை இடத்தில் கழிவறையின் வாசல்களை வைக்கக்கூடாது. அதேபோல கழிவறைக்கு வெண்டிலேட்டர் ஏற்படுத்தியிருப்பார்கள். அந்த வெண்டிலேட்டர் இடம் கூட உச்சத்தில் வரவேண்டும். உச்சம் என்று சொன்னால் மேற்கு பகுதியில் வடக்கு பகுதி உச்சம் வடக்கு பகுதிக்கு கிழக்கு பகுதி உச்சம் இதனை பொறுத்தி கொண்டு ஒரு கழிவறை பொறுத்திக் கொள்வது நலம். ஆக கழிவறை என்பது எதிர்மறை பலனை கொடுக்கக்கூடிய இடம் தான். அதனை முறைப்படி சரியாக அமைக்கும் போது அதன் எதிர்மறை பலன்களை குறைக்கும் விதமாக வாஸ்து ரீதியாக பொருத்திக் கொள்வது நலம்.
I would even go as far as to say that architecturally the toilet in a house should not be in the house at all. Why? In ancient times, toilets were built in the back of the toilet in the name of market stalls. But in today’s modern era, toilets are built inside the house. When setting up like that, you should set up a waste basin that can be said to be European style in today’s modern era. I would say don’t install a toilet basin that can be called Indian style. If you say that its height will be parallel to the bottom of the toilet basin. At the same time, when looking at the place where the toilet can be set up, the best places in a house are West North-West and North North-West. At the same time, a room can come from North North West, West North West. That room is suitable for south-west bedroom as well. In a few places they will also set up in the south-east region. When it is set like that, its benefit is only in the second stage, but if there is no other option, it can be set. The floor of the toilet which is constructed in such a way should not become a hollow in terms of architecture. It is best to arrange the floor according to the height of the room from which the toilet is going. Similarly, the doors of the toilet should be at the top. Do not place the doors of the toilet in negative space in the wrong setting. Similarly, they would have installed a ventilator for the toilet. That ventilator space should also come at the top. If you say peak, the northern part is the peak in the western part, the eastern part is the peak in the northern part, and it is good to have a toilet. So the toilet is a place that can give negative results. It is good to fit it Vastu wise to reduce its negative effects when it is set properly.
Toilet Vastu Tips,Toilet vastu tips south facing,Vastu for toilet seat facing direction,Vastu for attached bathroom and toilet in bedroom,Toilet vastu tips east facing,Toilet seat facing east remedies,Toilet in west,direction as per Vastu,Vastu remedies for toilet in north direction, chennai vastu