Study Room Vastu Tips / படிக்கும் அறை வாஸ்து

Study Room Vastu Tips

ஒருவர் பெறுகின்ற கல்வி என்பது ஏழு தலைமுறைக்கு வரும் என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லி இருக்கின்றார்கள். ஆக ஒருவர் கல்வியை  பெற்றுக் கொண்டால் அவர்களின் அடுத்த ஏழு தலைமுறைக்கு கல்வி தொடர்ந்து வரும். அந்த வகையில் அற்புதமான கல்வியை கொடுக்கக்கூடிய, முதல் தரமான கல்வியை கொடுக்கக்கூடிய இடமாக வீட்டில் ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னாலே அது வடகிழக்கு. வடகிழக்கு என்று சொன்னாலே ஈசனுக்குரிய பாகம் என்று நாம் சொல்கின்றோம். அப்படிப்பட்ட அந்த இடத்தில் வடக்கு பார்த்தோ கிழக்கு பார்த்தோ, 10 அடிக்கு 10 அடி, எட்டு அடிக்கு 10 அடி , 10 அடிக்கு 16 அடி அளவில் பெரிய அளவு உள்ள வீடுகளில் படிக்கும் அறையை ஏற்படுத்தலாம். அந்த அறையில் உங்களுடைய இல்லத்தின் சிறிய அலுவலகமாக கூட செயல்படுத்தலாம். அப்படிப்பட்ட அந்த அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்கும் பொழுது படிக்கின்ற புத்தகங்களை மட்டும் அடுக்கி வைக்கவும் அதாவது, உங்களுடைய குழந்தைகளின் உயர்நிலைக் கல்வி, நடுநிலை கல்வி, ஆரம்ப கல்வி அதே போல மேல்நிலைக் கல்வி, கல்லூரி சார்ந்த படிப்பு, கல்லூரியின் மேல்நிலைப் படிப்பு சார்ந்த புத்தகங்களை மட்டும் அடுக்கி வைக்கக் கூடிய ஒரு செல்ப் தெற்கு புறத்திலும் மேற்கு புறத்திலும் அமைத்துக் கொள்ளுங்கள். பெண் குழந்தைகளை வடக்கு பார்த்தும், ஆண் குழந்தைகளை கிழக்கு பார்த்தும் அந்த அறையில் படிக்க வையுங்கள். உங்களுக்கென்று ஒரு அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்று சொன்னால் பெரிய கனமில்லாத சிறிய அளவில் ஒரு பேஜை நாற்காலி அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஆக நீங்கள் பொது நிலையில் படிக்கிற சமூக புத்தகங்களை அந்த அறையில் அடுக்கி வைக்க வேண்டாம். அதற்கென்று வேறு ஒரு அறையை பயன்படுத்திக் கொள்ளவும். நீங்கள் அப்படி படிக்க வேண்டும் என்று சொன்னால் குழந்தைகளின் படுக்கை அறையாக மட்டும் இருக்கட்டும். நீங்கள் அறிவு வளர்த்துக் கொள்ள பொழுதுபோக்குக்காக படிக்க நீங்கள் சாதாரணமாக வரவேற்புரைகளிலே படிக்கலாம். ஆக ஒரு இல்லத்தில் படிக்கும் அறை இருக்கும் பொழுது மிகுந்த யோகத்தை செய்கிற மிகுந்த உயர் நிலையில் படிக்கிற மாணவர்களை மாணவிகளை உருவாக்குகிற ஒரு இல்லமாக நிச்சயமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அது சரியான முறையில் படுக்கையறை அமைத்து வாஸ்துவின் துணையோடு வளமாக வாழுங்கள்.

Study Room Vastu Tips,Study room Vastu pictures,Vastu tips to increase concentration in studies,Things to be kept in study room Vastu,Study room Vastu for competitive exams,Study room Vastu direction,Study room in north west Vastu,Best direction to study for competitive exams,chennai vastu

It is said by Valluva Parundha that the education one gets is passed on to seven generations. So if one gets education then education will continue to their next seven generations. If you say that there is one place in the house that can give wonderful education, first class education, it is North East. When we say North-East, we mean the right part. In such a place facing North or East, study room can be made in large size houses measuring 10 feet by 10 feet, eight feet by 10 feet, 10 feet by 16 feet. That room can even function as a small office of your home. When stacking the books in such a room, stack only the books that you are reading i.e., set up a shelf on the south side and the west side where you can stack only the books of your children’s high school education, middle school education, primary education as well as high school education, college related studies, and college related books. . Make girls study in that room facing north and boys facing east. If you want to set up an office for yourself, make a small, lightweight, page chair arrangement. So don’t stack the social books you read in public in that room. Please use another room for that. If you want to study like that, let it be the children’s bedroom. You can usually read in salons to read for fun to develop your knowledge. So there is no alternative opinion that when there is a study room in a house, it will definitely be a house that produces students who study at a very high level and do a lot of yoga. Make your bedroom the right way and live a prosperous life with the help of Vastu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!