Bath Room Vastu
ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் அதிகபட்சமாக தண்ணீரை விரயம் செய்வது தவறு. அந்த வகையில் ஒரு இல்லத்தில் எதிர்மறை நிகழ்வை வைத்திருக்கும் இடமாக குளியல் அறை தான் இருக்கின்றது. காரணம் என்னவென்று சொன்னால் அந்த குளியல் அறையில் தான் அதிகமான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு மனிதன் குளிக்க வேண்டும் என்று சொன்னால் இரண்டு வேளைக்கு என்று பார்க்கும் பொழுது 150 லிட்டர் தண்ணீரை ஒருவர் உபயோகிக்கின்றார். வீட்டில் நான்கு நபர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னால் அறுநூறு லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு விரையம் ஆகிறது என்று கூட சொல்லலாம். அப்படியே விரயம் ஆனாலும் நம்மை சுத்தப்படுத்துகிற நிகழ்வை இந்த தண்ணீர் வைத்திருக்கிறது என்றும் நான் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு குளியலறை என்பது சுத்தமாக சுகாதாரமாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் பணம் சார்ந்த வெற்றி என்பது கூட கிடைக்கும். குளியலறை எவ்வளவு சுத்தமாக ஒரு இடத்தில் இருக்கிறதோ அந்த அளவிற்கு மற்ற அறைகள் அதனை விட மிகவும் சுத்தமாக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளலாம் . ஆக வாஸ்து ரீதியாக குளியலறைக்கு ஏற்ற இடம் என்பது ஒரு இல்லத்தில் வடமேற்கு பகுதியும் தென்கிழக்கு பகுதியும் உகந்தது. அதே சமயம் குளியலறை அளவு என்பது கூட ஒரு இடத்தில் ஆறுக்கு ஆறாகவும் பத்துக்கு எட்டாகவும் இருக்கலாம். மிகப்பெரிய அளவில் குளியலறை அமைக்கின்ற பொழுது கூடவே இரண்டு விதமான குளியல் அறைகளை பொறுத்திக் கொள்ளலாம். அதாவது காய்ந்த அமைப்பாகவும் ஈரப்பதமான ஒரு அமைப்பாகவும் ஆக எதனை எங்கு அமைக்க வேண்டும் என்கிற நிகழ்வை பொருத்தி அமைத்துக் கொள்வது நல்லது. ஒரு சில இடங்களில் அது வாஸ்து ரீதியாக மக்கள் விரும்புகிற அமைப்பை அமைக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கும் என்று கூட சொல்வார்கள். குளியலறை எப்பொழுதுமே தண்ணீர் வலிந்து ஓடுகிற நிலையிலும், மற்றொரு அறை தண்ணீர் வெளியில் வராத அமைப்பாகவும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.அடுத்து மிக மிக முக்கியமாக குளியல் அறையின் தரைத்தளமும் வெளி அறைகளின் தரைத்தள அளவுகளும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். ஏன் என்றால் தண்ணீர் வெளியே செல்வதற்காக ஓரிரு அங்குலங்கள் மட்டும் இறக்கி வைத்துக் கொள்ளலாம். மற்றபடி பெரிய அளவில் பள்ளமாகவோ பெரிய அளவில் உயரமாகவோ இருக்கக் கூடாது.ஆக குளியலறை சரியான முறையில் வாஸ்து இணைத்து அமைத்துக் கொள்ளும் பொழுது ஒரு இல்லத்தில் வாஸ்துவின் பலன்கள் ஒரு 30 சதவீதம் கூடும் என்று சொல்லலாம்.
Bath Room Vastu,Vastu for toilet seat facing direction,Bathroom vastu remedies,Vastu for attached bathroom and toilet in bedroom,East-facing house bathroom Vastu,Toilet in west direction as per Vastu,Bathroom vastu south facing,Toilet seat facing east remedies,Vastu remedies for toilet chennai vastu
It is wrong to waste maximum amount of water in one’s lifetime. In that sense, the bathroom is the place to hold negative events in a home. The reason is that more water is discharged in the bathroom itself. If a person is told to take a bath, he uses 150 liters of water when he sees that it is for two meals. If we say that there are four people in the house, we can even say that six hundred liters of water is consumed per day. I must also understand that this water holds the phenomenon of cleansing us even though it is wasted. Thus a bathroom must be clean and hygienic only then can financial success be achieved. As clean as the bathroom is in one place, it can be assumed that the other rooms will be much cleaner than that. So Vastu wise location for bathroom is North West and South East in a house. At the same time bathroom size can also be six by six and ten by eight in one place. Even when constructing a large bathroom, you can consider two types of bathrooms. That is, it is better to set up what is to be set up as a dry setting and a humid setting depending on the event. In some places they would even say that it would be a situation where it would not be possible to build a structure that people wanted architecturally. The bathroom should always be in a state where the water is flowing and another room should be a system where the water does not come out. Next, most importantly, the floor of the bathroom and the floor of the outer rooms should be at the same height. Because you can only lower it a couple of inches to let the water out. Otherwise, there should not be a large depression or a large height. Therefore, when the bathroom is properly arranged by Vastu, it can be said that the benefits of Vastu in a house will increase by 30 percent.