Pooja Room Vastu / பூஜை அறை வாஸ்து

Pooja Room Vastu

மனம் சங்கடப்படுகின்ற போது, மனம் குழப்பம் அடைகின்ற பொழுது ஒரு இல்லத்தில் நமக்கு துணையாக இருக்கிற விஷயம் ஒரு ஐந்து சதவீதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் வீட்டில் இருக்கிற பூஜை அறை பிரேயர் அறை நமக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம். மனம் குழப்பமாக  இருக்கின்ற பொழுது நாம் ஒரு தியானம் செய்வதற்கு கூட தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு கூட ஒரு அறை தேவைப்படுகிறது என்று சொன்னால் அது பூஜை அறை என்று சொன்னால் மிகை ஆகாது. அந்த வகையில் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் என்னுடைய தாய் மதமான இந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அல்லது, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மக்களாக இருந்தாலும் கூட ஒரு பூஜை அறை என்கிற ஒரு விஷயம் இருந்தால் மிக மிக நல்லது. அந்த வகையில் அப்படிப்பட்ட பூஜையறை என்பது வாஸ்து ரீதியாக ஒரு இல்லத்தில் வடகிழக்கும் தென்மேற்கும் வரவே கூடாது. சைவ உணவு மக்களாக இருந்தால் தாராளமாக சமையல் அறையிலேயே பூஜை அறையை ஒரு செல்ப் அமைப்போடு ஏற்படுத்திக் கொள்ளலாம் இல்லை என்று சொன்னால் இல்லத்தின் தெற்கு பகுதியிலும், இல்லத்தின் மேற்கு பகுதியிலும், இல்லத்தின் வடமேற்கு பகுதிகளும், இல்லத்தின் வடக்கு பகுதியிலும், இல்லத்தின் கிழக்கு பகுதியிலும், இல்லத்தின் தென்கிழக்கு பகுதியிலும் தாராளமாக பூஜை அறையை அமைத்துக் கொள்ளலாம். பூஜை அறையில் சீரான வெளிச்சம் இருக்குமாறு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ரெகுலராக ஒரு குறைந்த அளவு வெளிச்சமோ நாம் அந்த அறைக்கு செல்கின்ற பொழுது வெளிச்சம் அதிகமாக இருக்கின்ற அமைப்பாக ஒரு வெளிச்சமும் இருப்பது போல ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஆக பூஜை அறையில் ஒரு சில மக்கள் பால் சீலிங் அமைப்பார்கள். அது தேவையில்லை என்று கூடச் சொல்லுவேன்.  மாடி மேலே நடந்தால் கால்  பூஜையறை மேல்  படும் என்று சொல்லுவார்கள். அதனால் ஒரு தளம் தாழ்ந்த அமைப்பு ஏற்படுத்துக்கலாம் என்று கூட சொல்லுவார்கள் அதை நான் தேவையில்லை என்று கூட சொல்லுவேன். அதே சமயம் கழிவறை ஒட்டியும் பூஜை அறை தாராளமாக இருக்கலாம். ஒரு சில மக்கள் கழிவறை பின்புறத்திலும் முன்புறத்தில் பூஜை அறையில் இருந்தால் தவறு என்று சொல்வார்கள். அப்படி இருந்தாலும் கூட 100% பூஜை அறை சார்ந்த விஷயத்தில் தவறு கிடையாது அதற்கென்று தனி சுவர் இருக்கின்ற காரணத்தால் அது அந்த பக்கம் இருக்கிறது பூஜை அறை இந்த பக்கம் இருக்கிறது என்று நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் பூஜை அறை சார்ந்த ஒரு அறையை படிகளுக்கு கிழே மட்டும் அமைக்க வேண்டாம் இதை கவனத்தில் கொண்டு ஒரு பூஜை அறையை அமைக்கும் பொழுது மிகுந்த யோகத்தை செய்கிற பூஜை அறையாக இருக்கும்.

Pooja Room Vastu

When the mind is troubled, when the mind is confused, if we say that we should take five percent of the things that support us in a house, then we can say that the prayer room and prayer room in the house play an important role for us. It is not an exaggeration to say that when the mind is confused, we need a room to isolate ourselves even for meditation. In that way, it is very good if people belong to any religion, whether they belong to my mother religion, Hinduism, Christianity, or Islam. In that way, such a puja room should never come in north-east and south-west in a house according to Vastu. If you are a vegetarian, you can easily set up a pooja room in the kitchen with a cell, if not, you can set up a pooja room in the southern part of the house, in the western part of the house, in the north-western part of the house, in the northern part of the house, in the eastern part of the house, and in the south-eastern part of the house. Make sure there is even lighting in the pooja room. Make sure that there is a low level of light on a regular basis or a light setting that is high when we go to that room. So a few people will set up a milk ceiling in the pooja room. I’d even say it’s not necessary. They say that if you walk upstairs, your feet will fall on the floor of the prayer room. So they will say that a platform can create inferior structure and I will say that it is not necessary. At the same time, the puja room adjacent to the toilet can be generous. Some people say that it is wrong if the toilet is in the back and in the front of the pooja room. Even so, there is no fault 100% in the case of the pooja room, because there is a separate wall for it, it is on that side and you have to assume that the pooja room is on this side. At the same time, don’t build a room related to the puja room just below the steps, keeping this in mind when setting up a puja room, it will be a puja room that does a lot of yogam.

Pooja Room Vastu ,which direction should god face in pooja room?,Pooja room Vastu direction,Pooja room Vastu east facing house,Window in pooja room Vastu,Pooja room Vastu for north facing house,Pooja room Vastu size,Vastu for pooja room in duplex house,Vastu for pooja room in flats,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!