Store Room Vastu
ஒரு இல்லத்தில் பொருள்களை வைக்கிற அறை என்பது இடம் இருக்கும் போது மிக மிக முக்கியம். அந்த வகையில் அதனை ஆங்கிலத்தில் ஸ்டோர் ரூம் என்று கூட நாம் சொல்லுவோம். அந்த வகையில் உணவு பண்டங்கள் மற்றும் எப்போது ஆவது நாம் பயன்படுத்துகிற பொருள்கள், திருவிழாக்களுக்கு மட்டும் பயன்படுத்துகிற பாத்திரங்கள் போன்றவற்றை வீடு முழுக்க நாம் வைக்கும் பொழுது வீட்டின் அழகு என்பது கொஞ்சம் குறையும். அப்படி வைக்காது ஒரு தனி அறையில் வைத்து மறைமுகமாக வைக்கிற ஒரு அறை தான் ஸ்டோர் ரூம் ஆகும்.வாஸ்து ரீதியாக ஒரு இல்லத்தில் மேற்கு சுவரையும் தெற்கு சுவரையும் தொட வேண்டும் . அதாவது மேற்கு சுவரை ஒட்டியோ தெற்கு சுவரை ஒட்டி மட்டுமே இருக்க வேண்டும். வேறு இடங்களில் கொடுக்கும் போது வாஸ்து வகையில் குற்றமாக இருக்கும். எப்பொழுதுமே கிழக்கு வடக்கு திசைகளில் உள்ள சுவர்களை தொடக்கூடாது. அந்த அறையில் கட்டுகிற செல்ப் , தடுப்பு , ஸ்லாப், அலமாரி போன்ற வகைகள் அதிகபட்சமாக 2 அடிக்கு உள்ளாக, குறைந்தபட்சமாக ஒரு அடிக்கு உள்ளாக அதன் அகலம் இருக்க வேண்டும். உயரம் என்பது தரைத்தளத்தில் மூன்றடிக்கு மேலாகவும் தரைத்தளத்தில் இருந்து மேலாக ஏழடி மட்டம் வரையிலும் அமைத்துக் கொள்ளலாம். பெரிய அரிசி மூட்டைகள் தரையிலும், பெரிய பாத்திரங்களை ஏழடி மட்டத்திற்கு மேலான லாப்ட்டிலும் கீழே 3 அடிக்கு கீழாக இருக்கிற திறப்புகளிலும் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். ஆக வாஸ்து ரீதியாக பொருள் வைக்கும் அறை என்பது வாஸ்து விதியோடு பொருந்த வேண்டும். ஒரு சில மக்கள் சமையல் அறைக்கு வடகிழக்கில் கொடுப்பார்கள். அந்த மாதிரி கொடுக்கின்ற பொழுது வாஸ்து ரீதியாக தவறாக முடித்து விடும். அந்த தவறுகளை ஸ்டோர் ரூம் விசயத்தில் செய்யக்கூடாது. ஸ்டோர் ரூம் சார்ந்த விஷயங்கள் எப்பொழுதுமே அது காற்றோட்டம் குறைவாக இருக்கிற அமைப்பில் அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.ஏன் என்று சொன்னால் உணவு சார்ந்த பொருட்களை வருட கணக்கு வைக்கின்ற பொழுது காற்று புகாத இடமாக இருக்கும் பொழுது அந்த இடத்தில் அந்த பொருளின் தன்மை அவ்வளவு சீக்கிரத்தில் கெடாத சூழ்நிலைக்கு அது தள்ளப்பட்டு நல்லதாக இருக்கும். எப்பொழுதுமே அந்த இடம் பொருள்களை கெட்டு போகாத தன்மைக்கு வைத்திருக்க வேண்டும்.அதனால் அந்த அறைக்கு எப்பொழுதுமே கதவு என்பது இருப்பது சாலச் சிறந்தது.
A storage room in a home is very important when it comes to space. In that way we will even call it store room in English. In that way, the beauty of the house will decrease a little when we keep food items and things that we use every now and then, utensils that are used only for festivals, etc. A store room is a room that is not kept in a separate room and hidden. Architecturally, the west wall and the south wall should touch in a house. That means it should be adjacent to the west wall or south wall only. If given elsewhere it will be offensive in terms of Vastu. Never touch the walls in East North direction. The types of shelves, blocks, slabs, shelves etc. that are built in that room should be maximum within 2 feet and minimum within one foot of its width. The height can be set from three feet above ground level and up to seven feet above ground level. Large sacks of rice can be placed liberally on the floor, and large vessels in lofts above the seven-foot level and in openings 3 feet below. So Vastu wise the storage room should be in accordance with Vastu rules. A few people will give the kitchen in the northeast. When given in such a way, it will end up wrong in terms of Vastu. Don’t make those mistakes in the store room. It is always better to set things related to the store room in a system where there is less ventilation. Why is it that when the food products are kept in an air-tight place, it is better to put them in a situation where the quality of the product does not deteriorate so quickly. The place should always keep things from spoiling, so it is best to always have a door to that room.