Nearest House Vastu

பக்கத்து இடத்தில் இருக்கிற பக்கத்து மனைகள்  மற்றும் அங்கு இருக்கிற கிணறு, போர் செப்டிக் டேங்க் சார்ந்த விஷயங்கள் ஒரு சில இடங்களில் குற்றமாக இருக்கும். அந்த வகையில் அந்த குற்றங்களை தடுக்க வாஸ்து ரீதியாக ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு கட்டிடத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் தடுப்பு என்பது வேண்டும். தனக்கென்று ஒரு தடுப்பு சுவராக சுற்றுச்சுவர் என்பது வேண்டும் . ஆக இல்லாது அமைக்கின்ற பொழுது வாஸ்து வகையில் குற்றமாக முடிந்துவிடும். ஒரு சில இடங்களில் அப்படி சுற்றுச்சுவர் அமைக்க முடியவில்லை என்று சொன்னால் நம்முடைய கட்டிடத்திலேயே தனிப்பட்ட முறையில் ஒரு அறையை கட்டும் பொழுது அது ஓரளவுக்கு வாஸ்து வகையில் உதவி செய்யும். சுற்றுச்சுவரை கடந்து ஒரு சில இடத்தில் இருக்கிற போர்வெல் தண்ணீர் தொட்டிகள் பெரிய அளவில் குற்றத்தை கொடுக்கக் கூடாது என்று ஒருவர் நினைத்தால், காம்பவுண்ட் சுவரை தொட்ட அமைப்பில் ஒரு கட்டிடத்தை கட்டிக் கொள்ளலாம் தவறு கிடையாது. அது ஒரு சில இடங்களில் பக்கத்து இல்லத்தின் தண்ணீர் தொட்டியையும், ஆழ்துளை கிணறை தடுக்கிற விதமாக செயல்படும். அது வாஸ்து வகையில் நன்மையை தான் கொடுக்கும். அதே சமயம் வாஸ்து விதிகளின்படி சுற்றுச்சுவருக்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் சதுரம் செவ்வகம் என்கிற விதி வராது.இந்த விதி  இல்லை என்றாலும் பெரிய அளவில் வாஸ்து சாஸ்திர அமைப்பின் படி தவறு கிடையாது.

Neighboring plots and wells and septic tanks are a crime in some areas.  In that way, to prevent those crimes, Vastu means prevention in every house, every building and every house.  A perimeter wall should be a barrier in itself.  When it is constructed without it, it becomes a crime in terms of Vastu.  If it is said that in some places it is not possible to build such a surrounding wall, when we build a private room in our building, it will help to some extent in terms of Vastu.  If one thinks that the borewell water tanks at a few places beyond the perimeter wall should not give a lot of offence, then there is nothing wrong with constructing a building in the structure touching the compound wall.  It also acts as a block to the water tank of the neighboring house and the borehole in some places.  It will give benefits in terms of Vastu.  At the same time, according to the rules of Vastu, the area between the surrounding wall and the house does not have the rule of square or rectangle. Although this rule does not exist, it is not wrong according to the Vastu Shastra system.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!