ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
chatgpt #AI #Deepseek-Coder finetune #geminiai Vastu@Chennai
Vastu@chengalpattu
Vastu@Kanchipuram
Vastu@Tiruvallur
தினசரி நாள்காட்டி 24 .2.2025 குரோதி வருடம் மாசி மாதம் 12 ந் தேதி. திங்கட்கிழமை. மதியம் 1.47 வரை ஏகாதசி பிறகு தே த்வாதசி. மாலை 6.46 வரை பூராடம் பிறகு உத்திராடம் நட்சத்திரம். யோகநாள் குறைவு. சந்தரஷ்டமம் : .மிருஹசீரிசம் ரோகிணி
ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm
இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice :
வாஸ்துவில் முதல் அடிப்படை விதியாக இருக்கிற விஷயம் வாசல்கள் என்று சொன்னாலே உச்சம் என்பது மட்டுமே. இதில் ஜோதிடம் சொல்லுகிற மக்கள் புதன் வாசல் என்று சொல்வார்கள். 100% இந்த விஷயங்களை வாஸ்து உள்ளே கொண்டு வர வேண்டிய அவசியம் கிடையாது. இதனைத் தான் வாஸ்து பார்க்கிற அழைக்கிற மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி வாஸ்து சொல்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆக யாரை சந்திக்கிறோமோ அவர்களால் தான் நல்ல வாஸ்து என்பது ஒருவருக்கு கிடைக்கும். அந்த வகையில் உச்சம் நீச்சம் என்பது பெரிய கம்ப சூத்திரம் என்பது கிடையாது. எல்லா பாதைகளும் ஈசானிய மூலை என்று சொல்லக்கூடிய சொல் வழக்கில் சனிமூலை என்று சொல்லக்கூடிய வடகிழக்கு பகுதியில் வந்து மோதும். அதாவது கிழக்கிலிருந்து வந்தாலும் சரி வடக்கிலிருந்து வந்தாலும் சரி, தெற்கிலிருந்து வந்தாலும் சரி, மேற்கிலிருந்து வந்தாலும் சரி, நேராக ஈசானிய மூலையில் உட்கார வேண்டும். அதாவது வந்து சேர வேண்டும். இப்பொழுது சென்னை நோக்கி செல்கிறோம் என்று சொன்னால் புனித ஜார்ஜ் கோட்டை கோட்டைக்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் வேலூரில் இருந்து வந்தாலும் சரி, திருச்சியில் இருந்து வந்தாலும் சரி வடக்கே கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்தாலும் சரி, தெற்கே மாமல்லபுரத்தில் இருந்து வந்தாலும் சரி, எல்லா பாதைகளும் ஒரே இடத்தில் வந்து சேரும். அதுபோல ஒரு இடத்திற்கு எங்கிருந்து வந்தாலும் அதை ஈசான பகுதியில் வந்து சேரும். ஆக அப்படி உள்ளே ஒரு மனைக்கு வருகின்ற பொழுது அந்த இடத்தில் எங்கே நுழைகிறோமோ, அந்த இடங்களில் வாசலை வைத்துக் கொள்ளலாம் இதுதான் உச்சம். இதை தெரிந்து கொண்டால் போதும் . வேறு எந்த வாஸ்து விஷயங்களும் வாசல்களுக்கு தேவை கிடையாது.
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995
