Dining room Vastu
வாஸ்து சார்ந்த வகையில் உணவு உண்ணுகிற அறை என்பது ஒரு மனிதனுக்கு அன்றாட நிகழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது . அந்த வகையில் உணவு உண்ணும் அறைகள் என்பது நடுத்தரத்திற்கு மேலாக இருக்கிற வீடுகளில் மட்டுமே உணவு உண்ணுகிற அறை இருக்கின்றது . அதே சமயம் சிறிய வீடுகளில் உணவு உண்ணுகிற இடம் என்பது ஒரு இல்லத்தில் கிழக்கு சார்ந்த பகுதிகளும் தெற்கு சார்ந்த பகுதிகளும் வைத்துக் கொள்ளலாம்.அல்லது தரைத்தளத்திலேயே அமர்ந்து உணவு உண்ணலாம். ஒருவேளை உணவு அறை என்பது வேண்டுமென்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் குறைந்தபட்ச அறை என்பது தேவையில்லை என்று சொல்லுவேன். எப்பொழுதுமே குறைந்தபட்சம் உணவு அறையாக 10 அடிக்கு 16 அடிகள் என்பது வேண்டும். அதற்கு மேல் எவ்வளவு உணவு அறை பெரிதாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு நன்மையை கொடுக்கும் என்று சொல்லுவேன். அல்லது உணவு உண்ணும் அறையை தனியாக வைக்காமல் வரவேற்பு அறையில் சேர்த்து பெரிய அளவில் அதாவது 20 அடிக்கு 30 அடிகள் வீதமோ, 16 அடிக்கு 30 அடிகள் வீதமோ மொத்தமாக அமைக்கும் பொழுது அது ஒரு விதமான யோகத்தை செய்கிற அறையாக வாஸ்து வகையில் இருக்கும். உணவு உண்ணும் அறையில் அந்த மேஜை என்பது வட்ட வடிவில் இல்லாது சதுர வடிவில் இருக்க வேண்டும். உணவு உண்ண சீனக் களிமண்ணால் ஆன பாத்திரங்களை பயன்படுத்துவது நலம். அது மண் சார்ந்த நிகழ்வுகளில் யோகத்தை கொடுக்கும். எப்பொழுதுமே உணவு உண்ணுகிற நிகழ்வு என்பது பாதி உணவும் கால்பங்கு தண்ணீரும், கால்பங்கு காலியாகவும் வைக்க வேண்டும். காலை எழுந்தவுடன் முதலில் தண்ணீரை குடிக்க வேண்டும். உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக பழங்கள் சாப்பிடுவது நலம். உணவு எடுக்கும் போது எப்பொழுதுமே கேரட் வெள்ளரி வெண்டைக்காய் போன்றவற்றை பச்சையாக ஒன்று அல்லது இரண்டு சாப்பிடலாம். கால் வலி கை வலி உள்ள மக்கள் தினமும் கொத்தவரங்காய் பச்சையாக ஓரிரு காய்களை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு உணவு என்பது நான்கு வேலைகளாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக அருந்துவது நலம். இல்லை என்று சொன்னால் இரண்டு வேளைகள் மட்டும் உணவு எடுப்பது நலம். ஒரு நாளைக்கு ஒரு மனிதர் வெயிலில் செல்லாதவர்கள் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். வெயிலில் செல்கிறவர்கள் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மாதத்தில் ஒரு நாள் உண்ணாமல் இருக்க வேண்டும். பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும் என்கிற குறிக்கோளோடு வாழும் பொழுது வைத்தியம் நமக்கு தேவையில்லை . ஆக உணவு அறை என்பது நல்ல வெளிச்சமாக காற்று வருகிற அமைப்பாக இருக்க வேண்டும். வாஸ்து வகையில் காற்று உள்ளே புகுவது தான் உணவு அறைக்கு நல்லது.
According to Vastu, the dining room plays an important role in the daily life of a human being. In that sense, dining rooms are only in upper middle class houses that have dining rooms. At the same time, the eating place in small houses can be kept in the eastern and southern parts of a house, or you can sit on the ground floor and eat. Perhaps if you say dining room is necessary then I would say minimum room is not necessary as far as I am concerned. Always have a minimum dining room of 10 feet by 16 feet. Moreover, I would say that the bigger the dining room, the better it will be. Or if the dining room is not kept separately and is added to the reception room in a large size, i.e. 20 feet by 30 feet, or 16 feet by 30 feet, it will be a kind of yoga room in Vastu style. The table in the dining room should be square rather than round.It is better to use Chinese clay utensils for eating. It gives yoga in earthy cases. A regular feeding practice is to keep half food and one quarter water and one quarter empty. Drink water first thing in the morning when you wake up. It is good to eat fruits one hour before meals. Always eat one or two raw vegetables such as carrots, cucumbers, and fenugreek with meals. People suffering from leg pain and hand pain can eat one or two pods of coriander raw daily. It is better to divide food into four meals a day and drink little by little. If you say no, then it is better to take only two meals. A person who does not go out in the sun should drink two and a half liters of water per day. People who go out in the sun should drink five liters of water. One day in a month should not be eaten. We don’t need medicine when we live with the goal of eating only when we are hungry. So the dining room should be well lit and ventilated. In terms of Vastu, air inflow is good for the dining room. Dining room Vastu,Glass top dining table Vastu,Dining table placement Vastu,Where to place dining table in living room,Marble top dining table Vastu,dining room in north-east vastu,Vastu for dining table shape,dining room in south-east vastu,Round dining table Vastu,